தாழ்வு மனப்பான்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''தாழ்வு மனப்பான்மை''' (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு. பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள். பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாயம் இவர்களில் உண்டு.
'''தாழ்வு மனப்பான்மை'''
 
நம் தாழ்வு மனப்பான்மையானது சிலர் பிறக்கும் போது கூடவே ஒட்டிப் பிறந்துவிடுகிறது. இது குழந்தைப் பருவம் முதல் ஆரம்பிக்கிறது என உளவியலாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு மேலும் உரம் போடும் வகையில் சுற்றுச் சூழல் தாழ்வு மனப்பான்மைக்குச் சாதகமாக அமையும் பட்சத்தில் அது வேரூன்றி விருட்சமாக வளர்ந்து விடுகிறது. பிறகு இதிலிருந்து மீண்டு வரமுடியாமல் சுருங்கி வாழ்பவர்களும் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு வாழ்பவர்களும் அனேகமானவர்கள் நம்மத்தியில் காணப்படுகின்றனர்.
வரிசை 27:
 
முட்கள் நிறைந்த செடியில்தான் ரோஜா மலர்கிறதென்பதனை மனதில் கொள்ள வேண்டும்
<br />
 
ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட சூழலை அணுகும்போது ஏற்படும் இயலாமை மனதிறகுள் தாழ்வு நிலையாக உருவெடுக்கிறது. என்னால் முடியும் என்ற நேர்மறை எண்ணம் நமக்குள் இருந்தாலும் கூட, மற்றவர் செய்யும் ஒரு செயலின் விளைவைப் பார்த்து நாம் அதிசயப்பதும் மட்டுமின்றி ஒப்பிடவும் செய்கின்றோம். அவ்வாறு செய்வதனால் ஏதோ ஒரு காரணத்தினால் அவரை விட சிறப்பாக செயல்படாமல் போனால் நமக்குள் இருந்த என்னாலும் முடியும் என்ற நேர்மறை எண்ணம் சிதைந்து தன்னை பற்றிய மேலான உயர்வெண்ணம் குறைய ஆரம்பிக்கிறது. இது காலப்போக்கில் ஒவ்வொரு சூழலிலும் தன்னை தாழ்த்தியும், பிறரை உயர்த்தியும் பார்க்கும் ஒரு மனோபாவம் நம்முள் வளர்வதை தாழ்வு மனப்பான்மை என்கிறோம்.
"https://ta.wikipedia.org/wiki/தாழ்வு_மனப்பான்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது