புளுட்டோனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''புளுட்டோனியம்''' ''(Plutonium)'' என்பது Pu என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கனிம வேதியியல்]] சேர்மமகும். புளுட்டோனியத்தின் அணு எண் 94 ஆகும். கதிரியக்கத் தனிமமான இது வெள்ளிய சாம்பல் நிற தோற்றத்தில் உள்ளது. காற்றில் பட நேர்ந்தால் ஆக்சிசனேற்றம் அடைந்து மங்கலான மேலுறை உருவாகி ஒளி மங்கிப் போகிறது. ஆறு புறவேற்றுமை வடிவங்களிலும் நான்கு [[ஆக்சிசனேற்ற நிலை]]களிலும் புளுட்டோனியம் காணப்படுகிறது. [[கார்பன்]], [[ஆலசன்]]கள், [[நைட்ரசன்]], [[சிலிக்கான்]] [[ஐதரசன்]] போன்ற தனிமங்களுடன் புளுட்டோனியம் வினைபுரிகிறது. காற்றில் உள்ள ஈரத்துடன் சேர்ந்து ஆக்சைடுகளாகவும் நீரேற்றுகளாகவும் உருவாகி 70% அளவிற்கு கன அளவில் விரிவடைகிறது. இத்தனிமம் கதிரியக்கத் தன்மை கொண்டிருப்பதாலும் அது எலும்புகளில் திரளும் என்பதாலும் கையாள்வதற்கு அபாயமானதாக கருதப்படுகிறது.
 
1940 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் 60-அங்குல சைக்ளோட்ரானில் யூரேனியம்-238 ஐசோடோப்பை டியூட்டிரான் குண்டுவீச்சினால் தாக்கப்பட்டபோது புளுட்டோனியம் முதலில் உற்பத்தி செய்யப்பட்டது. அரை வாழ்வுக் காலம் 2.1 நாட்கள் மட்டுமே கொண்ட முதலாவது நெப்டியூனியம்- 238 ஐசோடோப்பு தயாரிக்கப்பட்டபோது அது பின்னர் பீட்டா சிதைவுக்கு உட்பட்டு அணு எண் 94 உம் அணு எடை 238 உம் அரைவாழ்வுக் காலம் 87.7 ஆண்டுகளும் கொண்ட இப்புதிய தனிமம் உருவானது. யுரேனசு கோளை அடிப்படையாகக் கொண்டு யுரேனியத்தின் பெயரும், நெப்டியூன் கோளை அடிப்படையாகக் கொண்டு நெப்டியூனியமும், புளுட்டோ கோளை அடிப்படையாகக் கொண்டு புளுட்டோனியமும் பெயர்களாக வைக்கப்பட்டன. போர்க்கால நடவடிக்கைகள் காரணமாக 1948 ஆம் ஆண்டு வரை இத்தனிமத்தின் கண்டுபிடிப்பு அறிவிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது. புளுட்டோனியம் என்ற தனிமம் இயற்கையில் தோன்றும் தனிமங்களில் அதிக அணு எண் கொண்ட தனிமமாக கருதப்படுகிறது. U-238 படிவுகளில் சுவடு அளவுக்கு புளுட்டோனியம் காணப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு முதல் பூமியில் மிகவும் பொதுவாக புளுட்டோனியம் நியூட்ரான் பிடிப்பு மற்றும் பீட்டா சிதைவு போன்ற செயல்பாடுகளால் தோன்றி காணப்படுகிறது.
 
புளுட்டோனியம்-239 மற்றும் புளுட்டோனியம் -241 ஆகிய இரண்டு ஐசோடோப்புகளும் பிளவுறும் தன்மையைப் பெற்றுள்ளன. இதன் பொருள் அணுக்கரு தொடர் வினைகளை இவை தக்க வைத்துக் கொள்கின்றன என்பதாகும்.அணு ஆயுதங்கள் மற்றும் அணு உலைகளில் இவ்ற்றின் பிளவுறும் தத்துவம் பயன்படுகின்றன. புளுட்டோனியம் -240 எந்தவொரு மாதிரியின் பகுதிப்பொருளாக இருந்தாலும் அது அதிகவீதத்தில் நியூட்ரான் கற்றையை உமிழ்ந்து தன்னிச்சையாகப் பிளவுறுகிறது. ஒரு புளுட்டோனிய மாதிரியில் புளுட்டோனியம் -240 இருப்பது அதை ஓர் ஆயுதத்தில் பயன்படுத்துவதை கட்டுப்படுகிறது. அல்லது உலை எரிபொருளாக இருக்கக்கூடிய அதன் தரத்தையும் கட்டுப்படுத்துகிறது, மற்றும் புளூடானியம்- 240 இன் இருப்பு சதவிகிதம் அந்த ஆயுதத்தின் தரத்தையும் ஆயுட்காலத்தையும் நிர்ணயிக்கிறது. புளுட்டோனியம்-238 ஐசோடோப்பின் அரைவாழ்வுக் காலம் 88 ஆண்டுகளாகும். இது ஆல்பா துகள்களை உமிழ்கிறது. கதிரியக்க ஐசோடோப்பு வெப்பமின் மின்னாக்கிகளில் இது வெப்ப மூலமாக பயன்படுகிறது. இம்மின்னாக்கிகள் சிலவகை விண்கலன்களில் மின்னாற்றலை வழங்குகின்றன. புளுட்டோனியம் ஐசோடோப்புகள் விலை உயர்ந்தவையாகும். மேலும் அவற்றைப் பிரித்துப் பயன்படுத்துவதும் சிக்கலான செயல்முறையாகும். எனவே குறிப்பிட்ட ஒரு புளுட்டோனியம் ஐசோடோப்பு சிறப்பாக வ்டிவமைக்கப்பட்ட உலைகளில் தயாரித்துக் கொள்ளப்படுகின்றன.
 
பயனுள்ள அளவுகளில் புளுட்டோனியம் தயாரிப்பது முதல் முறையாக இரண்டாம் உலகப்போரின் போது மன்காட்டன் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது, அப்போது முதல் அணு குண்டுகள் உருவாக்கப்பட்டன. சூலை1945 இல் நிகழ்த்தப்பட்ட டிரினிட்டி அணுகுண்டு சோதனையில் குண்டு மனிதன் வகை அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. மற்றும் ஆகத்து 1945 இல் நாகசாகியில் அணுகுண்டு வீச்சும் நிகழ்த்தப்பட்டது இவ்விரண்டு குண்டுகளிலும் புளுட்டோனியம் கருக்கள் இருந்தன. புளுட்டோனியத்தை ஆய்வுசெய்யும் மனிதர் மீதான கதிர்வீச்சு சோதனைகள் அவர்களுக்கு அறிவுறுத்தப்படாத முறையில் நடத்தப்பட்டன, போருக்குப் பின் பல மோசமான விபத்துக்கள், சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. அணுக்கரு உலைகளில் இருந்து புளுட்டோனியம் கழிவுப்பொருட்களை அகற்றுதல், பனிப்போரின் போது கட்டப்பட்ட அணுவாயுதங்களை அகற்றுவது போன்றவை அணுசக்தி பெருக்கத்தால் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மையை கொண்டடுள்ளன. மற்ற புளுட்டோனியம் ஆதாரங்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன.
 
== பண்புகள் ==
வரிசை 146:
| book=The Atomic Age
| wikt=y
}}
 
 
 
{{புளுட்டோனியம் சேர்மங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/புளுட்டோனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது