செறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வேதியப் பண்புகள்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
இரசாயனவியலில் ஒரு [[கரைசல்|கரைசலில்]] ஒரு அலகுக் கனவளவில் உள்ள குறித்த பொருளின் அளவு அதன் '''செறிவு''' எனப்படும்.<ref name="goldbook">{{GoldBookRef | file = C01222 | title = concentration}}</ref> திணிவு/கனவளவு வீதம், மூலர் திறன், கனவளவு/கனவளவு வீதம் என்பன செறிவின் பிரதான வகைகளாகும். செறிவு அதிகளவில் இரசாயனவியலில் பயன்படுத்தப்படும் சொற்பதமாகும். இரசாயனவியல் கணிப்புக்களில் கூடுதலாக மூலர்திறனே பயன்படுத்தப்படுகின்றது. செறிவு கூடிய கரைசல் ''செறிவான கரைசல்'' எனவும், செறிவு குறைவான கரைசல் ''ஐதான கரைசல்'' எனவும் அழைக்கப்படும். ஒரு கரைசலைச் செறிவாக்குவதற்குக் கரைசலினுள் மேலதிகமாக கரையத்தைச் சேர்க்க வேண்டும். ஒரு கரைசலை ஐதாக்குவதற்கு கரைப்பானை கரைசலுக்குள் சேர்க்க வேண்டும். உதாரணமாக ஒரு உப்புக் கரைசலைச் செறிவாக்குவதற்கு கரைசலினுள் மேலும் உப்பு சேர்க்க வேண்டும். ஒரு உப்புக்கரைசலை ஐதாக்குவதற்கு அக்கரைசலினுள் நீரைச் சேர்க்க வேண்டும்.
[[File:Dilution-concentration simple exampleta.jpg|thumb|350px|center|இடமிருந்து வலமாகக் கரைசல்களின் செறிவு அதிகரிக்கின்றது.]]
ஒரு கரைசலினுள் ஒரு கரையத்தின் குறிப்பிட்ட அளவு மாத்திரமே கரைய முடியும். அதற்கு மேல் சேர்க்கப்படும் எந்தவொரு கரையமும் கரைசலில் கரையாது. உதாரணமாக நியம நிபந்தனையில் [[சோடியம் குளோரைடு]] நீரின் 1 லீட்டரில் 359 g மட்டுமே கரையும். 400 g உப்பை ஒரு லீட்டர் நீருடன் சேர்த்தால் அதில் 41 g கரையாமல் எஞ்சும். இதன் போது உருவாக்கப்படும் கரைசல் ''நிரம்பிய கரைசல்'' எனப்படும். ஏனெனில் இங்கே சோடியம் குளோரைடு உச்ச செறிவில் உள்ளது.
 
==செறிவைக் குறிப்பிடும் முறைகள்==
வரிசை 21:
கரைசலில் கரைந்துள்ள [[கரையம்|கரையத்தின்]] கனவளவை கரைசலின் கனவளவால் பிரிப்பதன் மூலம் கனவளவு/கனவளவு வீதம் அல்லது கனவளவுச் செறிவு கணிக்கப்படுகின்றது. இப்பெறுமானம் ஐதாக்கப்பட்ட திரவத்-திரவக் கரைசல்களின் (உ-ம்:அல்கஹோல்-நீர் கரைசல், அமில-நீர் கரைசல்) ஆகியவற்றைக் கொண்டுள்ள கொள்கலன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
:<math>\phi_i = \frac {V_i}{V}.</math>
இக்கணியத்துக்கு அலகு இல்லை. இதனை பின்னமாகவோ, தசமமாகவோ, சதவீதத்திலோ குறிப்பிட முடியும். உதாரணமாக 100 ml அல்கஹோல்-நீர் கரைசலொன்று 0.23 கனவளவு/கனவளவு வீதத்தைக் கொண்டிருந்தால் அக்கரைசலில் 23 ml அல்கஹோல் அடங்கியுள்ளது என குறிக்கப்படும். இதனை 23% என்று சதவீதத்தாலும் குறிக்க முடியும்.
 
==தொடர்புடைய வேறு கணியங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது