"அழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (பராமரிப்பு using AWB)
இவ்வாறு குவியும் வெள்ளையணுக்களை நாம் காயமாறியவுடன் வெளிப்படும் வெள்ளைநிற சீழ்களின் வடிவில் காணமுடியும். இது ஆங்கிலத்தில் லீசன்சு என அறியப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் சீழ்களில் [[நிணநீர் செல்கள்|நிணநீரும்]] மிகுந்திருக்கும்.
 
[[நோய்க்காரணி]]கள் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய காரணிகள், அடிப்பட்ட அல்லது பாதிப்புக்குள்ளான [[உயிரணு]]க்கள், தீங்கு விளைவிக்கும் தூண்டுகைகள் மற்றும் எரிச்சல் தரக்கூடியப் பொருள்களுக்கு [[தமனி]] (அல்லது நாடி), [[சிரை]] (அல்லது நாளம்) ஆகிய இரத்தக்குழாய்களில் நிகழும் ஒரு சிக்கலான உயிரியல் எதிர்வினையாகும்.<ref name="pmid17223962">{{cite journal |author=Ferrero-Miliani L, Nielsen OH, Andersen PS, Girardin SE |title=Chronic inflammation: importance of NOD2 and NALP3 in interleukin-1beta generation |journal=Clin. Exp. Immunol. |volume=147 |issue=2 |pages=227–35 |year=2007 |month=February |pmid=17223962 |pmc=1810472 |doi=10.1111/j.1365-2249.2006.03261.x |url=}}</ref> இந்த எதிர்வினை தனக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தூண்டுகையை நீக்கவும் பாதிக்கப்பட்ட திசுக்கள் குணமடைதலை துவக்கவும் உயிரினங்கள் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை ஆகும். அழற்சியும் [[நோய்த்தொற்று]]ம் (infection) ஒன்றல்ல. பல நேரங்களில் நோய்த்தொற்றினால் அழற்சி ஏற்படலாம். நோய்தொற்று ஒரு புறவழிப் பெருக்க [[நுண்ணுயிர்|நுண்ணுயிரினால்]] ஏற்படுவது; அழற்சி அந்த நோய்க்காரணிக்கு எதிராக உடலானது மேற்கொள்ளும் எதிர்வினை.
 
அழற்சி என்ற எதிர்வினை இல்லாதிருக்குமேயானால் ஓர் உயிரியின் புண்களும் [[தொற்றுநோய்]]களும் குணமடையாது திசுக்கள் உயிர்வாழ்வதையே பாதிக்கும். ஆனால், நீண்டநாள் அழற்சி பல நோய்களுக்கு வித்தாக அமைகிறது. தும்மல், சுரம், தமனித் தடிப்பு, [[முடக்கு வாதம்]] போன்றன நீடித்த அழற்சியால் உண்டாவன. ஆகவே உடல் தன்னிடத்தே காண்கின்ற அழற்சியை விரைவில் சரிப்படுத்த விழைகிறது.
 
அழற்சியை ''கடுமையான'', ''நாட்பட்ட'' என இருவகையாகப் பிரிக்கலாம். ''கடுமையான அழற்சி'' தீங்குதரும் தூண்டுகைக்கு உடல் ஆற்றும் துவக்க எதிர்வினையாகும். பாதிக்கப்பட்டத் திசுக்களுக்கு [[குருதி நீர்மம்]] (blood plasma) மற்றும் [[இரத்த வெள்ளையணு]]க்களை கூடுதலாக அனுப்புகிறது. படிப்படியான உயிரியல் நிகழ்வுகள் அழற்சிக்கெதிரான வினைகளைப் புரிந்து குணமடையச் செய்கிறது. இதில் குறிப்பிட்ட இடம் சார்ந்த [[சுற்றோட்டத் தொகுதி]], [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] மற்றும் காயமடைந்த திசுவின் பல உயிரணுக்கள் இணைந்து செயல்படுகின்றன.
அழற்சியை விளைவிக்கின்ற அசாதாரணமான பெரும் சீர்கேடுகள் பலதரப்பட்ட மனித நோய்களின் அடிதளமாக உள்ளன. இத்தகு அழற்சி சீர்கேடுகளில் (உதாரணமாக [[ஒவ்வாமை]], சில [[தசைவளக்கேடு|தசையழிவு நோய்கள்]]) [[நோயெதிர்ப்பு அமைப்பு|நோயெதிர்ப்பு அமைப்பானது]] சாதாரணமாக ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான நோயெதிர்ப்பு அமைப்புச் சீர்கேடுகளில் அசாதாரணமான அழற்சி விளைகின்றது. அழற்சி நிகழ்முறைகள் [[புற்றுநோய்]], [[தமனிக்கூழ்மைத் தடிப்பு|தமனித் தடிப்பு]], ஆக்சிசன் குறைபாடுடைய இதயநோய் ஆகிய நோயெதிர்ப்புச்சாரா நோய்களிலும் ஆரம்பக் காரணிகளாகக் காணப்படுகின்றன<ref name="robspath">{{cite book | title=Robbins Pathologic Basis of Disease| last=Cotran| coauthors=Kumar, Collins| publisher=W.B Saunders Company| location=Philadelphia| isbn=0-7216-7335-X | year=1998}}</ref>.
 
பல்வேறு [[புரதம்|புரதங்கள்]] அழற்சி வினைகளில் ஈடுபட்டுள்ளன. எனவே, இவற்றில் எந்தவொரு புரதத்திலும் திடீர் [[மரபணு திடீர்மாற்றம்|மரபியல் மாற்றம்]] நிகழ்ந்து அப்புரதத்தின் சாதரணமானப் பணிகளிலோ அல்லது அப்புரத வெளிபாட்டிலோ பிறழ்வுகளையும், பழுதுகளையும் ஏற்படுத்த முடியும்.
 
அழற்சியுடன் தொடர்புடைய உடல்நலச் சீர்கேடுகளுக்கான சில உதாரணங்கள் கீழ்வருமாறு:
* [[நாள அழற்சி]]
* இடைத்திசு நீர்ப்பையழல் (Interstitial cystitis)
</div>
 
== எடுத்துக்காட்டுகள் ==
{{நோய் எதிர்ப்பாற்றல் முறைமை}}
{{அழற்சி}}
 
[[பகுப்பு:அழற்சி| ]]
[[பகுப்பு:நோய் எதிர்ப்பு முறைமைகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2743258" இருந்து மீள்விக்கப்பட்டது