வன்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Atomic particles ta quark et lepton.jpg|thumb|right|400px]] [[அணு]]க்கூறுகளாகிய துகள்களின் [[இயற்பியல்|இயற்பியலில்]] '''வன்மி''' அல்லது '''ஆட்ரான்''' (Hadron) என்பது [[குவார்க்]]குகள் கட்டுண்டு இருக்கும் நிலையில் உள்ள துகள்களின் பொதுப்பெயர். வன்மிகள் (ஆட்ரான்கள்) [[அணுக்கரு விசை|அணுக்கரு வன்விசையால்]] கட்டுண்டு இருப்பவை. அணுக்கருவைச் சுற்றி வரும் [[எதிர்மின்னி]]கள் எப்படி மின்காந்த விசையால் கட்டுண்டு உள்ளதோ அது போலவே அணுக்கரு வன்விசையால் கட்டுண்டு இருக்கும் துகள்கள் வன்மிகள் (ஆட்ரான்கள்) எனப்படுவை.. அணுக்கரு வன்விசை புவியீர்ப்பு விசைபோல 10<sup>38</sup> மடங்கு மிகுந்த வலுவுடைய விசையாகும்.
 
வன்மிகளில் இரண்டு உள்வகைத் துகள்கள் உள்ளன. அவை [[பாரியான்]]கள் என்றும், [[இடைமி]]கள் (மேசான்கள்) என்றும் கூறப்படுவன. பாரியான்களில் பரவலாக அறியப்படும் [[நேர்மின்னி]]களும், [[நொதுமி]]களும் அடங்கும். இடைமிகளில் (மேசான்களில்) பல வகைகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/வன்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது