அவள் அப்படித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
இருவருக்கும் இடையிலான சந்திப்புகளில் அருண் மெள்ள மெள்ள, துவக்கத்தில் ஆணவம் மிக்கவளாகத் தோற்றமளிக்கும் மஞ்சு, வாழ்க்கையில் தனக்கு நிகழ்ந்த தொடர் தோல்விகளின் காரணமாக, வாழ்க்கையின் மீதும், மனிதர்களின் மீதும் நம்பிக்கையற்றுப் போயிருப்பதை உணர்கிறான். அவளுக்கு நம்பிக்கை அளித்து தானே மணக்க விரும்பும் அருணின் முயற்சி தோல்வியடையவும், அவன் தனது தந்தை தனக்காகப் பார்த்த பெண்ணை மணந்து கொள்கிறான். அச்சமயமே அவன் மீது தனக்குள்ள காதலை உணரும் மஞ்சு, "''மீண்டும் ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறப்பாள். அவள் அப்படித்தான்''."
 
== வெளியீடும் விமர்சனங்களும் ==
 
கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் முன்னணி நடிகர்களாக நிலைபெறத் துவங்கியிருந்தபோது, வண்ணப்படங்கள் மிகுந்த அளவில் தயாரிக்கப்பட்டு வருகையில், கருப்பு வெள்ளைப் படமாக இது 1978ஆம் வருடம் தீபாவளி அன்று வெளியானது. இதன் நெகிழ்வற்ற திரைக்கதை அமைப்பினாலும், உத்திகளும், குறியீடுகளும் நிறைந்த இயக்க முறைமையினாலும் வர்த்தக ரீதியாக (நடித்திருந்த மூவருமே முன்னணி நட்சத்திரங்களாக இருந்தபோதிலும்) தோல்வியுற்றது. மேலும், அச்சமயம் வெளிவந்த கமலஹாசனின் [[சிகப்பு ரோஜாக்கள்]] மற்றும் ரஜினிகாந்தின் [[தப்புத் தாளங்கள்]] ஆகிய பெரும் படங்களுடன் போட்டியிட முடியாமையும் ஒரு காரணமானது.
 
வரி 47 ⟶ 46:
 
== படத்தின் சிறப்பம்சங்கள் ==
 
மஞ்சு என்னும் ஒற்றைக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, செயற்கையான திருப்பங்கள் ஏதுமின்றி இயல்பாக அமைந்திருந்த திரைக்கதையும், அக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த ஸ்ரீபிரியாவின் நடிப்பும் குறிப்பான சிறப்புக்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/அவள்_அப்படித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது