சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
நமது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் தொடர்ந்து ஊட்டச்சத்துக்களும், ஆக்சிசனும் தேவை. உயிரணுக்களில் ஏற்படும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றங்கள்]] மூலம் அங்கு தோன்றும் கழிவுப்பொருட்களையும், [[காபனீரொட்சைட்டு]] போன்றவற்றையும் வெளியேற்றுதலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உடலின் பெரும்பாலான உயிரணுக்கள் ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சப்படும் இடமான உணவுப்பாதை அல்லது கழிவுகளை நீக்கும் இடமான சிறுநீரகங்களுக்கு அருகிலோ இருப்பதில்லை. எனவே உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் சுற்றோட்டத் தொகுதி அமைந்துள்ளது. [[இதயம்|இதயத்தின்]] இயக்கத்தால் குருதியைக் கடத்தும் [[குருதிக்குழல்]]கள் (அல்லது இரத்தக் குழாய்கள்) மூலம் கடத்தல் நடைபெறுகின்றது.
 
இத்தொகுதியை ஒரு குருதி வழங்கும் வலையமைப்பாக மட்டும் பார்க்க முடியும். எனினும் சிலர் இத் தொகுதி, குருதிக்கான வலையமைப்புடன், [[நிணநீர்|நிணநீரைக்]] (Lymph) கொண்டு செல்லும் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யின் ஒரு பகுதியான [[நிணநீர்த் தொகுதி]]யையும் (Lymphatic system) உள்ளடக்கியது என்கின்றனர்<ref name="ReferenceA">{{DorlandsDict|nine/000951445|circulatory system}}</ref>.
 
[[மனிதன்|மனிதரும்]], பிற [[முதுகெலும்பி]]களும் மூடிய குருதிக் குழாய்த் தொகுதியைக் கொண்டுள்ளன. மூடிய குருதிக் குழாய்த் தொகுதியில் குருதி ஒருபோதும், [[தமனி|தமனி அல்லது நாடி]], [[சிரை|சிரை அல்லது நாளம்]] மற்றும் நுண்துளைக் குழாய்களைக் கொண்ட வலையமைப்பை விட்டு வெளியேறுவதில்லை. சில [[முதுகெலும்பிலி]]களில் திறந்த குருதிக் குழாய்த்தொகுதி காணப்படுகின்றது. சில தொல்லுயிர்களில் சுற்றோட்டத் தொகுதியே இருப்பதில்லை. நிணநீர்த் தொகுதி எப்போதும் திறந்த தொகுதி ஆகும்.<ref>{{cite book|author=Sherwood, Lauralee |title=Human Physiology: From Cells to Systems |url=https://books.google.com/books?id=I9qH3eZ1pP0C&pg=PT401 |year=2011 |publisher=Cengage Learning |isbn=978-1-133-10893-1 |pages=401–}}</ref>
 
== மனிதச் சுற்றோட்டத் தொகுதி ==
மனிதச் சுற்றோட்டத் தொகுதியின் முக்கிய கூறுகள் [[இதயம்]], [[நுரையீரல்]], [[குருதி]], [[குருதிக்குழல்|குருதிக் கலங்கள்]] என்பனவாகும்<ref>{{DorlandsDict|eight/000105264|cardiovascular system}}</ref>. ஒரு சுற்றோட்டத் தொகுதி, குருதியை [[ஆக்சிசன்|ஒட்சிசனேற்றுவதற்காக]] [[நுரையீரல்|நுரையீரலுக்குக்]] கொண்டுசெல்லும், ஒரு சுற்றைக் கொண்ட [[நுரையீரல் சுற்றோட்டம்|நுரையீரல் சுற்றோட்டத்தையும்]] (pulmonary circulation); ஒட்சிசனேற்றப்பட்ட குருதியை உடலின் பிற உறுப்புக்களுக்குக் கொண்டு செல்லும் [[தொகுதிச் சுற்றோட்டம்|தொகுதிச் சுற்றோட்டத்தையும்]] (systemic circulation) உள்ளடக்கியது <ref name="PubMed">{{cite journal|title=How does the blood circulatory system work?|journal=PubMed Health|date=1 August 2016|url=https://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0072434/}}</ref>.<br>
 
ஒரு முதிர்ந்த மனிதனில் சராசரியாக 4.7 - 5.7 லீட்டர் குருதி சுற்றியோடிக்கொண்டிருக்கும். இது கிட்டத்தட்ட மனித உடல்நிறையின் 7% ஆகும்.<ref>{{cite web|last=Pratt|first=Rebecca|title=Cardiovascular System: Blood|url=https://app.anatomyone.com/systemic/cardiovascular-system/blood|archive-url=https://web.archive.org/web/20170224023239/https://app.anatomyone.com/systemic/cardiovascular-system/blood|dead-url=yes|archive-date=2017-02-24|work=AnatomyOne|publisher=Amirsys, Inc.}}</ref> சுற்றோட்டத் தொகுதியுடன் இணைந்து, [[சமிபாட்டுத்தொகுதி]] செயற்படுவதனால், இதயம் சுருங்கி விரிவதன்மூலம் உடல் பகுதிகள் அனைத்துக்கும் குருதி சுற்றியோடச் செய்வதற்கான ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்து கிடைக்கிறது.<ref name="Guyton">{{cite book|title=Guyton Textbook of Medical Physiology|edition=10|author1=Guyton, Arthur |author2=Hall, John |year=2000|isbn= 072168677X}}</ref>
 
===தமனி===
வரி 21 ⟶ 20:
 
===சிரைகள்===
''சிரைகள்''' அல்லது '''நாளங்கள்''' (''Veins'') என்பவை [[இருதயம்|இருதயத்தை]] நோக்கி [[குருதி]]யை எடுத்துச் செல்லும் [[குருதிக்குழல்]]கள் ஆகும். தந்துகிகளிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற அசுத்தக்குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக [[நுரையீரல் சிரை]]யும், [[தொப்புள் சிரை]]யும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன.
 
சிரைகளுக்கு மாறுபாடாக, [[தமனி]]கள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன. சிரைகள் குருதியை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து [[இதயம்|இதயத்திற்கு]] எடுத்துச் செல்கின்றன. உடல் குருதி ஓட்டத்தில் ஆக்சிசனேற்றப்பட்ட குருதியானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் [[காபனீரொக்சைட்]]டு நிறைந்த குருதி சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. [[குருதி]]யானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் [[நுரையீரல்|நுரையீரலுக்கும்]] கொண்டு செல்லப்படுகிறது. [[நுரையீரல்|நுரையீரலில்]] காபனீரொக்சைட்டு வெளியேற்றப்பட்டு, மீண்டும் ஆக்சிசனேற்றம் செய்யப்படும் குருதியானது நுரையீரல் சிரை மூலம் இதயத்தின் இடது மேலறைக்குச் செல்லும். அங்கிருந்து இடது கீழறைக்குச் செல்லும் குருதி மீண்டும் உடலின் பல பக்திகளுக்கும் கொண்டு செல்லப்படும்.
வரி 40 ⟶ 39:
சுற்றோட்டத் தொகுதியின் மற்றோர் முக்கிய உறுப்பு நுரையீரல் ஆகும். இது [[உயிரினம்|உயிரினங்கள்]] மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு [[மூச்சுவிடல்]] என்று பெயர். [[வாயுப் பரிமாற்றம்]] இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் [[ஆக்சிசன்|ஆக்சிசனை]] உள் எடுத்துக்கொள்வதற்கும் [[காபனீரொக்சைட்டு]] [[வளிமம்|வளிமத்தை]] வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 [[கன மீட்டர்]] (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.
 
[[மூக்கு|மூக்கின்]] வழியாக நாம் உள்ளிழுக்கும் [[காற்று]], மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes) இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (Bronchi) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் (Alveoli) எனப்படும் காற்றுப்பைகளில் முடிவுறும். இந் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த [[கார்பனீரொசைடு]] நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பனீரொசைட்டை வெளியேற்றி, புதிய [[aஅக்சிசன்|ஆக்சிசனை]] ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிரைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் [[வளிமப் பரிமாற்றம்]] நிகழ்கின்றது.
 
பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற [[நீர்மம்]] சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள நுண்மயிர்கள், மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்.<ref>[http://chittarkottai.com/wp/2016/02/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/]</ref>
வரி 46 ⟶ 45:
== சுற்றோட்டத் தொகுதி நோய்கள் ==
பல நோய்கள் சுற்றோட்டத் தொகுதியைப் பாதிக்கின்றன. [[இதயக் குழலிய நோய்]] இதய குழலிய அமைப்பைப் பாதிக்கும் மற்றும் நிணநீரிய நோய்கள் நிணநீரிய அமைப்பை பாதிக்கும். இதயத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் இதயவியல் மருத்துவர்கள் ஆவர். இதயமார்பக நிபுணர்கள் நெஞ்சக பகுதிக்குள் இதய சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யவும் இவர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். குழலிய அறுவை மருத்துவர்கள் சுற்றோட்ட அமைப்பு பகுதிகளில் கவனம் செலுத்துகின்றனர்
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுற்றோட்டத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது