அந்திமனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 45:
{{Elementbox_footer | color1=#cccc99 | color2=black }}
 
'''ஆண்டிமனி''' ''(Antimony)'' என்பது Sb என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். அந்திமனி என்ற பெயராலும் அழைக்கப்படும் இத்தனிமத்தின் அணு எண் 51 மற்றும் அணு எடை 71 ஆகும். ஆண்டிமனி பளபளப்பான சாம்பல் நிறமுடைய ஒரு உலோகப் போலியாகும். இயற்கையில் இது சிடிப்னைட்டு (Sb2S3) எனப்படும் சல்பைடு கனிமமாகக் காணப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே ஆண்டிமனி தனிமத்தின் சேர்மங்கள் அறியப்பட்டிருக்கின்றன, அவை பெரும்பாலும் தூளாக்கப்பட்டு மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்களாக கோகல் என்ற அரபு மொழிப் பெயரில் பயன்படுத்தப்பட்டன <ref>[[David Kimhi]]'s Commentary on Jeremiah 4:30 and I Chronicles 29:2; Hebrew: '''פוך'''/'''כְּחֻל''', Aramaic: '''כּוּחְלִי'''/'''צדידא'''; Arabic: '''كحل''', and which can also refer to [[antimony trisulfide]]. See also Z. Dori, ''Antimony and Henna'' (Heb. '''הפוך והכופר'''), Jerusalem 1983 (Hebrew).</ref> உலோக ஆண்டிமனி குறித்த செய்திகளும் அறியப்படுகின்றன. ஆனால் ஆண்டிமனி கண்டறியப்பட்ட தொடக்கக் காலத்தில் இது தவறுதலாக ஈயம் என்ற தனிமமாகப் பார்க்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளில் 1540 ஆம் ஆண்டில் ஆண்டிமனி பற்றிய விவரங்கள் வானோக்கியோ பிரிங்கியுக்கியோ என்ற உலோகவியலாளரால் எழுதப்பட்டுள்ளது.
 
சில காலம் [[சீனா]] ஆண்டிமனி மற்றும் அதன் சேர்மங்கள் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருந்து வந்தது. பெரும்பாலான உற்பத்தி ஊனானில் இருக்கும் சிக்குவான்சான் சுரங்கத்திலிருந்து கிடைத்தது. சிடிப்னைட்டு கனிமத்தை வறுத்தல் மற்றும் அதனுடன் கார்பன் அல்லது இரும்புடன் நேரடியாகச் சேர்த்து ஒடுக்குதல் செயல்முறைகளால் ஆண்டிமனியை தயாரித்தல் மற்றும் சுத்திகரிப்பதற்கான தொழில்துறை செயல்பாடுகள் நடைபெற்றன.
 
உலோக ஆண்டிமனியின் மிகப்பெரிய பயன்பாடுகளில் ஒன்றாக முன்னணி வகிப்பது இதனுடைய கலப்புலோகப் பண்பாகும். [[ஈயம்]] மற்றும் [[வெள்ளீயம்|வெள்ளீயத்துடன்]] ஆண்டிமனியை கலந்து தயாரிக்கப்படும் கலப்புலோகம் அதிகமான பயன்களைக் கொடுக்கிறது. ஈயம்-ஆண்டிமனி கலப்புலோகத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் தகடுகள் ஈய – அமில மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இணைப்புலோகம், தோட்டாக்கள், சாதாரண தாங்கு உருளைகள் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஆண்டிமனி, ஈயம், வெள்ளீயம் தனிமங்களின் கலப்புலோகம் பயன்படுகிறது. ஆண்டிமனி சேர்மங்கள் பல வணிக மற்றும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களில் காணப்படும் [[குளோரின்]] மற்றும் [[புரோமின்]] வாயுக்களாலான தீயணைப்பு ஒடுக்கிகளில் முக்கிய கூட்டுப்பொருள்களாகப் பயன்படுகின்றன. மைக்ரோ மின்னியல் துறையில் ஆண்டிமனியைப் பயன்படுத்துவது வளர்ந்துவரும் ஒரு துறையாக மாறிவருகிறது.
 
== பண்புகள் ==
வரிசை 61:
நிக்டோசன் என்றழைக்கப்படும் [[நெடுங்குழு 15 தனிமங்கள்|நெடுங்குழு தனிமங்கள் 15 இல்]] ஒன்றாகும். இதன் எலக்ட்ரான் ஏற்புத்திறன் 2.05 ஆகும். தனிம வரிசை அட்டவனை போக்குகளுக்கு இணங்க [[வெள்ளீயம்]] அல்லது [[பிசுமத்|பிசுமத்தை]] விட எலக்ட்ரான் ஏற்புத்தன்மை அதிகமாகவும் [[வெண்கந்தகம்|தெலூரியம்]] அல்லது [[ஆர்சனிக்]]கை விட குறைவான எலக்ட்ரான் ஏற்புத் திறனையும் ஆண்டிமனி பெற்றுள்ளது. அறை வெப்பநிலையில் ஆண்டிமனி நிலைப்பித் தன்மையுடனும், காற்ருடன் சேர்த்து சூடுபடுத்தும் போது வினைபுரிந்து ஆண்டிமனி டிரையாக்சைடையும் தருகிறது (Sb<sub>2</sub>O<sub>3</sub>).
ஆண்டிமனி வெள்ளி போன்ற பளபளப்பான ஒரு உலோகப்போலியாகும். [[மோவின் அளவுகோல்| மோவின் அளவுகோலில்]] இதனுடைய கடினத்தன்மை மதிப்பு 3 ஆகும். அதாவது கடினமான பொருட்களை உருவாக்க உதவும் மிகவும் மென்மையான பொருளாக ஆண்டிமனி கருதப்படுகிறது. ஆண்டிமனியாலான நாணயங்கள் 1931 ஆம் ஆண்டில் சீனாவின் குயிசோவ் மாகாணத்தில் வெளியிடப்பட்டன, ஆனால் ஆயுள் குறைவாக இருந்ததால் உற்பத்தியானது விரைவில் நிறுத்தப்பட்டது <ref>{{cite web|url=http://www.ukcoinpics.co.uk/metal.html|title=Metals Used in Coins and Medals|publisher=ukcoinpics.co.uk}}</ref>. அமிலங்களால் அரிக்கப்படுவதை தடுக்கும் எதிர்ப்பியாகவும் ஆண்டிமனி பயன்படுத்தப்படுகிறது.
 
ஆண்டிமனிக்கு நான்கு புற வேற்றுமை வடிவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நிலைப்புத் தன்மை கொண்டது ஆகும். ஏனைய மூன்றும் (வெடிக்கும் ஆண்டிமனி, கருப்பு ஆண்டிமனி, மஞ்சள் ஆண்டிமனி) சிற்றுறுதி நிலையில் உள்ளன. தனிமநிலை ஆண்டிமனி வெள்ளியைப் போன்று வெண்மையாக நொறுங்கக்கூடிய உலோகப்போலியாகும். உருகிய ஆண்டிமனியை மெல்ல குளிர்விக்கும் போது அது முக்கோண அலகுகளாக படிகமாகின்றது. ஆர்சனிக்கின் புறவேற்றுமை வடிவமான சாம்பல் நிற ஆர்சனிக்கை ஒத்த வடிவில் உள்ளது. ஆண்டிமனி முக்குளோரைடை மின்னாற்பகுத்து அரியவகை புறவேற்றுமை வடிவமான வெடிக்கும் ஆண்டிமனி தயாரிக்கப்படுகிறது. ஒரு கூர்மையான வெப்ப உமிழ் வினை செயல்பாட்டின் வழியாக இது உருவாகிறது. தனிமநிலை ஆண்டிமனி உருவாகும் போது வெண்புகை தோன்றுகிறது. குழவியிலிட்டு ஓர் உலக்கையால் இதை இடித்தால் கடும் வெடிப்போசை உண்டாகிறது. ஆண்டிமனி ஆவியை திடீரெனக் குளிர்வித்தால் கருப்பு ஆண்டிமனி உருவாகிறது. சிகப்பு பாசுபரசு மற்றும் கருப்பு ஆர்சனிக் தனிமங்கள் பெற்றுள்ளதைப் போன்ற அதே படிகவடிவத்தையே கருப்பு ஆண்டிமனியும் பெற்றுள்ளது.
 
100 °செல்சியசு வெப்பநிலையில் இது மெதுவாக நிலைப்புத்தன்மை கொண்ட ஆண்டிமனியாக மாறுகிறது. மஞ்சள் ஆண்டிமனிதான் நிலைப்புத்தன்மை குறைந்த புறவேற்றுமை வடிவ ஆண்டிமனியாகும். சிடைபினை - 90° செல்சியசு வெப்பநிலையில் ஆக்சிசனேற்றம் செய்தால் இதைத் தயாரிக்க இயலும். இதற்கு அதிமான வெப்பநிலையில் இச்சிற்றுறுதி நிலை ஆண்டிமனி அதிக நிலைப்புத்தன்மை கொண்ட கருப்பு ஆண்டிமனியாக மாறுகிறது <ref>{{cite book|url=https://books.google.com/books?id=vVhpurkfeN4C&pg=PA50|pages=50–51|title=Chemistry of arsenic, antimony, and bismuth|isbn=978-0-7514-0389-3|author=Norman, Nicholas C|date=1998}}</ref>.
வரிசை 74:
[[படிமம்:Antimony (mined)2.PNG|right|250px|உலகில் அந்திமனி தோண்டி எடுக்கும் இடங்கள். மிக அதிகமாகக் கிடைக்கும் [[சீனா]] நாட்டின் ஆண்டிமனி எடுப்பை 100 மதிப்பு என்று கொண்டு அது பச்சைப் புள்ளியாகக் காட்டப்ட்டுளது. ஒப்பிடுவதற்காக ஒவ்வொரு மஞ்சள் நிறப்புள்ளியும் 10 மதிப்பாகவும், சிவப்பு நிறப்புள்ளி ஒவ்வொர்=ன்றும் 1 மதிப்பு உள்ளதாகவும் காட்டப்ப்ட்டுளது. ]]
 
2005ல், [[சீனா]]தான் அதிகம் அந்திமனியைத் தோண்டி எடுத்த நாடு. அந்நாட்டின் உற்பத்தி உலகில் கிடைக்கும் மொத்த அந்திமனியில் 84%. சீனாவை அடுத்து மிக பின்நிலையில் இரண்டாவதாக [[தென் ஆப்பிரிக்கா]]வும், அதன் பின் [[பொலிவியா]], [[தஜிக்ஸ்தான்]] உள்ளன.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/அந்திமனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது