வெப்ப விரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Gravesande ring.png|thumb|200px|வெப்பத்தினால் பொருட்கள் விரிவடைவதைக் காட்டும் சோதனைக்கான கருவி.]]
'''வெப்ப விரிவு''' (''Thermal expansion'') என்பது [[வெப்பநிலை]] மாற்றத்தோடு பொருட்களின் [[கனவளவு]] மாறுவதைக் குறிக்கும். எல்லாப் பொருட்களும் இவ்வியல்பைக் கொண்டுள்ளன. ஒரு பொருளைச் சூடாக்கும்போது, அதன் [[துணிக்கை]]கள் செயலூக்கம் பெற்றனவாகப் பிற துணிக்கைகளிலிருந்து கூடுதலான சராசரித் தூரத்தைப் பேண முயல்கின்றன. இதுவே பொருள் விரிவடைவதற்கான காரணம் ஆகும். வெப்பநிலை கூடும்போது பொருள்கள் சுருங்குவது மிகமிகக் குறைவு. சில பொருட்கள் குறிப்பிட்ட குறுகிய வெப்பநிலை எல்லைக்குள் இதற்கு விதிவிலக்கான இயல்புகளைக் காட்டுவது உண்டு. எடுத்துக்காட்டாக 0°ச - 4 °ச வெப்பநிலை எல்லையுள் [[நீர்|நீரின்]] வெப்பநிலை கூடும்போது அது சுருங்குவதைக் குறிப்பிடலாம். ஓரலகு வெப்பநிலை ஏற்றத்துக்கு ஒரு குறித்த பொருளில் ஏற்படும் விரிவு வீதம் அப்பொருளின் '''வெப்ப விரிவுக் குணகம்''' ஆகும். இது பொதுவாக வெப்பநிலைக்கு ஏற்ப வேறுபடுகின்றது.
 
==மேலோட்டம்==
===விரிவை எதிர்வுகூறல்===
ஒரு நிலைச் சமன்பாடு இருக்குமானால் குறிப்பிட்ட வெப்பநிலை, அமுக்கம் மற்றும் பிற நிலைமைகளில் எவ்வளவு வெப்ப விரிவு ஏற்படும் என்பதை எதிர்வு கூற முடியும்.
 
===காரணிகள்===
வரிசை 24:
==எடுத்துக்காட்டுகளும் பயன்பாடுகளும்==
[[File:LYON T3 Meyzieu Gare - appareil de dilatation.JPG|thumb|250px|தொடர்வண்டித் தண்டவளங்களைப் பொருத்தும்போது வெப்ப விரிவுக்கு இடம் தருவதற்காக இரண்டு தண்டவாளங்களிடையே சிறு இடைவெளி விட்டிருப்பதைக் கவனிக்கவும்.]]
கட்டிடங்கள், [[பாலம்|பாலங்கள்]] போன்ற பெரிய அமைப்புக்களை வடிவமைத்தல்; [[அளவு நாடா]]க்களையும், [[சங்கிலி]]களையும் பயன்படுத்தி நிலங்களை அளத்தல், சூடான பொருட்களை வார்த்தெடுப்பதற்கான அச்சுக்களை வடிவமைத்தல்; போன்ற குறிப்பிடத்தக்க அளவு வெப்ப விரிவுகளை எதிர்பார்க்கக்கூடிய பல [[பொறியியல்]] செயற்பாடுகளில் ஈடுபடும்போதும், பொருட்களின் விரிவையும் சுருங்குதலையும் கவனத்திற்கு எடுத்தல் அவசியம்.
 
கூறுகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தும் வேலைகளின் போதும் பொருட்களின் வெப்ப விரிவைப் பயன்படுத்துவது உண்டு. எடுத்துக்காட்டாக, [[துளையுருளை]]களைத் தண்டுகளின்மேல் இறுக்கமாகப் பொருத்தும் தேவையேற்படும் போது துளையுருளையின் துளையின் விட்டம் தண்டின் விட்டத்திலும் சற்றுச் சிறிதாக இருக்கும்படி செய்யப்படும். பொருத்தும்போது துளை தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக வரும்வரை துளையுருளையைச் சூடாக்கிப் பொருத்துவர். பின்னர் சூடு ஆறும்போது துளையுருளை தண்டைச்சுற்றி இறுக்கமாக இருக்கும். இது சுருங்குப் பொருத்து எனப்படும்.
 
[[பகுப்பு:வெப்பவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வெப்ப_விரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது