மரபணு இருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
[[மரபியல்]] அல்லது மரபியல் கணிப்பீட்டில், '''மரபணு இருக்கை''' (Locus) என்பது ஒரு [[நிறப்புரி]]யில் இருக்கும் ஒரு [[மரபணு]]வின் அல்லது [[டி.என்.ஏ]] வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும். ஒரு மரபணு இருக்கையில் உள்ள டி.என்.ஏ வரிசையில் காணப்படக்கூடிய வேற்று வடிவங்களே [[எதிருரு]]க்கள் எனப்படும். ஒரு [[மரபணுத்தொகை]]யில் மரபணு இருக்கைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை '''மரபியல் வரைபடம்''' எனப்படும். ஒரு குறிப்பிட்ட [[உயிரியல்]] இயல்புக்குரிய மரபணு இருக்கையைத் தீர்மானிக்கும் செயல்முறை '''மரபணு வரைபடமாக்கல்''' எனப்படும்.
 
[[மடியநிலை#இருமடியம்|இருமடிய]], [[மடியநிலை#பல்மடியம்|பல்மடிய]] [[உயிரணு]]க்களில் ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கையிலுள்ள ஒரு மரபணுவின் எதிருருக்கள் ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பின் அவை, குறிப்பிட்ட மரபணுவுக்குரிய [[ஒத்தினக் கருவணு]] (சமநுகம்/ ஓரின நுகம்) (homozygoous) எனப்படும். அதேவேளை குறிப்பிட்ட மரபணுவின் எதிருருக்கள் வேறுபட்ட மாற்று வடிவங்களில் இருப்பின் அவை, அந்த மரபணுவுக்குரிய [[கலப்பினக் கருவணு]] (இதரநுகம்/ கலப்பினக் கருவணு) (heterozygous) எனப்படும்.
 
==பெயரீடு==
ஒரு குறிப்பிட்ட மரபணுவுக்குரிய மரபணு இருக்கையானது பின்வருமாறு குறிப்பிடப்படலாம்.
"6p21.3"
 
{| class="wikitable"
வரிசை 19:
|}
 
தொடராக உள்ள மரபணு இருக்கையையும் இவ்வாறே விளக்க முடியும். எடுத்துக் காட்டாக OCA1<ref>[http://en.wikipedia.org/wiki/OCA1]</ref> இன் மரபணு இருக்கை "11q1.4-q2.1" எனும்போது, அது 11 ஆவது நிறப்புரியில், நீண்ட பாகத்தில், 1 ஆவது பட்டியின் 4 ஆவது துணைப்பட்டிக்கும், 2 ஆவது பட்டியின் 1 ஆவது துணைப்பட்டிக்கும் இடையில் இருப்பிடம் உள்ளது என்பதைக் குறிக்கும்.
 
நிறப்புரியின் முனைப் பகுதிகளில் உள்ள மரபணு இருக்கைகள் "pter", "qter" எனக் குறிக்கப்படும். எடுத்துக் காட்டாக, "2qter" என்பது 2 ஆவது நிறப்புரியின் நீண்ட பாகத்தின் முனைப்பகுதியைக் குறிக்கும்.
வரிசை 26:
 
<references />
 
 
[[பகுப்பு:மரபணு]]
"https://ta.wikipedia.org/wiki/மரபணு_இருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது