உருத்திராட்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 21:
== உருத்திராக்கம் சமய நம்பிக்கை ==
 
[[படிமம்:groupofrudraksha.jpg|thumb|૩૦૦px|[[உருத்திராட்சம்]]]]
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் [[சிவன்|சிவனின்]] ''கண்களைக்'' குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என [[சிவபுராணம்]] கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன.
 
வரிசை 31:
* அகு --> அக்கு = கூர்மை, முனை, முள்முனை, முள்முனையுள்ள அக்க மணி.
 
:"உருப்புலக்கை அணிந்தவர் " - திருவானைக் கோச் செங். 4
 
* அக்கு --> அக்கம் = பெரிய அக்கமணி, 'அம்' பெருமைப் பொருட் பின்னொட்டு.
வரிசை 41:
கடவுளையே ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரால் வழிபடுவதால், 'கடவுண்மணி' முதலிய நாற்பெயரும் ஒருபொருட் சொற்களே.
 
கடவுள் மணி, முள் மணி என்பன கடவுண்மணி. முண்மணி என்று புணர்ந்தது போன்றே, கள் மணி என்பதும் கண்மணி என்று புணரும்.
 
* கண்டு --> கண்டி = முனைகளுள்ள உருத்திராக்கம்.
* கண்டி --> கண்டிகை = உருத்திராக்க மாலை.
 
மேலும், சிவன் சிவமாகி வடமொழியால் சைவமானது போல், விண்ணவனை அடையாளங் காண வைணவத்திலிருந்து தலை கீழாகப் போக வேண்டும்.
 
== தமிழில் இருந்து வடமொழிக்குப் போன வழி ==
வரிசை 64:
முத்து -->முத்தம் (பரு முத்து) அக்கம் = பருத்த சிவ மணி.
 
சைவருக்குரிய சிவ சின்னங்கள் மூன்றில் ஒன்று உத்திராட்சம்; மற்றவை திருநீறும்; திருவைதெழுத்தும்."
 
== உருத்திராக்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் ==
சாமியார்களைப் பற்றி ஒரு அடையாளம் காட்டும் போது "நெற்றியில் பட்டை", "காவிச் சட்டை", "கழுத்தில் கொட்டை" என்று வேடிக்கையாகவும், சில சமயங்களில் வினையாகவும் சொல்வதுண்டு.
 
உருத்திராக்கம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.
வரிசை 76:
=== ஒரு முகம் ===
:மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ
ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம் ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால்,இது தூய உணர்வைக் (Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும். இவர் ராஜா ஜனகர் போன்று வாழ்வர். இவர் வேண்டும் போது எல்லா சுகங்களையும் அனுபவிப்பர். எனினும் பற்றற்றவராய் இருப்பர்.
 
ஒரு முகத்து உருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும்.
வரிசை 141:
பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.
 
இப்படி ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
 
=== கௌரி சங்கர் ===
வரிசை 162:
 
== மணி அளவு ==
பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பிப் பூணுகிறார்கள். எனினும் உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் எந்த அளவு உருத்திராக்க மணி சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.
 
:நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ;
வரிசை 187:
== செபத்துக்குரிய விரல் ==
அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம், மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும், கனிஷ்டையால் இரட்சைணையும் .
[அங்குஷ்ட- கட்டை விரல்; தர்ச்சனி- ஆள்காட்டி விரல்; மத்திமை-நடு விரல்; அனாகிகை- மோதிர விரல் ; கனிஷ்டை- சுண்டு விரல்.]
 
== செபிக்கும் ஒலி ==
வரிசை 199:
 
இழிதொழிலரே ஒலித்து உச்சரிப்பர்.
 
 
1008 செபித்தல் உத்தமம்; அதிற்பாதி மத்திமம்; 108 செபித்தல் அதமம்
வரி 220 ⟶ 219:
பல்லவ அரசர்களில் பெரும்பாலோர் சைவ சமயச் சார்பும் பற்றும் உடையவர்கள். இதனை அவர்கள் இயற்பெயராலும் சிறப்புப் பெயர்களானும் அறியவரும். திருநாவுக்கரசரால் சைவம் சார்ந்தவனாகிய மகேந்திரன் மகன், வாதாபி கொண்ட முதலாம் நரசிம்ம வர்மன், காஞ்சிக்கு அண்மையில் கூரம் என்ற ஊரில் வித்யாவிநீத பல்லவேசுவரக்கிருதம் என்ற சிவாலயத்தைக் கட்டினான். காஞ்சி புரத்தில் கைலாச நாதர் கோயிலைக் கட்டியவன் இராசசிம்மன் என்னும் பல்லவ அரசனின் தந்தையாகிய பரமேசுவரவர்மன் மகா பலிபுரத்தில் 'கணேசர்' கோவில் என்ற சிவாலாயத்தை அமைத்தவன்.
 
இக்கோவிலில் பதினொரு வடமொழிச் சுலோங்ககள் கல் வெட்டில் இருக்கிறது. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும் வண்ணம் சிலேடையாக உள்ளது. அதில் இரண்டாவது, ஆறாவது சுலோகங்களில் அவ்வரசன் உருத்திராக்க மணிகளாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்தவன் என்று அறிய வருகிறது. கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் மேற்கட்டி இருப்பது காணலாம்; பெரும்பாலான தலங்களில் பட்டாடையால் அமைக்கப் பெற்றிருக்கும் திருவாரூரில் பூங்கோயிலில் "முத்து விதானம்" அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர். இங்கு கண்ட முத்து உருத்திராக்க மணியாகவும் இருக்கலாம் ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் அமைய வேண்டுவது 'உருத்திராக்க விதானம்' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட ஸ்ரீகாசி வாசி நந்தித் தம்பிரான் சுவாமிகள் பல சிவ தலங்களில் அமைக்க உதவினார். அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் காணலாம்.
 
== உருத்திராக்கம் பற்றிய அறிவியல் முடிவுகள் ==
ஒருவரின் ஆளுமையை மாற்றவும், அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பலவேறு ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் மிக்க பண்புகள் உருத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே உருத்திராக்கம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து உத்திராக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்கள் உருத்திராக்கத்தின் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன், தாம் கண்ட முடிவுகளை மீண்டும் செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.
 
உருத்திராக்கத்திற்கு, சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர். மேற்கூறிய ஆற்றல்கள் உருத்திராக்கத்தின் முகப்புகள் அல்லது முகங்கள் மேற்பரப்பிலுள்ள பகுப்புகளின் எண்ணிக்கை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய உருத்திராக்கத்தையோ அன்றேல் ஒரு தொகுதி முகங்கள் கொண்ட உருத்திராக்க மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகியன மாற்றம் பெறுகின்றன. மேலும் இந்த ஆய்வாளர்கள், உருத்திராக்க மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் நிறுவினர்.
 
உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது, மூளைக்கும் மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத் தக்கது. இந்த மணிகளின் துணையுடன் ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது.
வரி 232 ⟶ 231:
உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு மன அழுத்த நிலை குறைவது, தொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. உருத்திராக்க மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன.
 
இந்த ஆய்வாளர்களால் நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன் (Dopamine), செறொரின் (Serotinin), போன்ற செயல்பாடுகளில் உருத்திராக்க மணிகளை அணிவதால் ஏற்படும் தாக்கங்களையும் நிலைநாட்ட முடிந்தது. இத்தகைய தாக்கங்களினால் ஒருவரது ஆளுமையிலும் மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன. உருத்திராக்கத்தை அணிவோர், தமக்கு ஏற்படும் ஏனைய நன்மைகளுடன், அவர்களுடைய மன அழுத்த நிலை எதிர்பாராத அளவு குறைந்திருப்பதையும் கண்டனர். இத்தகைய மன அழுத்த நிலைகுறைவு, இதுவரை சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வதால் பெறப்பட்டுள்ளது மட்டுமே உருத்திராக்க மணிகள், ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும், மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. உருத்திராக்க மணிகள் ஒருவரை 'அல்பா மன நிலைக்கு' (Alpha state of mind) இட்டுச் செல்கின்றன.
 
யோகிகள் வியத்தகு வகையில், மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். அதாவது உடலில் தன்முனைப்புடன் கூடிய செயல்கள், தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்கள் இரண்டையும், குறிப்பாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்கள், உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின் கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக் கொணரும் போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள். இது சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல.
"https://ta.wikipedia.org/wiki/உருத்திராட்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது