பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 13 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்''' அல்லது '''பிறந்த குழந்தைகள், முதிர்கருக்களில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்''' (HDN - Hemolytic Disease of the Newborn) என்பது தாயின் குருதிக்கும், சேயின் குருதிக்கும் ஏற்படக்கூடிய ஒரு ஒவ்வாமை நிலையில், தாயில் உருவாகும் IgG வகை [[பிறபொருளெதிரி]]யானது [[நஞ்சுக்கொடி]]யின் ஊடாக [[முதிர்கரு]]வுக்குக் கடத்தப்படுவதனாலோ, அல்லது [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பில்]] ஏற்படும் அசாதாராண நிலையில் தாயின் குருதி சேயின் குருதியுடன் கலப்பதனாலோ முதிர்கருவில் அல்லது பிறக்கும் குழந்தையில் ஏற்படக்கூடிய ஒரு [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] செயற்பாட்டினால், [[குருதிச் சிவப்பணு]]க்கள் சிதைவடைதலாகும். [[கருச்சிதைவு]], [[கருக்கலைப்பு]], [[குழந்தை பிறப்பு]] போன்ற பிரத்தியேகமான நிலைமைகளில் தாயினதும், சேயினதும் குருதிகள் கலப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படுவதனால், இந்நிலைகளில், இந்த நோய்நிலை உருவாகலாம்.
 
பிறக்கும் குழந்தைகளில் முறையான [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] இருப்பதில்லை. அவர்களில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை முதிர்ச்சி பெற்று செயற்படுவதற்கு சில காலம் எடுக்கும். அதுவரையில் தாயிலிருந்து பெறப்படும் பிறபொருளெதிரிகளின் உதவியுடனேயே முதிர்கருவும், ஆரம்பத்தில் கைக்குழந்தைகளும் தமக்கான நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுவதனால் பாதுகாப்புக் கிடைக்கும். ஆனால் தாயின் குருதியின் தெளியத்தில் உள்ள பிறபொருளெதிரிகள், சேயின் குருதிக்கு ஒவ்வாமை உள்ளதாயின் சேயின் குருதிச் சிவப்பணுக்களைத் தாக்கி அழிப்பதனால், இந்நிலை கெடுதலாகவும் போய் விடுகின்றது<ref name=NCBI>{{cite journal| author= Bethesda,M.D. |year= 2005 |title= [http://www.ncbi.nlm.nih.gov/books/NBK2261/ Blood Groups and Red Cell Antigens] |journal= Bookshelf ID: NBK2266 |chapter= 4 |page= 1|journal=NCBI Bookshelf |url=http://www.ncbi.nlm.nih.gov/books/NBK2266/}}</ref>
 
நோய்ப்பாதிப்பானது மிதமான அளவில் இருந்து, தீவிரமான நிலைமை வரை வேறுபடலாம். குருதிச் சிவப்பணு சிதைவினால், குழந்தைகளில் [[குருதிச்சோகை]], [[மஞ்சள் காமாலை]] போன்றன ஏற்படும். தீவிரமான நிலைகளில் [[முதிர்கரு நீர்க்கோர்வை]] (Hydrops fetalis) அதனால் ஏற்படக்கூடிய உடல் வீக்கம் (Edema), [[பிறந்த குழந்தையில் மூளை பாதிப்பு]] (Kernicterus) போன்ற நிலைகள் ஏற்படலாம்<ref name=CH>[http://www.childrenshospital.org/az/Site1006/mainpageS1006P1.html Children's Hospital Boston]</ref>. மிகத் தீவிரமான நிலையில் [[இதயம்]]<ref name=UCSF>[http://www.ucsfbenioffchildrens.org/pdf/manuals/42_Hemol.pdf UCSF Children's Hospital]</ref> பாதிக்கப்பட்டு, [[செத்துப் பிறப்பு]], அல்லது பிறந்தபின்னர் [[இறப்பு]]ம்<ref>[http://www.rightdiagnosis.com/h/hemolytic_disease_of_the_newborn/intro.htm Right Diagnosis]</ref> ஏற்படலாம்.
 
ஆனாலும் பொதுவாக இந்நோயானது முதலிலேயே கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்படக் கூடியதாகவும், [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போதோ]] அல்லது குழந்தை பிறந்த பின்னரோ சிகிச்சையினால் நிவர்த்தி செய்யப்படக்கூடியதாகவும் இருக்கும்<ref name=CH/>. இதனால் இந்நோய் நிலை ஆபத்து குறைவாகவே இருக்கும்.
 
==தெளியவியல் நோயறிதல்==
வரிசை 37:
பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோயானது வெவ்வேறு காரணிகளால் ஏற்படலாம்.
===ஏபிஓ ஒவ்வாமை ===
தாயினதும், சேயினதும் குருதிகள் நேரடியாகக் கலப்பதில்லையாதலால் குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான ABO குருதி வகை ஒவ்வாமை காரணமாக பொதுவாக 'பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்' உருவாவதில்லை. [[ஊட்டச்சத்து]]க்களும், [[ஆக்சிசன்|ஆக்சிசனும்]] தாயிலிருந்து சேய்க்கும், [[காபனீரொக்சைட்டு]], ஏனைய கழிவுப்பொருட்கள் சேயிலிருந்து தாய்க்கும் [[நஞ்சுக்கொடி]] ஊடாகவே கடத்தப்படுகின்றது. ABO இரத்த வகையின் பிறபொருளெதிரிகள் பொதுவாக IgM வகையைச் சேர்ந்தவையாக இருப்பதுடன், இவை [[நஞ்சுக்கொடி]]யினூடாக செல்வதில்லை<ref name=UCSF/>. எனவே தாயிலிருந்து சேய்க்கு பிறபொருளெதிரிகள் கொண்டு செல்லப்படுவதில்லை.
 
ஆனாலும் குறைந்த வீதத்தில் ABO HDN உருவாகலாம்<ref>http://www.obgyn.net/english/pubs/features/presentations/panda13/ABO-Rh.ppt</ref>. ஆனால் குழந்தை A அல்லது B வகைக்குருதியாக இருக்கையில், O வகைக் குருதியுடைய தாயில், பொதுவாக '''IgG''' வகையான எதிர்-A, எதிர்-B பிறபொருளெதிரிகள் உருவாகும்<ref name=UCSF/>. அவை நஞ்சுக்கொடியூடாக கடத்தப்பட்டு, பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படக் காரணமாகின்றன. அரிதாக இருப்பினும், சிலசமயம் A<ref name="Wang">Wang, M, Hays T, Ambruso, DR, Silliman CC, Dickey WC. Hemolytic Disease of the Newborn Caused by a High Titer Anti-Group B IgG From a Group A Mother. Pediatric Blood & Cancer 2005;45(6): 861-862</ref>,<ref name="Jeon">Jeon H, Calhoun B, Pothiawala M, Herschel M, Baron BW. Significant ABO Hemolytic Disease of the Newborn in a Group B Infant with a Group A2 Mother. Immunohematology 2000; 16(3):105-8.</ref> மற்றும் B<ref name="Haque">Haque KM, Rahman M. An Unusual Case of ABO-Haemolytic Disease of the Newborn. Bangladesh Medical Research Council Bulletin 2000; 26(2): 61-4.</ref> குருதி வகையுள்ள தாய்க்கு பிறக்கும் குழந்தைகளிலும் இந்த ABO HDN என்னும் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படுகின்றது.
வரிசை 59:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
 
[[பகுப்பு:மரபியல் நோய்கள்]]