நிக்காட்டீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
 
[[படிமம்:Nicotine-2D-skeletal.png|190px|{{PAGENAME}}|thumb|right]][[படிமம்:Nicotine3Dan.gif|190px|{{PAGENAME}}|thumb|right]]
'''நிக்கோட்டின்''' ''(Nicotine)'' எனப்படுவது C10H14N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை நிக்காட்டீன் என்றும் அழைக்கிறார்கள். சில தாவர வகைகளில், சிறப்பாகப் புகையிலையிலும், சிறிய அளவில் தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரி, பச்சை மிளகு போன்றவற்றிலும் இது காணப்படுகின்றது. இதனை, கோகேயின் என்னும் பொருளுடன் சேர்த்து கொக்கோ தாவரத்தின் இலைகளிலும் காணலாம். புகையிலையின் உலர் நிறையில் 0.6 - 3.0% நிக்காட்டீன் உள்ளது. இது புகையிலைச் செடியின் வேரில் உருவாக்கப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது. நிக்கோட்டின் ஒரு தாவர உண்ணி எதிர்ப்பு வேதிப்பொருள் ஆகும். இதனால் நிக்காட்டினை பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தினார்கள் . இதனையொத்த இமிடாகுளோப்பிரிட்டு சேர்மம் இன்னும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.
வரி 15 ⟶ 14:
== விளைவுகள் ==
நிக்கோட்டின் உடலில் நுழைந்தவுடன் அது இரத்த ஓட்டத்தில் கலந்து விரைவாக விநியோகிக்கப்படுகிறது. மூச்சுடன் உள்ளிழுக்கப்பட்ட 10-20 வினாடிகளுக்குள் மூளைக்கு சென்று சேர்கிறது. உடலுக்குள் சென்ற நிகோட்டின் அங்கிருந்து நீக்கப்படும் அரை வாழ்வு நேரம் சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.
புகைபிடிப்பவரின் உடலில் உறிஞ்சப்படும் நிகோட்டின் அளவு புகையிலையின் வகைகளை உள்ளடக்கிய பல காரணிகளைச் சார்ந்தது ஆகும். புகை நேரடியாக எடுக்கப்படுகிரதா அல்லது வடிகட்டி எடுக்கப்படுகிறதா என்பதும் கருத்திற்கொள்ளப்படுகிறது. நிக்கோடின் புகைப்பவர்களை எளிமையாக அடிமைப்படுத்திக் கொள்ளும். சராசரியாக ஒரு சிகரெட்டில் 2 மி.கி. நிக்கோடின் உறிஞ்சப்படுகிறது. இது பாலூட்டிகளில் தூண்டலை ஏற்படுத்துகிறது. நிக்கோட்டின் அளவு 50 மி.கி முதல் 100 மி.கி அளவை எட்டும்போது மிகவும் அபாயகரமான தீங்குகளை விளைவிக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
 
 
 
[[பகுப்பு:போதைப்பொருள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நிக்காட்டீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது