"இழையுருப்பிரிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி ((GR) File renamed: File:Major events in mitosista.svg.pngFile:Major events in mitosista.png #6 Non-controversial maintenance and bug fixes, including fixing double extensions.)
சி (பராமரிப்பு using AWB)
 
[[File:Major events in mitosista.png|thumb|400px|இழையுருப்பிரிவுக்கு முன்னும் பின்னும்:அடிப்படை]]
[[File:Wilson1900Fig2.jpg|right|thumb|350px|கல வட்டத்தின் வெவ்வேறு அவத்தைகளில் உள்ள [[வெங்காயம்|வெங்காயக்]] கலங்கள். சில இழையுருப்பிரிவை நிகழ்த்துகின்றன.]]
[[உயிரியல்|உயிரியலில்]] '''இழையுருப்பிரிவு''' (''Mitosis'') என்பது [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுக்களில் (கலங்களில்) [[கலப்பிரிவு|உயிரணுப்பிரிவு]] நடைபெறும்போது, ஒன்றையொன்று ஒத்த, ஒரே மாதிரியான இரு [[உயிரணு]]க்கள் உருவாவதுடன், ஒவ்வொரு உயிரணுவிலும் காணப்படும் [[நிறப்புரி]]களும், [[மரபியல்]] உள்ளடக்கமும் தாய் உயிரணுவை ஒத்ததாகக் இருக்குமாறும் நிகழும் செயல்முறையாகும். பொதுவாக இழையுருப்பிரிவு நிறைவடைந்தவுடன் குழியவுருப்பிரிவு (Cytokinensis) நடைபெறும். <ref>{{cite web|title=Mitosis|url=http://biology.clc.uc.edu/courses/bio104/mitosis.htm}}</ref> குழியவுருப்பிரிவின் போது புன்னங்கங்கள், குழியவுரு, கல மென்சவ்வு என்பன இழையுருப்பிரிவின் போது தோற்றுவிக்கப்பட்ட இரு மகட்கலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இழையுருப்பிரிவு மெய்க்கருவுயிரிகளுக்கு மாத்திரம் தனித்துவமான ஒன்றாகும். இது [[பாக்டீரியா]], [[ஆர்க்கியா]] ஆகிய நிலைக்கருவிலிகளில் நடைபெறுவதில்லை. வெவ்வேறு நிலைக்கருவிலி வகைகளில் வெவ்வேறு விதமாக இழையுருப்பிரிவு நடைபெறுகின்றது. [[விலங்கு]]க் கலங்களில் முன் அனுவவத்தையின் போது கருவுறை/ கரு மென்சவ்வு அழிந்து, கலத்தினுள்ளே நிறமூர்த்தங்கள் பகிரப்படுகின்றன. [[பூஞ்சை]]களிலும் சில புரொட்டிஸ்டுக்களிலும் கரு மென்சவ்வு அழிவடைவதில்லை. கரு மென்சவ்வு அவ்வாறே இருக்க கருவினுள்ளே இழையுருப்பிரிவு நடைபெறுகின்றது. பின்னர் கருவும், கலமும் பிரிகின்றன (பூஞ்சையில் கரு மாத்திரமே பிரிகின்றது-கலம் பிரிவடைவதில்லை). இழையுருப்பிரிவே பல்கல உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்குக் காரணமாகின்றது. ஒருகல [[நுகம்]] இழையுருப்பிரிவு மூலமே பல்கல நிறையுடலியாக மாற்றமடைகிறது. அதாவது இழையுருப்பிரிவு மூலம் உருவாகிய ஒரு மனிதனின் உடலிலுள்ள கலங்கள் அமைப்பு, உருவம், தொழில் என்பவற்றால் மாறுபட்டாலும், அவை அனைத்தும் ஒரே மரபணுத்தகவலையே கொண்டுள்ளன. பல்கல உயிரினங்களில் பொதுவாக வளர்ச்சிக்காகவே இழையுருப்பிரிவைப் பயன்படுத்தினாலும், சில வேளைகளில் இலிங்கமில் இனப்பெருக்கத்துக்கும் இழையுருப்பிரிவு பயன்படுத்தப்படுகின்றது.
இழையுருப்பிரிவு பொதுவாக ஐந்து அவத்தைகளில் நிகழ்கின்றது. இழையுருப்பிரிவு ஆரம்பிக்கையில் ஒரு கலமும் முடிவுறும் போது இரு கலங்களும் இருக்கும். அவத்தைகள்:
* முன்னவத்தை (prophase)
 
[[File:CONDENSING CHROMOSOMES 2.jpg|thumb|சுருளடையும் நிறமூர்த்தங்கள். இடையவத்தையின் போது கரு (இடம்), சுருளடையும் நிறமூர்த்தம் (நடுவில்) முழுமையாகச் சுருளடைந்த நிறமூர்த்தங்கள் (வலம்).]]
முன்னவத்தைக்கு முன்னர் டி.என்.ஏயை ஒளி நுணுக்குக்காட்டியால் அவதானிக்க முடியாது. முன்னவத்தை ஆரம்பிக்கும் போது டி.என்.ஏ உள்ள புலப்படாத நிறமூர்த்த வலைகள் சுருளடைந்து ஒளிநுணுக்குக்காட்டியில் தெளிவாகத் தென்படக்கூடிய [[நிறமூர்த்தம்|நிறமூர்த்தங்கள்]] உருவாக்கப்படும். இடையவத்தையின் S அவத்தையில் முன்னரே [[டி.என்.ஏ இரட்டித்தல்|டி.என்.ஏ இரட்டிப்படைந்திருப்பதால்]] உருவாகும் நிறமூர்த்தத்தில் இரண்டு அரைநிறவுருக்கள் மையப்பாத்தால் பிணைக்கப்பட்ட படி காணப்படும். விலங்குக்கலமெனில் புன்மையத்திகள் இரட்டிப்படைந்து கருவின் எதிரெதிர்ப் பக்கங்களை நோக்கி நகர ஆரம்பிக்கும். புன்மையத்திகளிலிருந்து கதிர்நார்கள் தோற்றுவிக்கப்படத் தொடங்கும். தாவரக்கலத்தில் [[புன்மையத்தி]] இல்லாததால் தாவரக்கலங்களின் இழையுருப்பிரிவின் போது புன்மையத்திகள் பங்களிப்பதில்லை. <ref>Raven ''et al''., 2005, pp. 58–67.</ref>
 
===முன் அனுவவத்தை===
[[File:Mitosis drosophila larva.ogv|thumb|right|''Drosophila melanogaster'' பூச்சியின் [[முளையம்]]. இதில் மிக வேகமாக இழையுருப்பிரிவு மூலம் புதிய கலங்கள் உருவாக்கப்படுகின்றன.]]
இவ்வவத்தையை சிலர் இழையுருப்பிரிவின் ஒரு அவத்தையாகக் கருதுவதில்லை. இவர்கள் இதனை முன்னவத்தையின் ஒரு பகுதியாகவோ அல்லது அனுவவத்தையின் ஒரு பகுதியாகவோ உள்ளடக்குகின்றனர்.
இது கரு மென்சவ்வு அழிவடைவதுடன் ஆரம்பிக்கும் இழையுருப்பிரிவு அவத்தையாகும். எனினும் பூஞ்சைகளிலும் மேலும் சில புரொட்டிஸ்டுக்களிலும் இவ்வவத்தையின் போது கருமென்சவ்வு அழிவடைவதில்லை. இவ் அவத்தையின் போது கதிர்நார்கள் நிறமூர்த்தத்தின் மையப்பாத்திலுள்ள கைனட்டோகோர் (''kinetochore'') புரதத்துடன் இணைக்கப்படும்.
 
===அனுவவத்தை===
 
நிறமூர்த்தங்கள் மத்திய கோட்டுத்தளத்தில் அடுக்கப்படுவதுடன் இவ்வவத்தை ஆரம்பமாகிறது. முன்னனுவவத்தையின் போது நிறமூர்த்தங்களுடன் இணைந்த கதிர்நார்களே நிறமூர்த்தங்களை இவ்வாறு மத்திய கோட்டுப் பிரதேசத்தில் அடுக்குகின்றன. பின்னர் கதிர்நார்கள் ஒவ்வொரு நிறமூர்த்தத்தத்திலுமுள்ள ஒவ்வொரு அரைநிறவுருக்களையும் எதிரெதிர்த் திசைகளில் இழுக்க ஆரம்பிக்கும். கதிர்நார்களின் நீளத்தைக் குறைப்பதன் மூலம் இவ்விழு விசை வழங்கப்படுகிறது. <ref>{{cite web|title=The Cell Cycle & Mitosis Tutorial|url=http://www.biology.arizona.edu/cell_bio/tutorials/cell_cycle/cells3.html|publisher=University of Arizona|accessdate=7 December 2012}}</ref> இவ்வவத்தையின் போது சரியான முறையில் நிறமூர்த்தங்கள் அடுக்கப்படுவது இழையுருப்பிரிவின் முக்கிய கட்டமாகும். அவ்வாறு அடுக்கப்படாவிடில் இழையுருப்பிரிவு இடைநடுவே கைவிடப்படலாம்.
 
===மேன்முக அவத்தை===
 
இதன்போது நிறமூர்த்தத்தின் இரு அரை நிறவுருக்களையும் பிணைத்திருந்த மையப்பாத்திலுள்ள ஒட்டும் புரதம் பிரிகையடைந்து கதிர்நார்களுடன் பிணைந்துள்ள அரை நிறவுருக்கள் எதிரெதிர்த் திசையில் அசைய ஆரம்பிக்கின்றன. கதிர்நார்களில் ஏற்படும் சுருக்கத்தால் பிறப்பிக்கப்படும் இழுவிசை காரணமாகவே அரைநிறவுருக்கள் எதிரான முனைவுகளை நோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றன.
 
===ஈற்றவத்தை===
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:உயிரியல்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745143" இருந்து மீள்விக்கப்பட்டது