உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 30:
முதல் தொடக்கத்தில் இருந்தே, புவிவாழ் உயிர் புவியியல் கால கட்டந்தோறும் தான் வாழும் சூழலைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ளது. பெரும்பாலான சூழல் அமைப்புகளில் உயிர்தரிக்க உயிர் பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைந்திருக்க வேண்டும். சில அருஞ்சூழல் நுண்ணுயிரிகள், புறநிலையாகவும் புவி வேதியியலாகவும் புவிவாழ் உயிருக்குப் புறம்பான அவை வாழ்வதற்கே இயலாத அருஞ்சூழல்களில் உயிர்தரிக்க வல்லனவாக அமைகின்றன. உயிரினத்தை முதலில் வகைபடுத்தியவர் அரிசுடாட்டில் தான். பின்னர் இலின்னேயசு உயிரினங்களுக்கான (சிறப்பினங்களுக்கான) ஈருறுப்பு பெயரீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நாளடைவில், உயிரின் புதிய குழுக்களும் வகையினங்களும் கண்டறியப்பட்டன. உயிர்க்கலனின் கண்டுபிடிப்பும் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பும் வாழும் உயிரிகளின் இடையே நிலவும் உறவுக் கட்டமைப்பைப் பேரளவில் மாற்றவைத்தன. உயிர்க்கலங்கள், உயிரின் மிகச் சிறிய அலகுகளும் கட்டுமான உறுப்புகளும் ஆகும். இவற்றில் முற்கருவன் உயிர்க்கலன், முழுக் கருவன் உயிர்க்கலன் என இருவகைகள் உண்டு. இருவகையிலும் மென்படலத்தால் உறையிடப்பட்ட கலக்கணிகம் அமைந்துள்ளது. இதில் உட்கரு அமிலம், புரதம் போன்ற பல உயிர்மூலக்கூறுகள் அமைந்துள்ளன. உயிர்க்கலப் பிளவு வழி உயிர்க்கலங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிகழ்வில் ஒரு தாய் உயிர்க்கலன் இரு சேய்க்கலன்களாகின்றன.
 
உயிர் புவியில் மட்டுமே உள்ளதாக இப்போது அறியப்பட்டாலும், புவிக்கப்பாலும் புடவியில் உயிர் நிலவ வாய்ப்புள்ளதாக பல அறிவியலாளர்கள் கூறுகின்றனர். [[செயற்கை உயிர்]] என்பது மாந்தனால் உருவாக்கப்பட்ட, அல்லது கணினிவழி மீளாக்கம் செய்யப்பட்ட உயிரின் கூறுபாடு ஆகும். இது இயற்கை உயிர் சார்ந்த அமைப்புகளை ஆய்வு செய்ய உதவுகிறது. [[இறப்பு]]என்பது உய்ரி நிலைத்துவாழ உதவும் உயிரியல் நிகழ்வுகளும் செயல்பாடுகளும் முடிவுக்கு வருதலாகும்.எனவே உயிர்வாழ்தலின் முடிவும் ஆகும். [[மறைதல்]] அல்லது அழிதல் என்பது முழு குழு அல்லது வகையன், வழக்கமாக உயிரினம் (சிறப்பினம்) இறத்தல் அல்லது அழிதலாகும். உயிரிகளின் தடயங்களை இன்றும் சுட்டும் எச்சங்களாக தொல்லுயிர் புதைபடிவங்கள் அமைகின்றன.
 
உலகிலுள்ள பொருள்களைக் உறழ்திணை, உயிர்த்திணை என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் உயிர்த்திணை அல்லது உயிரி என வரையறுக்கிறது. உயிரி தூண்டினால் துலங்கும். இனப்பெருக்கம் செய்யும். வளர்ந்து புதிதாக உருவாகும். தன்நிலைப்பு உறும்.
 
==உயிரின வகை==
 
உயிர்க்கலன் இல்லாத உயிரினம், உயிர்க்கலன் உள்ள உயிரினம் என உயிர்த்திணை உலகம் இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன.
வரிசை 45:
[[File:Characteristics of life.svg|thumb|உயிரின் பான்மைகள்]]
 
உயிர் பற்றிய மறுக்கவியலாத வரையறை ஏதும் இல்லையென்பதால், உயிரியலில் நிலவும் நடப்பு வரையறைகள் அனைத்துமே விவரிப்புகளாக மட்டுமே அமைகின்றன. எனவே, உயிர் பின்வரும் அனைத்து அல்லது பெரும்பாலான பண்புகளை வெளிப்படுத்தும் பான்மையதாகக் கருதப்படுகிறது. <ref name=McKay/><ref name=Koshland>{{Cite journal |title=The Seven Pillars of Life |journal=Science |date=22 March 2002 |first=Daniel E. |last=Koshland, Jr. |volume=295 |issue=5563 |pages=2215–2216 |doi= 10.1126/science.1068489 |url=http://www.sciencemag.org/cgi/content/full/295/5563/2215 |accessdate=25 May 2009 |pmid=11910092}}</ref><ref>{{Cite book|title=The American Heritage Dictionary of the English Language|last=|first=|publisher=Houghton Mifflin|year=2006|isbn=978-0-618-70173-5|edition=4th|location=|pages=|chapter=life|quote=|via=}}</ref><ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/life|title=Life|last=|first=|date=|website=|publisher=Merriam-Webster Dictionary|accessdate=12 November 2016}}</ref><ref>{{cite web | url = http://phoenix.lpl.arizona.edu/mars141.php | title = Habitability and Biology: What are the Properties of Life? | accessdate = 6 June 2013 | work = Phoenix Mars Mission | publisher = The University of Arizona}}</ref><ref name="JBS-2012Feb">{{cite journal |last=Trifonov |first=Edward N. |title=Definition of Life: Navigation through Uncertainties |url=http://www.jbsdonline.com/mc_images/category/4317/21-trifonov-jbsd_29_4_2012.pdf |journal=Journal of Biomolecular Structure & Dynamics |volume=29 |issue=4 |pages=647–650 |issn=0739-1102 |publisher=Adenine Press |accessdate=12 January 2012 |doi=10.1080/073911012010525017 |date=2012 }}</ref><ref>{{Cite news|url=http://www.nbcnews.com/id/45963181/ns/technology_and_science/#.WCcX-snQf0w|title=Can scientists define 'life' ... using just three words?|last=Zimmer|first=Carl|date=11 January 2012|work=NBC News|access-date=12 November 2016|via=}}</ref>
 
# '''[[தன்நிலைப்பாடு]]''': என்பது மாறாத நிலையில் அகச் சூழலைப் பேணலுக்கான ஒழுங்குமுறை ஆகும். காட்டாக, வெப்பநிலையைக் கட்டுபடுத்த வியர்த்தலைக் கூறலாம்.
வரிசை 63:
 
{{புறவெளியில் கண்டறியப்பட்ட மூலக்கூறுகள்}}
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:உயிர்| ]]
"https://ta.wikipedia.org/wiki/உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது