வெள்ளி (தனிமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஐசோடோப்புகள்: பராமரிப்பு using AWB
வரிசை 72:
இயற்கையாகத் தோன்றும் வெள்ளியில் <sup>107</sup>Ag மற்றும் <sup>109</sup>Ag, 109Ag என்ற இரண்டு நிலையான ஐசோடோப்கள் உள்ளன. <sup>107</sup>Ag ஐசோடோப்பு இயற்கையில் சற்று அதிகமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட தனிமவரிசை அட்டவணையில் அரிதாகவே இந்த அளவுக்கு அதிகமாக இயற்கையில் கிடைக்கும் ஐசோடோப்புகள் உள்ளன. இதன் அணு எடை 107.8682(2) அணுநிறை அலகுகளாகும்<ref name=IUPAC>{{cite web|accessdate = 11 November 2009|url = http://www.chem.qmul.ac.uk/iupac/AtWt/index.html|title = Atomic Weights of the Elements 2007 (IUPAC)}}</ref><ref>{{cite web|accessdate = 11 November 2009|url = http://physics.nist.gov/cgi-bin/Compositions/stand_alone.pl?ele=&ascii=html&isotype=some|title = Atomic Weights and Isotopic Compositions for All Elements (NIST)}}</ref>. வெள்ளி சேர்மங்களில் இந்த அளவு மிகமுக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக ஆலைடுகளின் எடையறி பகுப்பாய்வில் இந்த அளவு முக்கியமாகக் கருதப்படுகிறது. இரண்டு ஐசோடோப்புகளும் விண்மீன்களில் எசு-செயல்முறையிலும் மீயொளிர் விண்மீன்களில் ஆர்-செயல்முறையிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன<ref name="Cameron">{{cite journal | last1 = Cameron |first1 = A. G. W. | year = 1973 | title = Abundance of the Elements in the Solar System | url = https://pubs.giss.nasa.gov/docs/1973/1973_Cameron_ca06310p.pdf | journal = Space Science Review | volume = 15 | pages = 121–146 | doi = 10.1007/BF00172440 | bibcode = 1973SSRv...15..121C }}</ref>.
 
வெள்ளி தனிமத்தைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 28 வகையான கதிரியக்க ஐசோடோப்புகள் விவரிக்கப்படுகின்றன. இவற்றில் 41.29 நாட்களை [[அரைவாழ்வுக் காலம்|அரைவாழ்வுக்காலமாகக்]] கொண்டுள்ள <sup>105</sup>Ag ஐசோடோப்பு அதிக நிலைப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. <sup>111</sup>Ag ஐசோடோப்பு 7.45 நாட்களும் <sup>112</sup>Ag 3.13 மணி நேரமும் அரைவாழ்வுக் காலமாகக் கொண்டுள்ளன. மேலும், வெள்ளி தனிமமானது எண்ணற்ற உட்கரு மாற்றியன்களைப் பெற்றுள்ளது. இவற்றில் <sup>108m</sup>Ag 418 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலமும், <sup>110m</sup>Ag 249.79 நாட்கள் அரைவாழ்வுக் காலமும் <sup>106m</sup>Ag 8.28 நாட்கள் அரைவாழ்வுக் காலமும் கொண்டுள்ளன. எஞ்சியிருக்கும் பிற கதிரியக்க ஐசோடோப்புகள் யாவும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தை மட்டுமே கொண்டுள்ளன. இதிலும் பெரும்பாலானவை 3 நிமிடத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டவையாக உள்ளன <ref name="Audi">{{cite journal | last = Audi | first = Georges | title = The NUBASE Evaluation of Nuclear and Decay Properties | journal = Nuclear Physics A | volume = 729 | pages = 3–128 | publisher = Atomic Mass Data Center | date = 2003|doi=10.1016/j.nuclphysa.2003.11.001 | bibcode=2003NuPhA.729....3A | last2 = Bersillon | first2 = O. | last3 = Blachot | first3 = J. | last4 = Wapstra | first4 = A. H.}}</ref>.
 
வெள்ளி ஐசோடோப்புகள் ஒப்பீட்டு அணுநிறை அளவு 92.950 <sup>93</sup>Ag முதல் அணுநிறை அளவு 129.950 <sup>130</sup>Ag வரை காணப்படுகின்றன. நிலைப்புத் தன்மை மிகுந்த <sup>107</sup>Ag ஐசோடோப்புக்கு முன்னர் உள்ளவை எலக்ட்ரான் பிடிப்பு முறை சிதைவை முதன்மையாகக் கொண்டும், இதற்கு பின்னர் உள்ளவை பீட்டா சிதைவு முறையை முதன்மையாகக் கொண்டும் உருவாகின்றன<ref>{{cite web|accessdate = 11 November 2009|url = http://physics.nist.gov/cgi-bin/Compositions/stand_alone.pl?ele=Ag&ascii=html&isotype=all|title = Atomic Weights and Isotopic Compositions for Silver (NIST)}}</ref>. இவ்வாறு உருவாகும் <sup>107</sup>Ag ஐசோடோப்புக்கு முன்னரான சிதைவு விளைபொருட்கள் பல்லேடியம் (தனிமம் 46) மற்றும் பின்னரான சிதைவு விளைபொருட்கள் காட்மியம் ( தனிமம் 48) ஐசோடோப்புகளாகும்.
 
பலேடியம் ஐசோடோப்பான <sup>107</sup> Pd யானது <sup>107</sup>Ag ஐசோடோப்பின் பீட்டா சிதைவால் உருவாகிறது. இதன் அரைவாழ்வுக் காலம் 6.5 மில்லியன் ஆண்டுகளாகும். இரும்பு விண்கற்களில் மட்டுமே போதுமான அளவுக்கு இந்த பலேடியம் வெள்ளி ஐசோடோப்பு விகிதங்கள் காணப்படுகின்றன. கதிரியக்கச் சிதைவு <sup>107</sup>Ag சாண்டா கிளாரா விண்வீழ் கல்லில் 1978 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது<ref>{{cite journal|doi = 10.1029/GL005i012p01079|title = Evidence for the existence of <sup>107</sup>Pd in the early solar system|date = 1978|last = Kelly |first=William R. |journal = Geophysical Research Letters|volume = 5|pages = 1079–1082|first2 = G. J.|last2 = Wasserburg|bibcode=1978GeoRL...5.1079K|issue = 12}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(தனிமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது