காட்மியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 74:
 
துத்தநாகம் போlல காட்மியமும் இதன் சேர்மங்கள் பெரும்பாலானவற்றில் ஆக்சிசனேற்ற நிலை +2 இல் உள்ளது. மற்றும் பாதரசம் போல 3 முதல் 11 வரையான குழுக்களில் உள்ள இடைநிலைத் தனிமங்களைக் காட்டிலும் இது குறைவான உருகுநிலையைக் கொண்டுள்ளது. காட்மியம் மற்றும் குழு 12 இல் உள்ள அதன் பிற இணைத்தனிமங்களும் பெரும்பாலும் இடைநிலைத் தனிமங்களாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் அவை d அல்லது f எலக்ட்ரான் கூட்டில் பகுதியாக நிரம்பிய எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பதில்லை. பூமியின் மேற்புறத்தில் காட்மியத்தின் சராசரி செறிவு மில்லியனுக்கு 0.1 மற்றும் 0.5 பகுதிகள் ஆக உள்ளது. 1817 ஆம் ஆண்டு செருமனியில் சிட்ரோமேயர் மற்றும் எர்மான் ஆகியோரால் துத்தநாக கார்பனேட்டில் உள்ள ஒரு மாசாகக் கண்டறியப்பட்டது.
பெரும்பாலான துத்தநாக தாதுகளில் காட்மியம் ஒரு சிறிய பகுதியாகத் தோன்றுகிறது. துத்தநாக உற்பத்தியின் போது ஓர் உடன் விளைபொருளாக காட்மியமும் உருவாகிறது. எஃகின் மீது முலாம் பூசுகையில் அசிப்புத் தடுப்பியாக காட்மியம் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வண்ண கண்ணாடி, மற்றும் நெகிழி உறுதிப்படுத்துதலில் காட்மியம் சேர்மங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, நச்சுத்தன்மையின் காரணமாக காட்மியத்தின் பயன்பாடு பொதுவாக குறைந்து வருகிறது. அபாயகரமான பொருட்களுக்கான ஐரோப்பிய கட்டுப்பாட்டு அமைப்பு காட்மியத்தை அபாயகரமான பொருட்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. நிக்கல்-காட்மியம் மின்கலன்கள் தற்காலத்தில் நிக்கல்-உலோக ஐதரைடு மற்றும் இலித்தியம் -இரும்பு மின்கலன்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன. காட்மியம் தெலூரைடு சூரிய மின் பலகைகளில் பயன்படுவது தற்போதைய புதிய பயன்பாடாகும்.
 
உயிரினங்களில் காட்மியத்தின் பயன்பாடு ஏதும் அறியப்படவில்லை என்றாலும், காடிமியம் சார்ந்த கார்போனிக் அன் ஐதரேசு நொதியாக கடல்வாழ் [[இருகலப்பாசி]]களில் காணப்படுகிறது.
வரிசை 113:
|publisher=[[John Wiley and Sons]]
|isbn=0-471-19957-5
}}</ref>.
 
காட்மியம் காற்றில் எரிந்து படிக உருவமற்ற பழுப்பு நிறமான காட்மியம் ஆக்சைடு (CdO) உருவாகிறது. இச்சேர்மத்தின் படிக வடிவம் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. சூடுபடுத்தும் போது இதன் நிறம் துத்தநாக ஆக்சைடைப் போல நிற மாற்றமடைகிறது. காட்மியம், ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைந்து காட்மியம் குளோரைடு (CdCl2) ஆகவும், கந்தக அமிலத்தில் கரைந்து காட்மியம் சல்பேட்டு (CdSO4) ஆகவும், நைட்ரிக் அமிலத்தில் கரைந்து காட்மியம் நைட்ரேட்டு (Cd(NO3)2) ஆகவும் உருவாகிறது. காட்மியத்தை காட்மியம் குளோரைடு மற்றும் அலுமினியம் குளோரைடு கலந்த கலவையில் கரைத்தால் Cd22+ நேர்மின் அயனி உருவாகிறது. இதில் காட்மியம் +1 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.இது Hg22+ நேர்மின் அயனி பாதரச(I) குளோரைடில் இருப்பதைப் போன்றது ஆகும்<ref name="Holl"/>
 
:Cd + CdCl<sub>2</sub> + 2 AlCl<sub>3</sub> → Cd<sub>2</sub>(AlCl<sub>4</sub>)<sub>2</sub>.
 
நியூக்ளியோ காரங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றுடன் கூடிய பல காட்மிய அணைவுச் சேர்மங்களின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன<ref>{{cite book
வரிசை 143:
</ref>.
 
=== ஐசோடோப்புகள் ===
 
[[File:Cadmium cutoff.png|thumb|left|காட்மியம்-113 இன் மொத்த குறுக்கு வெட்டு காட்மியத்தின் துண்டிப்பை தெளிவாகக் காட்டுகிறது ]]
 
இயற்கையாகத் தோன்றும் காட்மியம் 8 ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றில் இரண்டு கதிரியக்க ஐசோடோப்புகளாகும். மூன்று ஐசோடோப்புகள் சிதைவு அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அவற்றை ஆய்வகச் சூழ்நிலையில் அவ்வாறு நிகழவில்லை. 113Cd மற்றும் 116Cd எனப்படும் இரண்டும் இயற்கை கதிரியக்க ஐசோடோப்புகளாகும். 113Cd ஐசோடோப்பு பீட்டா சிதைவு அடைந்து 7.7 × 1015 ஆண்டுகளை அரைவாழ்வுக் காலமாகப் பெற்றுள்ளது. 116Cd ஐசோடோப்பு இரண்டு நியூட்ரினோ இரட்டைப் பீட்டா சிதைவை அடைந்து 2.9 × 1019 ஆண்டுகளை அரைவாழ்வுக் காலமாகப் பெற்றுள்ளது. இரட்டை எலக்ட்ரான் பிடிப்பு தன்மை கொண்ட 106Cd, 108Cd ஐசோடோப்புகள் இரண்டும் இரட்டை பீட்டா சிதைவு கொண்ட 114Cd ஐசோடோப்பும் இதர காட்மியம் ஐசோடோப்புகளாகும். இம்மூன்றின் அரைவாழ்வுக் காலம் மிகக்குறைந்த அளவுகளாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் – 110Cd, 111Cd, மற்றும் 112Cd – ஐசோடோப்புகள் நிலைப்புத் தன்மை கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இயற்கையாகத் தோன்றாத காட்மியத்தின் இதர ஐசோடோப்புகளில் 462.6 நாட்களை அரைவாழ்வுக் காலமாகக் கொண்ட 109Cd ஐசோடோப்பும் 53.46 மணிநேரத்தை அரைவாழ்வுக் காலமாகக் கொண்ட 115Cd ஐசோடோப்பும் மிக அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்புகளாகக் கருதப்படுகின்றன. காட்மியத்தின் இதர கதிரியக்க ஐசோடோப்புகள் யாவும் 2.5 மணி நேரத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைப் பெற்றவையாக உள்ளன. இவற்றிலும் பல ஐசோடோப்புகள் 5 நிமிடத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைப் பெற்றவையாக உள்ளன. காட்மியத்தின் சிற்றுறுதி ஐசோடோப்புகளாக 8 ஐசோடோப்புகள் அறியப்படுகின்றன. 113mCd (t1⁄2 = 14.1 ஆண்டுகள்), 115mCd (t1⁄2 = 44.6 நாட்கள்), மற்றும் 117mCd (t1⁄2 = 3.36 மணிகள்) போன்ற சிற்றுறுதி ஐசோடோப்புகள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன<ref name="NUBASE">
வரிசை 161:
|url=http://hal.in2p3.fr/in2p3-00014184|citeseerx=10.1.1.615.5152}}</ref>
 
அணு நிறை 94.950 u (95Cd) to 131.946 u (132Cd) கொண்ட காட்மியத்தின் ஐசோடோப்புகள் அறியப்படுகின்றன. 112 u நிறையை விட குறைவான நிறை கொண்ட ஐசோடோப்புகள் எலக்ட்ரான் பிடிப்பு என்ற முதன்மை சிதைவு நிலையைக் கொண்டுள்ளன. அணு எண் 47 (வெள்ளி) சிதைவு விளைபொருள் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. கன ஐசோடோப்புகள் பீட்டா உமிழ்வு மூலமாக அணு எண் 49 (இண்டியம்) விளைபொருளாக உருவாகிறது <ref name="NUBASE"/>.
 
காட்மியத்தின் 113Cd என்ற ஒரு ஐசோடோப்பு அதிக தேர்ந்தெடுக்கும் திறனுடனும் நியூட்ரான்களை ஈர்க்கிறது. அதிக சாத்தியக் கூறுகளுடன் காட்மியம் துண்டிப்பைக் காட்டிலும் குறைவான ஆற்றல் கொண்ட நியூட்ரான்களும் ஈர்க்கப்படலாம். காட்மியம் துண்டிப்பைக் காட்டிலும் அதிகமான ஆற்றல் கொண்ட நியூட்ரான்கள் கடத்தப்படுகின்றன. 0.5 எலக்ட்ரான் வோல்ட்டு காட்மியம் துண்டிப்பும் அதைவிடக் குறைவான அளவு கொண்ட நியூட்ரான்களும் மெதுவான நியூட்ரான்களாக கருதப்படுகின்றன. இவை வேகமான நியூட்ரான்கள் மற்றும் இடைநிலை நியூட்ரான்கள் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டவையாகும் <ref>
வரிசை 183:
|publisher=[[Cambridge University Press]]
|isbn=978-0-521-56631-5
}}</ref>.
 
== பிரித்தெடுத்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/காட்மியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது