எதிர்மறை ஒளிவிலகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இயற்பியல் கோட்பாடுகள்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 2:
'''எதிர்மறை ஒளிவிலகல்''' (''negative refraction'') என்னும் கருப்பொருள் நவீன [[மின்காந்தவியல்|மின்காந்தவியலின்]] பெரும்பகுதியை உள்ளடக்கியது. [[ரஷ்யா|உருசிய]] நாட்டு அறிவியலாளர் விக்டர் வெசலாகோ அவர்களின் கருத்தியல் எடுகோள்களின் படி ([[1968]])<ref name="Veselago">V. G. Veselago, Sov. Phys. Uspekhi, 10, 509 (1968)</ref>, எதிர்மறை ஒளிவிலகலை பின்வருமாறு வரையறுக்கலாம்: திசையமைவு மற்றும் ஒருபடித்தானப் பண்புகளைக் கொண்ட ஒரு பருப்பொருள் ஊடகத்தின் ஒளி உட்புகுதிறனும், ஊடுருவுதிறனும் எதிர்மறை மதிப்புகளைப் பெற்றிருக்குமாயின், அவ்வூடகத்தில் ஒளி விலகலானது, மரபுசார் பருப்பொருள்களைப் போல் அல்லாமல் எதிர்மறையாக இருக்கும். இவ்வூடகங்களின் ஒளிவிலகல் எண், எதிர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும்.
 
எடுத்துக்காட்டாக, மேற்கூறிய கருத்தியல் கொள்கையின்படி, ஊடகத்தின் ஒளிவிலகல் எண் எதிர்மறையாக இருக்குமாயின், ஒளிவிலகலானது படம் 1-இல் காட்டியுள்ளதைப் போன்று இருக்கும்.
 
==எதிர்மறை ஒளிவிலகல் எண் தெரிவும், ஆய்வகச் சோதனையும்==
பருப்பொருள் ஊடகங்களில், ஒளிவிலகல் எண்ணுக்கான வரையறை ஸ்நெல் [2] விதியின் படி பெறப்படுகிறது. எனினும் மாக்ஸ்வெல்லின் [3] விதிப்படி, ஒளிவிலகல் எண்ணை, ஊடகங்களின் உள்ளார்ந்த பண்புகளோடு பின்வருமாறு தொடர்பு படுத்த இயலும். இங்கு n என்பது ஒளி விலகல் எண்ணையும், εr என்பது ஒளி உட்புகுதிறனையும், μr என்பது ஒளி ஊடுருவுதிறனையும் குறிக்கும். εr மற்றும் μr நேர்மறை மதிப்புகளைப் பெற்றிருக்கும் பொழுது, nம் நேர்மறை மதிப்பைப் பெற்றிருக்கும். εr,μrஆகியவற்றில் ஏதேனும் ஒன்று எதிர்மறை மதிப்பைப் பெறும் பொழுது (எடுத்துக்காட்டாக, மீயுயர் அயனியாக்கப்பட்ட வளிமங்களிலும் [பிளாஸ்மாக்கள்], கண்ணுறு ஒளியில் உலோகங்களிலும் [எ.கா. தாமிரம்] εr எதிர்மறை மதிப்பைப் பெற்றிருக்கும்.), nக்குரியத் தீர்வு சிக்கலெண் முலம் பெறப்படும். εr மற்றும் μr ஆகிய இரண்டும் எதிர்மறை மதிப்பைப் பெறும் பொழுது, nக்குரியத் தீர்வுகளில் எதிர்மறை மதிப்பும் ஒரு தீர்வாக இருக்கின்றது (ஏனெனில் எந்தவொரு எண்ணின் வர்க்க மூலத்திற்கானத் தீர்வும் நேர்மறை மற்றும் எதிர்மறை மதிப்புகளைப் பெற்றிருக்கும்). இதன் மூலம் n மதிப்பிற்கானக் குறீயீட்டுத் தேர்வு(+ அல்லது -), ஊடகங்களில் ஒளிவிலகலின் திசையைப் பொருத்துத் தெரிவு செய்யப்படும் என்பது தெளிவாகிறது.
 
இயற்கையில் கிடைக்கின்ற எந்தவொரு பருப்பொருள் ஊடகத்தின் εr, μr பண்புகளும் எதிர்மறை மதிப்புகளை ஒருங்கே பெற்றிருக்கவில்லை. எனினும், கி.பி. 2001மாவது ஆண்டில், ஷெல்பை மற்றும் ஸ்மித்[4] தலைமையிலான அறிவியற் குழு, செப்புக் கம்பிகள் மற்றும் சுருள்களால் ஆன செயற்கைச் சேர்மத்தில் (படத்தைக் காண மேற்கோள் ஐந்தைச் [5] சொடுக்கவும்), எதிர்மறை ஒளிவிலகலை, நுண்ணலைகளைக் (மைக்ரோ அலைகள்) கொண்டு ஆய்வுச் சோதனையின் மூலம் நிரூபித்தனர்.
வரிசை 16:
ஒரு பருப்பொருள் ஊடகம் எதிர்மறை ஒளிவிலகல் எண்ணைப் பெற்றிருக்குமாயின், அவ்வூடகமானது, ஒரு புள்ளி ஒளிமூலத்திலிருந்து பெறப்படும் ஒளியை இரு முறை குவிக்கும். முதல் குவியம் ஊடகத்தின் உட்புறத்திலும், இரண்டாவது குவியம் ஊடகத்தின் வெளிப்புறத்திலும் இருக்கும். படம் 2இல் காண்பிக்கப்பட்டுள்ள கதிர் வரைபடம், எதிர்மறை ஊடகத்தில் இரட்டைக் குவிதலை விளக்குகின்றது.
இரட்டை ஒளிக்குவிதல் நிகழ்வு
எதிர்மறை ஊடகங்களில் இரட்டை ஒளிக்குவிதல் நிகழ்வு, விக்டர் வெசலோகோவின் கருத்தியல் கோட்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மேலும் இஃது இங்கிலாந்து நாட்டு அறிவியலார் சான் பென்ட்ரி அவர்களால் கோட்பாடுகள் மற்றும் ஆய்வுகள் [6] மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
[[File:Refraction4.jpg|right|thumb|200px|படம்-3 தட்டை ஒளிவில்லை]]
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மறை_ஒளிவிலகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது