உயிரி எரிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 5:
உயிரி எரிபொருட்கள் உலகெங்கும் பயன்படுத்தப் படுகின்றன. உயிரி எரிபொருட் தொழிற்சாலைகள் [[ஐரோப்பா]], [[ஆசியா]], மற்றும் [[அமெரிக்கா|அமெரிக்க]] நாடுகளில் பரவலாகி வருகின்றன. பெரும்பாலும் [[வாகனம்|வாகன]] எரிபொருளாக இவை பயன்படுகின்றன.
 
உயிரி எரிபொருட்களுக்கான தேவை அதிகரிக்க அதிகரிக்க அதனால் சில பிரச்சினைகளும் உண்டாகின்றன. இவற்றிற்கான மூலப்பொருட்களைப் பயிர் செய்ய வேண்டிக் [[காடு]]கள் அழிவதும், உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு உண்டாவதும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள். விளைச்சலை அதிகரிக்க வேண்டிப் பயன்படுத்தப்படும் [[பூச்சிக்கொல்லி]] மருந்துகள் முதலியனவற்றால் [[சுற்றுச்சூழல்]] மற்றும் [[நீர்நிலை]]கள் மாசடைவதும் உண்டு.
 
உயிரி எரிபொருள் உற்பத்தியை நுட்பியல் வழியாகப் பார்க்கும் போது குறிப்பாக இரண்டு முறைகளைக் கருதலாம்.
 
* [[கரும்பு]], [[சர்க்கரைக்கிழங்கு]] முதலியனவற்றைக் கொண்டு ஈசுட்டு மூலம் நொதிக்க வைத்து [[எத்தனால்]] என்னும் எரிநறா தயாரிப்பது
* இயற்கையாக [[நெய்]] உருவாக்கும் தாவரங்களை (எ-டு [[ஆமணக்கு]]) வளர்த்து, அவற்றில் இருந்து நெய்யை எடுப்பது. இந்த நெய்களைச் சூடாக்கினால் அவற்றின் [[பிசுக்குமை]] குறையும் என்பதால், அவற்றை நேரடியாக [[டீசல்]] எந்திரங்களில் எரிக்கலாம். அல்லது, இந்த நெய்களை வேதிச்செலுத்தங்கள் (chemical processes) மூலம் [[உயிரி டீசல்]] தயாரிக்க உபயோகிக்கலாம்.
 
இவை தவிர, வெறும் மரம்/கட்டைகளை வைத்து மரவளி, மெத்தனால், எத்தனால் போன்ற எரிபொருட்களையும் உருவாக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கிறார்கள்.
 
==காண்க==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741774" இலிருந்து மீள்விக்கப்பட்டது