கிளைசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 68:
 
== உயிரித்தொகுப்பு ==
கிளைசின், நம் [[உணவு|உணவில்]] தேவையில்லாதது. 3-பாஸ்போ கிளிசரேட்டிலிருந்து பெறப்பட்ட [[செர்ரீன்|செரின்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலத்திலிருந்து]] நம் [[உடல்]] [[உயிர்வேதியியல்]] முறையில் கிளைசினைத் தொகுத்துக் கொள்கிறது. பெரும்பாலான [[உயிரினம்|உயிரினங்களில்]] [[செர்ரீன்|செரின்]] ஹைட்ராக்சி இடமாற்றி [[நொதி]] பிரிடாக்சால் பாஸ்பேட் என்னும் துணைக்காரணியின் உதவியுடன் [[வினையூக்கி|வினையூக்கியாகச்]] செயல்பட்டு இவ்வுருமாற்றத்தை நிகழ்த்துகிறது:<ref name="A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox 2008">{{cite book |author= A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}</ref>
: செரின் + டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் → கிளைசின் + ''N<sup>5</sup>'',''N<sup>10</sup>''-மெத்திலீன் டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் + H<sub>2</sub>O
 
[[முதுகெலும்பிகள்|முதுகெலும்புயிரிகளின்]] [[கல்லீரல்|கல்லீரலில்]] ''கிளைசின் தொகுப்பி'' (மறு பெயர்: ''கிளைசின் பிளவு நொதி'') என்னும் [[நொதி|நொதியால்]] கிளைசின் தொகுக்கப்படுகின்றது. இத்தொகுப்பு மாற்றம் எளிதில் [[மீளுருவாக்கம்|மீளுறும் தன்மையுள்ளது]]<ref>{{cite book |authorname= "A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}<"/ref>
: CO<sub>2</sub> + NH<sub>4</sub><sup>+</sup> + ''N<sup>5</sup>'',''N<sup>10</sup>''-மெத்திலீன் டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் + NADH + H<sup>+</sup> → கிளைசின் + டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் + NAD<sup>+</sup>
 
பெரும்பாலானப் [[புரதம்|புரதங்கள்]] கிளைசினைச் சிறிய அளவிலேயே கொண்டுள்ளன. ஆனால், 35% கிளைசினைக் கொண்ட கொலாஜென் புரதம் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காகும்<ref>{{cite book |authorname= "A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}<"/ref>.
 
== சிதைவு ==
கிளைசின் மூன்று வழிகளில் சிதைக்கப்படுகிறது. விலங்குகளில், ''[[கிளைசின் சிதைவுத் தொகுதி]] [[நொதியம்|நொதிகள்]] [[வினைவேக மாற்றம்|வினையூக்கத்தின்]] மூலம் கிளைசின் சிதைக்கப்படுவது முதன்மையான வழியாகும். இதே [[வினைவேகமாற்றி|வினைவேகமாற்றிதான்]] கிளைசின் உயிரித்தொகுப்பிலும் ஈடுபடுகிறது. சிதைவு வழிமுறை, தொகுப்பு வழிமுறையின் தலைகீழ் வினையாகும்: <ref>{{cite book |authorname= "A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}<"/ref>
: கிளைசின் + டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் + NAD<sup>+</sup> → CO<sub>2</sub> + NH<sub>4</sub><sup>+</sup> + ''N<sup>5</sup>'',''N<sup>10</sup>''-மெத்திலீன் டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் + NADH + H<sup>+</sup>
 
இரண்டாவது வழிமுறையில் கிளைசின் இரு படிகளில் சிதைக்கப்படுகிறது. முதலாம் படியானது, [[செர்ரீன்|செரின்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலத்திலிருந்து]] ''செரின் ஹைட்ராக்சிமீத்தைல் இடமாற்றி'' [[நொதி|நொதியின்]] உதவியுடன் நிகழும் உயிரிதொகுப்பின் தலைகீழ் வினையாகும். பின்னர் [[செர்ரீன்|செரின்]], பைருவேட்டாக ''செரின் அமைன் நீக்கியால்'' மாற்றப்படுகிறது.<ref>{{cite book |authorname= "A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}<"/ref>
 
மூன்றாவது வழிமுறையில் கிளைசின், ''அமினோ அமில உயிர்வளியேற்றி'' [[நொதி|நொதியால்]] கிளையாக்சிலேட்டாக மாற்றப்படுகிறது. பின்னர், கிளையாக்சிலேட் [[ஈரல்|ஈரலின்]] ''லேக்டேட் ஹைட்டிரசன் நீக்கியால்'' ஆக்சலேட்டாக NAD<sup>+</sup>-அய் சார்ந்த உயிர்வளியேற்றம் அடைகிறது. <ref>{{cite book |authorname= "A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}<"/ref>
 
கிளைசினின் [[அரைவாழ்வுக் காலம்|அரைச்சிதைவுக் காலமும்]], [[உடல்|உடலிலிருந்து]] வெளியேற்றப்படுவதற்கான நேரமும் அதன் அளவைப் பொருத்தே முக்கியமாக அமைகிறது. ஒரு [[ஆய்வு|ஆய்வில்]], கிளைசினின் [[அரைவாழ்வுக் காலம்|அரைச்சிதைவுக் காலம்]] 0.5 - 4.0 மணியாகக் கண்டறியப்பட்டது.<ref>{{cite journal | author = Hahn RG | year = 1993 | title = Dose-dependent half-life of glycine | journal = Urological Research | volume = 21 | issue = 4 | pages = 289–291 | doi = 10.1007/BF00307714}}</ref>
வரிசை 90:
 
{{புறவெளியில் கண்டறியப்பட்ட மூலக்கூறுகள்}}
 
[[பகுப்பு:அமினோ அமிலங்கள்]]
 
{{அமினோ அமிலங்கள்}}
 
[[பகுப்பு:அமினோ அமிலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிளைசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது