நிலவு மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 7:
 
== நிலவு மறைப்பின் வகைகள் ==
[[படிமம்:Penumbral lunar eclipse 1999 jan 31.png|280px|thumb|ஜனவரி 1999 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முழுமையான புறநிழல் நிலவு மறைப்பு ]]
[[படிமம்:Lunareclipsediagram.svg|thumb|280px|நிலவு மறைப்பின் வகைகள்]]
புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இருவேறு பகுதிகளாகப் பிரிக்கலாம். கருநிழலிற்குள், நேரடியாக கதிரவனின் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது. எனினும், கதிரவனின் பெரிய கோண அளவின் விளைவாக, கதிரவனின் ஒளி, புவியின் நிழலின் வெளிப்புறப் பகுதியில் மட்டுமே ஓரளவிற்குத் தடுப்பதாக இருக்கும். எனவே இது புறநிழல் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.[[படிமம்:Geometry of a Lunar Eclipse.svg|thumb|280px|புவியின் நிழல் நிலவில் விழுவதை விளக்கும் வரைபடம்.]]'''புறநிழல் நிலவு மறைப்பு''' என்பது புவியின் புறநிழல் வழியாக நிலவின் ஒரு பகுதி கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. அப்போது நிலவின் பகுதி இருண்டு காணப்படும். புவியின் புறநிழலிற்குள் நிலவு முழுமையாக கடந்து செல்லும் போது ஏற்படும் சிறப்பு வகை புறநிழல் மறைப்பு '''முழுமையான புறநிழல் நிலவு மறைப்பு''' எனப்படுகிறது. இது மிக அரிதாகவே ஏற்படும். மேலும் இது ஏற்படும் போது கருநிழலுக்கு மிகவும் அருகில் இருக்கும் நிலவின் பகுதி நிலவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக இருண்டு காணப்படலாம்.
வரிசை 33:
 
== நிலவு மறைப்பின் தோற்றம் ==
நிலவு புவியின் கருநிழலிற்குள் செல்லும் போது கதிரவ ஒளி புவியின் வளிமண்டலத்தால் ஒளிவிலகல் அடைந்து நிலவைச் சென்றடைகிறது. எனவே நிலவு முற்றிலும் இருண்டு விடுவதில்லை. ஒருவேளை புவியின் வளிமண்டலம் இல்லாதிருந்தால் மறைப்பின் போது நிலவு முற்றிலும் இருண்டு இருக்கும். மறைப்பின் போது கதிரவ ஒளி புவியின் நீண்ட மற்றும் அடர்த்தியான அடுக்கு வழியாக கடந்து சென்று நிலவை அடைகிறது. எனவே ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. காற்று மூலக்கூறுகள் மற்றும் சிறிய துகள்கள் மூலம் குறுகிய அலைநீளங்கள் சிதறலடைய வாய்ப்பு அதிகம்.
 
== மறைப்பு சுழற்சிகள் ==
வரிசை 41:
[[நிலவு மறைப்பு, 31 சனவரி 2018|சனவரி 31, 2018]] அன்று நிகழ்ந்த முழுமையான நிலவு மறைப்பு ''பெரு நீல இரத்த நிலவு'' என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் பெரு நிலவு, நீல நிலவு மற்றும் இரத்த நிலவு என மூன்றும் இந்நாளில் ஒன்றாக வந்தது. இதே போன்றதொரு நாள் 19 வருடங்கள் கழித்து சனவரி 31, 2037 அன்று வரவிருக்கிறது.
 
[[நிலவு மறைப்பு, 27 சூலை 2018|சூலை 27, 2018]] அன்று நிகழ்ந்த முழுமையான நிலவு மறைப்பு ஒரு குறுநிலவு மறைப்பாகும். மேலும் இது நடுநிழல் நிலவு மறைப்பும் 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட மறைப்பும் ஆகும்.
 
== இதையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/நிலவு_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது