இயற்கை எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
[[படிமம்:WMATA 3006.jpg|thumb|right|250px|இயற்கை எரிவளியால் ஓடும் [[பேருந்து]] ]]
[[படிமம்:NaturalGasProcessingPlant.jpg|thumb|right|A natural gas processing plant]]
'''இயற்கை எரிவளி''' அல்லது '''இயற்கை எரிவாயு''' என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு [[புதைபடிவ எரிபொருள்]]. இதனை '''மண்வளி''' என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல [[நீரியக்கரிமம்|நீரியக்கரிமங்களின்]] கலவையாகக் கிடைக்கும் ஒரு [[வளிமம்|வளி]]. பெரும்பான்மையாக [[மெத்தேன்]] வளியினால் ஆனது என்றாலும், இயற்கை எரிவளியில் பிற நீரியக்கரிமங்களான [[எத்தேன்]], [[புரொப்பேன்]], [[பியூட்டேன்]], [[பென்ட்டேன்]] ஆகியவையும் சிறிய அளவில் காணப்படும் (கீழே அட்டவணையைப் பார்க்கவும்).
 
இன்றைய உலகின் எரிம ஆற்றல் தேவைகளைத் தீர்த்து வைப்பனவற்றுள் இயற்கை எரிவளி இன்றியமையாத ஒன்று. பிற ஆற்றல் மூலங்களை விட இயற்கை எரிவளியானது தூய்மையானதும் பாதுகாப்பானதும் மிகவும் பயனுள்ளதும் ஆகும். பெரும்பாலும் இது இல்லங்களில் சூடேற்றுவதற்கும், [[மின்சாரம்|மின்னாற்றல்]] ஆக்குவதற்கும் பயன்படுகிறது. 2005ஆம் ஆண்டுக்கணக்குப் படி, உலகில் மாந்தர்கள் பயன்படுத்தும் ஆற்றல்வாய்களுள் இயற்கை எரிவளியின் பங்கு 23% ஆகும். இது உலகின் மூன்றாவதாக மிகுதியாகப் பயன்படும் ஆற்றல்வாய் ஆகும். முதலிரண்டு ஆற்றல்வாய்கள் பின்வருவன: [[எரியெண்ணெய்]] 37%, [[நிலக்கரி]] 24%.
வரிசை 33:
== உற்பத்தி ==
இயற்கை எரிவளியைப் பொதுவாக [[பெட்ரோலியம்|எண்ணெய்க்]] கிணறுகளில் இருந்தும், இயற்கை எரிவளிக் கிணறுகளில் இருந்தும் வணிகநோக்கில் திரட்டுகிறார்கள். இது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாறைநெய் உற்பத்தியின் போது கிடைக்கும் பயனற்ற பொருளாகக் கருதப்பட்டது.
அதனால், எண்ணெய்க்கிணறுகளில் வெளிவரும் இவ்வளியைப் பயனின்றி எரித்துவிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்காலத்தில் அவ்வாறு பயனற்றதாகக் கருதப்படும் எரிவளியையும் எண்ணெய்க் கிணறுகளின் அழுத்தத்தை அதிகரிக்க உட்செலுத்தப் பயன்படுத்திக் கொள்வர்.
 
எண்ணெய்க் கிணறுகள் தவிர, கரிப்படுகைகளிலும் இயற்கை எரிவளி காணப்படும். மேலும், அண்மையில் [[களிப்பாறை]]களிலும் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்யும் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதில் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இவ்வகை வளியைக் [[களிப்பாறை வளிமம்]] என்றும் சொல்வதுண்டு.
 
நிலத்தடியில் இருந்து மேலே எடுத்த பிறகு, அதனில் கலந்திருக்கும் [[நீர்]], [[மணல்]], பிற சேர்மங்களும் [[வளிமம்|வளிமங்களும்]] பிரித்து எடுக்கப்படும். அவற்றோடு புரோப்பேன், பியூட்டேன் போன்ற பிற வளிமங்களையும் பிரித்து எடுத்து விற்பர். இவ்வாறாகத் தூய்மையாக்கிய இயற்கை எரிவளியைப் பிறகு நீண்ட குழாய் வரிசைகளின் ஊடே தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். இறுதியாக இல்லங்களுக்கும் குழாய்களின் வழியாகவே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் குறைவான [[அடர்த்தி]] கொண்ட வளிமம் என்பதனால் சிக்கனமாக ஒரு இடத்தில் தேக்கி வைக்க இயலாத ஒன்று.
 
எரிவளி உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகிலேயே முதன்மையாக இருப்பது உருசியாவாகும். அது தவிர, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் போன்றவையும் அதிக அளவில் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்கின்றன.
 
உலகிலேயே அதிக அளவில் இயற்கை எரிவளி கிடைக்கும் இடம் [[கத்தார்]] நாட்டில் இருக்கும் வடக்கு வயல் ஆகும்.<ref>{{cite web|url=http://www.state.gov/r/pa/ei/bgn/5437.htm |title=Background note: Qatar |publisher=State.gov |date=2010-09-22 |accessdate=2011-02-06}}</ref>
வரிசை 53:
 
=== வீட்டுப் பயன்பாடு ===
அடுப்புக்களின் வழியே இயற்கை எரிவளியை எரிப்பதன் மூலம் 2000&nbsp;°F வரை வெப்பத்தை உண்டாக்க இயலும். வீட்டினுள் சமையலுக்கும் வெப்பமேற்றுவதற்கும் இவ்வளி பயன்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், குழாய்கள் வழியாக எரிவளி வீடுகளுக்கு அனுப்பப் படுகிறது. சமையலுக்கும், துணிகள் காயவைப்பதற்கும், அறைகளை வெப்பமுற வைப்பதற்கும் இது பயன்படுகிறது.
 
=== போக்குவரத்துப் பயன்பாடு ===
வரிசை 65:
 
புதைபடிவ எரிபொருட்களில், பாறைநெய், கரி போன்றவற்றைக் காட்டிலும், இயற்கை எரிவளி தூய்மையான எரிபொருளாகக் கருதப் படுகிறது. ஒரே [[ஜூல்]] அளவு வெப்பத்தை உண்டாக்க, கரி, எண்ணெயை விட இயற்கை எரிவளி குறைவான [[கார்பன் டை ஆக்சைடு]] வெளியிடுகிறது.
ஆனால், மொத்தக் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கணக்கிடும்போது இயற்கை எரிவளியும் கணிசமான அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் ஒன்று. 2004 கணக்கில் கரி, எண்ணெய், எரிவளி ஆகிய மூன்றும் முறையே 10.6, 10.2, 5.6 பில்லியன் டன் அளவில் கார்பன் டை ஆக்சைடி வெளியிட்டிருக்கின்றன. வரும் காலத்தில் இயற்கை எரிவளியின் பயன்பாடு அதிகரிக்கும் எனவும் அனுமானிக்கப் படுகிறது. அதனால் உலக வெப்பேற்ற வளிகளின் அளவும் அதிகரிக்கலாம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_எரிவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது