"இயற்கைத் தேர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category விலங்கின நடத்தையியல்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
{{பரிணாம உயிரியல்}}
'''இயற்கைத் தேர்வு''' (''natural selection'') என்பது [[சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழலின்]] பண்புகளைப் பொறுத்து ஒரு [[சனத்தொகை]]யின் குறிப்பிட்ட [[உயிரியல்]] குணவகைகள், மற்றும் [[மரபியல்]] குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இது [[அறிவியல்]] சரித்திரத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பல [[நூற்றாண்டு]]களாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைச் சீராக எடுத்துக் கூறியவர் [[சார்லஸ் டார்வின்]] என்பவராகும். இயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் பயன்படுத்தியதற்குக் காரணம் இதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வே [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்சி]]க்கான ஒரு மத்திய பொறிமுறை.
 
எல்லா சனத்தொகைகளிலும் வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் [[மரபணு]]த் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வுகளாகும். இத்தகைய பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுமாயின் அவை தொடர்ந்த [[சந்ததி]]களூடாக எடுத்துச் செல்லப்படும். ஒரு [[உயிரினம்]] தனது வாழ்நாளில், அதன் சுற்றுச்சூழலுடன் இடைவிடாது செயலெதிர்ச்செயலில் ஈடுபடுவதால், பல மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இதில் சுற்றுச்சுழல் எனும்போது, அது குறிப்பிட்ட உயிரினத்திற்கு வெளியில் காண்பவை மட்டுமல்ல. இதில் [[உயிரணு]]க்களின் [[மூலக்கூற்று உயிரியல்]], ஏனைய உயிரணுக்களுடனான தொடர்புகள், வேறு உயிரினங்கள், வேறு சனத்தொகைகள், வேறு இனங்கள் போன்றவற்றுடன், உயிரற்ற சுற்றுச்சூழலும் அடங்கும். ஒரு தனிப்பட்ட உயிரினம் அதில் ஏற்படும் தனிமுரண்பாட்டு மாறுதல்களால், வேறு உயிரினங்களை விடச் சிறந்த முறையில் சுற்றுச்சூழலில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் காரணத்தினால் பிழைத்து தொடர்ந்தும் தப்பி வாழக் கூடியதாக இருக்கும்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2743880" இருந்து மீள்விக்கப்பட்டது