"பறக்கும் இடியாப்ப அரக்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
சி (பராமரிப்பு using AWB)
[[படிமம்:Touched by His Noodly Appendage.jpg|right|thumb|300px|[[மைக்கலாஞ்சலோ]]வின் புகழ்பெற்ற ''[[ஆதாம்|ஆதாமின்]] படைப்பு'' ஓவியத்தில் கடவுளுக்குப் பதிலாகப் பறக்கும் இடியாப்ப அரக்கனைப் புகுத்தியுள்ள இப்படம் பாசுத்தாஃபாரினியத்தின் (''Pastafarianism'' ) அடையாளச் சின்னமாக நிலைபெற்றுவிட்டது.]]
'''பறக்கும் இடியாப்ப அரக்கன்''' (''Flying Spaghetti Monster'') என்பது ”பறக்கும் இடியாப்ப அரக்கன் திருச்சபை” அல்லது ”பாசுத்தாஃபாரியனியம்” (''Pastafarianism'') என்ற [[பகடி சமயம்|பகடி சமயத்தின்]] கடவுள். இச்சமயமும் கடவுளும் 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் பாபி எண்டர்சன் என்ற [[கல்லூரி]] மாணவரால் உருவாக்கப்பட்டன. [[அமெரிக்கா]]வின் [[கேன்சசு]] மாநிலத்தில் கல்வி வாரியம் அம்மாநிலப் பள்ளிகளில் [[படிவளர்ச்சிக் கொள்கை]]க்கு மாற்றாக [[நுண்ணறிவு வடிவமைப்புக் கொள்கை]]யைப் பாடமாக அனுமதித்தற்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் எண்டர்சன் இவற்றை உருவாக்கினார். கேன்சசு வாரியத்துக்கு ஒரு திறந்த கடிதம் எழுதிய எண்டர்சன், அதில் [[நுண்ணறிவு]] [[வடிவமைப்பு|வடிவமைப்பைப்]] பாடமாக்கினால், தான் நம்பும் “பறக்கும் இடியாப்ப அரக்க”னையும் பாடமாக்க வேண்டும் என்று நையாண்டி செய்தார். இந்த அரக்கன் [[இடியாப்பம்]] மற்றும் [[இறைச்சி]] உருண்டைகளால் செய்யப்பட்டதென்றும் தனது [[சமயம்|சமய]] நம்பிக்கையின் பெயர் பாசுத்தாஃபாரினியம் (பாசுத்தா (மாச்சேவை) + [[ராசுத்தாஃபாரினியம்]]) என்றும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
 
எண்டர்சனின் [[இணையத்தளம்|இணையதளத்தில்]] வெளியான அக்கடிதம் விரைவில் உலகப் புகழ்பெற்று, ஒரு இணையத் [[தோற்றப்பாடு|தோற்றப்பாடாகவே]] ஆகிவிட்டது. பின் இடியாப்ப அரக்கனைப் பற்றி எண்டர்சன் ஒரு [[நூல்|நூலையும்]] எழுதினார். பல்வேறு மதங்களின் புனித விசயங்களை நையாண்டி செய்து இப்பகடி மதத்தின் மைய நம்பிக்கைகளும், புனித புத்தகங்களும், விழா நாட்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்க [[இறைமறுப்பு|இறைமறுப்பாளர்களும்]], சமய [[அடிப்படைவாதம்|அடிப்படைவாதத்தை]] எதிர்ப்பவர்களும் இடியாப்ப அரக்கனை வரவேற்று நுண்ணறிவு கோட்பாட்டை எதிர்க்கும் இயக்கத்தின் சின்னமாகவே அதை மாற்றிவிட்டனர். அமெரிக்காவில் நுண்ணறிவுக் கோட்பாட்டை பாடமாக மாற்றும் முயற்சிகள், பொதுவெளியில் சமயத்தைப் புகுத்தும் முயற்சிகள் ஆகியவற்றை நையாண்டி மூலம் எதிர்கொள்ள தற்போது இடியாப்ப அரக்கன் பயன்படுத்தப்படுகிறது.
{{quote|இம்மூன்று கோட்பாடுகளுக்கும் நமது [[அறிவியல்]] வகுப்புகளில் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கு பின்னர் இவ்வழக்கம் உலகமெங்கும் பரவும். வகுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நுண்ணறிவு வடிவமைப்புக்கும், மூன்றில் ஒரு பங்கினை எனது பறக்கும் இடியாப்ப அரக்கன் கோட்பாட்டிற்கும் மீதியிருப்பதை மட்டும் ஆணித்தரமான சான்றுகளைக் கொண்ட அறிவியல் கோட்பாட்டுக்கு [அதாவது படிவளர்ச்சிக் கொள்கைக்கு] கொடுப்போம்.|கடிதத்தில் பாபி எண்டர்சன்<ref name="openletterabout">{{cite web | title=Discussion of the Open Letter | publisher=Henderson, Bobby | url=http://www.venganza.org/about/open-letter/discussion/ | accessdate=2007-04-07 }}</ref>}}
 
நுண்ணறிவுக் கோட்பாட்டினர், வடிவமைப்பாளர் (கடவுள்) யார் என்பதைத் தெளிவாக வரையறுக்கவில்லை. அவர்களது வரையறைகளின்படி எதை வேண்டுமானாலும் வடிவமைப்பாளராகக் கொள்ள முடியும்; அந்த வடிவமைப்பாளர் ஒரு “பறக்கும் இடியாப்ப அரக்கனாக” ஏன் இருக்கக்கூடாது என்பது எண்டர்சனின் வாதம். நான் சமயங்களை எதிர்ப்பவனல்ல, ஆனால் சமயக் கோட்பாடுகள் அறிவியல் வேடமிடுவதை எதிர்க்கிறேன். [[கடவுள்]] ஒருவர் இருந்து அவருக்கு [[நுண்ணறிவு]] இருந்தால், கண்டிப்பாக அவருக்கு [[நகைச்சுவை]] உணர்வுமிருக்கும் [எனவே அவர் எனது கிண்டலைத் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்]” என்று தன் நிலைப்பாட்டை விளக்கினார் எண்டர்சன்.<ref name="randi">{{cite web |url=http://www.randi.org/jr/200509/091605church.html#1 |title=Church of the Flying Spaghetti Monster |accessdate=2007-02-05 |work=[[James Randi Educational Foundation]] article September 16, 2005}}</ref><ref name="Escapist">{{cite news|url=http://www.escapistmagazine.com/articles/view/issues/issue_142/3048-In-His-Name-We-Pray-Ramen.5|title=In His Name We Pray, Ramen|last=Pitts|first=Russ|date=2005-09-16|work=Escapist magazine|accessdate=26 November 2009}}</ref>
 
இக்கடிதத்திற்கு கேன்சசு கல்வி வாரியம் பதிலளிக்காததால், மே 2005இல் தனது [[வலைத்தளம்|வலைத்தளத்தில்]] அதனைப் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டார் எண்டர்சன். வெகு விரைவில் அது ஒரு [[இணையத் தோற்றப்பாடு|இணையத் தோற்றப்பாடாகவே]] ஆகிவிட்டது. அதன் புகழ் பரவிய பின்னர், கேன்சசு கல்வி வாரிய உறுப்பினர்கள் அவருக்கு பதிலளித்தனர். நுண்ணறிவுத் தோற்றப்பாடு பாடமாக்கப்படுவதை எதிர்த்த மூன்று உறுப்பினர்கள் எண்டர்சனுக்கு சாதகமாக பதிலளித்தனர். ஆனால் அதனை ஆதரித்த ஒரு உறுப்பினர் “கடவுளைப் பகடி செய்வது கடும் குற்றம்” என்று எண்டர்சனை எச்சரித்தார். இப்பதில்களை எண்டர்சன் தனது தளத்தில் வெளியிட்டார். மேலும் தன்னைத் திட்டி வரும் கடிதங்கள், கொலை மிரட்டல்கள் அனைத்தையும் தனது தளத்தில் வெளியிட்டார். அவர் தனது கடிதத்தை வெளியிட்ட ஓராண்டுக்குள் அவருக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்தன. இதுவரை 60,000 கடிதங்கள் இது குறித்து தனக்கு வந்துள்ளதாகவும், அவற்றுள் 95% ஆதரவாகவும் மீதியுள்ளவை, “நீ நரகத்துக்குத் தான் போவாய்” என்று சபிப்பதாகவும் எண்டர்சன் தெரிவித்துள்ளார். அவரது வலைத்தளம் இதுவரை பல லட்சம் முறை பார்வையிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/dna/h2g2/A18740559#back3|title=The Flying Spaghetti Monster|date=2007-02-01|work=h2g2|publisher=BBC|accessdate=26 November 2009}}</ref><ref>{{cite web|url=http://www.boingboing.net/2006/07/31/fsm-hate-mail.html|title=FSM hate mail|last=Frauenfelder|first=Mark|date=2006-07-31|work=BoingBoing|accessdate=31 December 2009}}</ref><ref>{{cite news|url=http://www.thestar.com/sciencetech/article/168629|title=In praise of an alternate creation theory: The Church of the Flying Spaghetti Monster gains infamy and faith|date=2007-01-07|work=[[Toronto Star]]|accessdate=31 December 2009 | first=Leslie | last=Scrivener}}</ref><ref name="Comment">{{cite web|url=http://www.venganza.org/about/open-letter-discussion/|title=Comment on the Open Letter|last=Henderson|first=Bobby|date=2006-08|work=Church of the Flying Spaghetti Monster|accessdate=30 December 2009}}</ref>
=== பறக்கும் இடியாப்ப அரக்கனின் நற்செய்தி ===
[[படிமம்:The Gospel of the Flying Spaghetti Monster.jpg|right|thumb|250px|''பறக்கும் இடியாப்ப அரக்கனின் நற்செய்தி''யின் முன்னட்டை]]
டிசம்பர் 2005இல் வில்லார்ட் பதிப்பகம் பாபி எண்டர்சனுக்கு பாசுத்தாஃபாரியனியம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுத 80,000 [[அமெரிக்க டாலர்]]களை முன்பணமாக அளித்தது. மார்ச் 2006 இல் “பறக்கும் இடியாப்ப அரக்கனின் [[நற்செய்தி]]” என்ற பெயரில் அப்புத்தகம் வெளியானது. எண்டர்சனின் திறந்த கடிதத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டிருந்த பாசுத்தாஃபாரியனிய நம்பிக்கைகள் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டன. இப்புத்தகத்தில் மத அடிப்படைவாதிகளைப் போலவே படிவளர்ச்சி உயிரியலில் ஓட்டைகளைக் கண்டுபிடித்து, அவற்றுக்கு இடியாப்ப அரக்கனைக் கொண்டு விளக்கங்கள் அளிக்கிறார் எண்டர்சன். மேலும் 30 நாட்கள் சோதனை அடிப்படையில் பாசுத்தாஃபாரினியத்தை பின்பற்றிப் பார்க்குமாறு வாசகர்களை அழைக்கிறார். பிடிக்கவில்லையென்றால், வாசகர்கள் திரும்பி அவர்களது பழைய மதங்களுக்கே சென்று விடலாமென்றும், கண்டிப்பாக அவை அவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமென்றும் சொல்லுகிறார். இதுவரை அரக்கனின் நற்செய்தி 1,00,000 படிகள் விற்பனையாகியுள்ளது.<ref name="newyorkmag"/><ref>{{cite news | first=Katleen | last=Craig | title=Passion of the Spaghetti Monster | date=December 22, 2005 | publisher=Wired News | url=http://www.wired.com/politics/law/news/2005/12/69905 |archiveurl=https://archive.is/1ilS|archivedate=June 29, 2012}}</ref><ref name = "Austin">{{cite web|url=http://www.austinchronicle.com/gyrobase/Issue/review?oid=oid%3A356663|title=The Gospel of the Flying Spaghetti Monster|last=Brenner|first=Wayne|date=2006-04-14|work=[[The Austin Chronicle]] |accessdate=2009-10-18}}</ref><ref name="Telegraph2" /><ref>''The Gospel of the Flying Spaghetti Monster'', p.xiv.</ref>
 
''[[சயிண்டிஃபிக் அமெரிக்கன்]]'' இதழ் இப்புத்தகத்தை “[[நுண்ணறிவு வடிவமைப்பு]] மீதான ஒரு விரிவான நையாண்டி” என்றும் “நல்ல நகைச்சுவை” என்றும் பாராட்டியுள்ளது. 2006ஆம் ஆண்டு இந்நூல் குவில் விருதுக்கு நகைச்சுவைப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டது. பல நூல் விமர்சகர்களும் இதனைப் பாராட்டினர். ஆனால் [[பழமைவாதம்|பழமைவாத]] கண்டுபிடிப்புக் கழகத்தின் (நுண்ணறிவு வடிவமைப்பு கோட்பாட்டை உருவாக்கியவர்கள்) கேசி லசுகின், இந்நூல் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டை]] அவமதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.<ref name="Telegraph2">{{cite news|url=http://www.telegraph.co.uk/culture/books/3655035/Was-the-world-created-by-god-evolution-or-pasta.html|title=Was the world created by god, evolution or pasta?|last=Singh|first=Simon|date=2006-09-03|work=The Daily Telegraph|accessdate=28 November 2009 | location=London}}</ref><ref name="Book">{{cite web|url=http://www.venganza.org/worship/fsm-book/|title=The FSM Book |last=Henderson|first=Bobby|year=2006|work=Church of the Flying Spaghetti Monster|publisher=Venganza.org|accessdate=2009-10-18}}</ref><ref name="Luskin FSM and Christmas">{{cite news|url=http://www.evolutionnews.org/2006/12/celebrating_christmas_at_the_c.html|title="Celebrating" Christmas at the "Church of the Flying Spaghetti Monster"|last=Luskin|first=Casey|date=2006-12-25|work=Evolution News & Views|publisher=[[Discovery Institute]]|accessdate=26 November 2009}}</ref>
 
=== ஒழுங்கற்ற திருமுறைகள் ===
அரக்கனின் நற்செய்தி நூல் எழுதப்படுவதற்கு முன்பே, பாசுத்தாஃபாரினியத்துக்கு ஒரு புனித நூலொன்றை உருவாக்கும் முயற்சி தொடங்கிவிட்டது. செப்டம்பர் 2005இல் வென்கான்சா இணைய மன்றத்தின் பாசுத்தாஃபாரினிய உறுப்பினர் ஒருவர் தன் சக பாசுத்தாஃபாரினியர்களின் கருத்துகளைத் திரட்டி ”ஒழுங்கற்ற திருமுறைகள்” என்ற பெயரில் தொகுக்கும் திட்டத்தை அறிவித்தார். சோலிப்சி என்ற அந்தப் பயனர் தொடங்கிய அத்திட்டம் 2010இல் முடிவடைந்தது; ''ஒழுங்கற்ற திருமுறைகள் - பறக்கும் இடியாப்ப அரக்கனின் திருச்சபையின் புனித நூல்'' (Loose Canon, a Holy Book of the Church of the Flying Spaghetti Monster) என்ற பெயரில் வெளியான அந்த நூல் இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்யும்படி வெளியிடப்பட்டது.<ref name="Official Site of the Loose Canon">{{cite web|url=http://fsm-consortium.com/official-site-of-the-loose-canon/|title=Official Site of the Loose Canon|year=2010|publisher=fsm-consortium.com|accessdate=2010-06-14}}</ref><ref name="The Big Announcement">{{cite web|url=http://www.venganza.org/forum/viewtopic.php?f=15&t=1899|title=The Big Announcement|year=2005|publisher=Venganza.org|accessdate=2010-04-25}}</ref>
 
ஒழுங்கற்ற திருமுறைகளிலிருந்து சில வாசகங்கள்:
''டெய்லி டெலிகிராஃப்'' இதழில் “நுண்ணறிவு கோட்பாட்டின் அற்பத்தனத்தை வெளிக்கொணர இடியாப்ப அரக்கன் ஒரு அட்டகாசமான வழி” என்று வர்ணித்த [[சைமன் சிங்]], அறிவியலுக்காகவும், [[பகுத்தறிவு]]க்காகவும் ஒரு கூட்டத்தைத் திரட்டிய எண்டர்சனுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பல வெகுஜன ஊடகங்களிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும் இடியாப்ப அரக்கன் தோற்றப்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. படிவளர்ச்சி குறித்த விவாதம் வெகுஜன பண்பாட்டில் வெளிப்படுவதையே இத்தோற்றப்பாடு குறிக்கிறது என கருதப்படுகிறது. எண்டர்சனின் இணையத்தளத்தில் பல குறிப்பிடத்தக்க அறிவியலாளர்கள் இடியாப்ப அரக்கன் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.<ref name="Telegraph2" /><ref>{{cite journal|last=Lee|first=Brendan|year=2006|title=Kitzmiller v. Dover Area School District: Teaching Intelligent Design in Public Schools|journal=Harvard Civil Rights-Civil Liberties Law Review|publisher=Harvard Law School|volume=41|page=10|url=http://www.law.harvard.edu/students/orgs/crcl/vol41_2/lee.pdf|accessdate=2009-12-27}}</ref><ref>{{cite news|url=http://www.guardian.co.uk/education/2005/sep/01/schoolsworldwide.world|title= Pass notes No 2,637 The Flying Spaghetti Monster|date=2005-09-01|work=The Guardian|accessdate=28 December 2009 | location=London}}</ref><ref>{{cite news|url=http://www.guardian.co.uk/technology/blog/2005/aug/20/intelligentdes|title='Intelligent Design' and Pastafarianism|last=Schofield|first=Jack|date=2005-08-20|work=The Guardian|accessdate=2010-09-19 | location=London}}</ref>
 
இவ்வியக்கம் சமய பழமைவாதிகளாலும், நுண்ணறிவுக் கோட்பாட்டு இயக்கத்தினராலும், கடுமையான கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது. படைப்பு போன்ற ஆழமான விசயத்தை மேலோட்டமாகப் பகடியாகப் பார்க்கிறார்கள், நுண்ணறிவுக் கோட்பாட்டை, பழைய படைப்புவாதத்தைப் போலவே பாவிக்கிறார்கள், கடவுளை அவமதிக்கிறார்கள், தங்கள் உலக நோக்கைத் தவிர மற்ற உலக நோக்குகளை மதிக்க மறுக்கிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் இடியாப்ப அரக்கன் இயக்கத்தினரின் மீது சுமத்தப்படுகின்றன.<ref name="usatoday" /><ref name="Luskin South Park">{{cite web|url=http://www.evolutionnews.org/2008/08/the_proper_rebuttal_to_the_fly.html|title=The Proper Rebuttal to the Flying Spaghetti Monster: Cartoon Satire on South Park|last=Luskin|first=Casey|date=2008-08-13|work=Evolution News & Views|publisher=Discovery Institute|accessdate=26 November 2009}}</ref><ref>{{cite news|url=http://www.boston.com/news/globe/editorial_opinion/oped/articles/2005/10/02/the_timeless_truth_of_creation/|title=The timeless truth of creation|last=Jacoby|first=Jeff|date=2005-10-02|work=The Boston Globe|publisher=Globe Newspaper Company|accessdate=26 November 2009}}</ref><ref name="AiG">{{cite web|url=http://www.answersingenesis.org/articles/2008/01/22/flying-spaghetti-monster|title=The Flying Spaghetti Monster: A harmless joke, a substantial misunderstanding, or a sacrilegious quasi-caricature of the one true God?|last=Gallings|first=Peter|date=2008-01-22|work=Answers in Genesis|accessdate=23 December 2009}}</ref>
 
பறக்கும் இடியாப்ப அரக்கனுக்கு கிடைத்துள்ள புகழால், அது [[ரசலின் தேனீர் கேத்தல்]] என்ற இறைமறுப்பு வாதத்தின் தற்கால மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்துபவர்கள், எந்தவொரு மாந்தரல்லாத மீஇயற்கைப் பொருளும் (கடவுள்) இல்லை என்று மெய்ப்பிப்பது எவராலும் இயலாதாகையால், அவை இருக்கின்றன என சொல்லுபவர்களே அதனை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என வாதிடுகின்றனர். ”நான் கடவுள், பறக்கும் இடியாப்ப அரக்கன், தேவதைகள் போன்றவற்றை நம்புகிறேன் என்று ஒருவர் சொன்னால், அவை இருக்கின்றன என மெய்ப்பிக்கும் சுமை அவரையே சாரும்” என [[ரிச்சர்ட் டாக்கின்சு]] கூறியுள்ளார். மேலும் கடவுள் இருக்கிறார் என சொல்லும் எந்தவொரு வாதமும் தெளிவில்லாத வாதங்களே. அவற்றை அப்படியே எடுத்துப் பறக்கும் இடியாப்ப அரக்கன் இருக்கிறது என்றும் மெய்ப்பிக்கப் பயன்படுத்தலாம் என்பதே இறைமறுப்பாளர்களின் கூற்று. இதனையே சமயம் மற்றும் நாடக [[ஆய்விதழ்|ஆய்விதழின்]] ஆசிரியர்களுள் ஒருவரான லான்சு கராவியும், [[தி காட் டெலூஷன்|தி காட் டெலூஷனில்]] டாக்கின்சும் முன்வைக்கிறார்கள்.<ref name="usatoday" /><ref name = "Teapot">{{cite news | title=The Church of the Non-Believers | first=Gary | last=Wolf | date=November 14, 2006 | publisher=[[Wired News]] | url=http://www.wired.com/wired/archive/14.11/atheism.html}}</ref><ref>{{cite arxiv|eprint=0807.3670|title=Is Faith the Enemy of Science?|last=MacKenzie|first=Richard|year=2007}}</ref><ref>{{cite book|last=Dawkins|first=Richard|title=The God delusion|publisher=Houghton Mifflin Harcourt|year=2006|page=53|chapter=The God Hypothesis|isbn=978-0-618-68000-9|url=http://books.google.com/books?id=yq1xDpicghkC&printsec=frontcover&source=gbs_navlinks_s#v=onepage&q=&f=false|accessdate=2009-11-24|quote=I have found it an amusing strategy, when asked whether I am an atheist, to point out that the questioner is also an atheist when considering Zeus, Apollo, Amon Ra, Mithras, Baal, Thor, Wotan, the Golden Calf and the Flying Spaghetti Monster. I just go one god further.}}</ref><ref>{{cite book|last=Fernandes|first=Phil|title=The Atheist Delusion|publisher=Xulon Press|year=2009|page=18|chapter=The New, Militant Atheism|isbn=978-1-60791-582-9|url=http://books.google.com/books?id=Jz8NgPuMBLIC&printsec=frontcover&source=gbs_navlinks_s#v=onepage&q=&f=false|accessdate=2009-11-24|quote=The new atheists have made their choice—apparently, no amount of evidence for God will change their minds. They claim that the existence of God is as ridiculous as the existence of a flying spaghetti monster.}}</ref>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2744656" இருந்து மீள்விக்கப்பட்டது