பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 102:
Hydrozoa வில் உள்ள வேறுசில இனங்களில் மேலும் விருத்தியடைந்த பல்லுருத்தோற்றத்தைக் காணலாம். இவ்வினங்கள் உணவைப்பெற, பாதுகாப்பிற்காக, பாலினக் கலப்பில்லா இனப்பெருக்கம் (asexual reproduction), பாலினக் கலப்புள்ள இனப்பெருக்கம் (sexual reproduction), போன்ற வெவ்வேறு தொழில்களுக்கேற்ப தோற்றவமைப்புக்களைக் கொண்டிருக்கும்.
 
<br />
<br />
===மாறுகின்ற பல்லுருத்தோற்றம் (Transient Polymorphism) ===
ஒரு குறிப்பிட்ட தோற்றம் படிப்படியாக இன்னொரு தோற்றமாக மாற்றமடைவதன் மூலம் பல்லுருத்தோற்றம் பெறப்படுகிறது. இங்கே பல்லுருத்தோற்றத்திற்கு [[மரபணு]]க்கள் மட்டுமன்றி சூழலும் ஒரு காரணமாக அமையும்.
வரி 126 ⟶ 124:
 
மரத்தின் பின்புலத்தை ஒத்திருக்கும் தன்மைகொண்டு, மரங்களில் ஓய்வான நிலையிலிருந்து, அதன்மூலம் [[பூச்சியுண்ணி|பூச்சியுண்ணும்]] [[பறவை]]களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இயல்புடைய இது போன்ற இனங்களில் மட்டுமே இந்தத் தொழிற்சாலை மாசினால் ஏற்பட்ட தாக்கம் வெளித் தெரிந்தது. ஏனைய இறந்த இலைகளில் வாழும் [[பூச்சி]]களிலோ, அல்லது [[பட்டாம்பூச்சி]]களிலோ இந்தத் தாக்கம் வெளிப்படவில்லை<ref name="Majerus 1998"/><ref name="Ford 1965">Ford, E. B. 1965. "Heterozygous Advantage". In ''Genetic Polymorphism''. Boston/London.: MIT Pr./Faber & Faber</ref><ref>Kettlewell H.B.D. 1973. ''The Evolution of Melanism''. Oxford: Oxford U. Pr.</ref>.
 
<br />
 
====சூழலுக்கு ஏற்ற வேறுபாடு காட்டல் (Polyphenism)====
வரி 133 ⟶ 129:
சில இனங்களில், சூழலுக்கேற்றவாறு வேறுபட்ட தோற்றவமைப்புக்கள் உருவாகின்றன. அதாவது, ஒரு தனியான மரபணுவமைப்பிலேயே, சூழல் காரணங்களால், வேறுபட்ட தோற்றவமைப்புக்கள் உருவாகின்றன. ஒரு தனியனில் உள்ள [[மரபியல்]] அமைப்பானது, சூழலுக்கேற்றவாறு, சில பொறிமுறைகளை மாற்றிக் கொள்ளவும், அதன் மூலம் தோற்றத்தை மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றது. எடுத்துக் காட்டாக, ''Biston betularia'' என்ற உயிரியின் [[குடம்பி]] நிலையில், அது இருக்கும் மரத்தின் தண்டின் நிறத்துக்கு ஏற்றவாறு [[பச்சை]], பழுப்பு எனத் தனது நிறத்தை மாற்றிக் கொள்ள முடிகின்றது.
 
இதேபோல் [[முதலை]]களில் சூழல் [[வெப்பம்|வெப்பத்தினாலேயே]] பாலினம் தீர்மானிக்கப்ப்படுகின்றது<ref name="Woodward">Woodward, D.E. and Murray, J.D. (1993). On the effect of temperature-dependent sex determination on sex ratio and survivorship in crocodilians. ''Proc. R. Soc. Lond.'' [B] 252:149-155.</ref>. முட்டைகள் இருக்கும் கூட்டின் வெப்பநிலை 31.7 &nbsp;°C (89.1 &nbsp;°F) க்கு குறைவாகவோ அல்லது 34.5 &nbsp;°C (94.1 &nbsp;°F) க்கு அதிகமாகவோ இருப்பின் [[முட்டை]]கள் பொரித்து வெளிவரும் தனியன்கள் [[பெண்]]களாகவும், இவ்விரு நிலைக்கும் இடைப்பட்ட வெப்பநிலை இருப்பின் உருவாகும் தனியன்கள் [[ஆண்]]களாகவும் இருக்கும்.
 
[[எறும்பு]], [[தேனீ]], [[கறையான்]], [[குளவி]] போன்ற இனங்களில் இருக்கும் சாதியமைப்பில், [[ஆண்]], [[பெண்]] [[பூச்சி]]களின் உருவாக்கம் மரபியலை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டாலும், பின்னர் பெண் பூச்சிகளிலிருந்து இராணியும், வேலையாள்/போராளிகளும் உருவாதல் சூழல் காரணியாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. பூச்சிகளில் குடம்பிகளாக உள்ள நிலையில், அவற்றிற்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவிற்கேற்ப, மிகச் சிறந்த உணவைப் பெறும் குடம்பி இராணியாகவும், ஏனையவை வேலையாள் பூச்சியாகவும் மாற்றமடையும்.
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது