வலைவடிவ நகர அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
 
வரிசை 3:
 
==பண்டைக்கால வலைவடிவ நகர அமைப்பு==
வலைவடிவ நகர அமைப்பு, மிகவும் பழைய காலத்திலேயே பல்வேறு பண்பாடுகளில் தோற்றம் பெற்றது. சில மிகப் பழமையான நகரங்கள் இவ்வகையான அமைப்புக் கொண்டவை. கிமு 2600 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் செழித்திருந்த [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்தைச்]] சேர்ந்த நகரங்களான [[அரப்பா]], [[மொகெஞ்சதாரோ]] போன்ற நகரங்கள், வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்து ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் வலைவடிவச் சாலையமைப்பைக் கொண்டிருந்தன. கிமு முதலாவது ஆயிரவாண்டில் இருந்து கிபி 11 ஆம் நூற்றாண்டுவரை [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டப்]] பகுதிகளில் நிலைத்திருந்த தக்சிலா அல்லது [[காந்தார நாகரிகம்|காந்தார நாகரிகத்தைச்]] சேர்ந்த நகரங்களும் வலைவடிவ அமைப்பைக் கொண்டிருந்தன.
 
கிமு 2570 - 2500 காலப் பகுதியைச் சேர்ந்த எகிப்தின் கிசா என்னும் ஊரிலும், சுற்றுமுறையில் வரும் தொழிலாளர்கள் தங்குவதற்கான குடியிருப்புப் பகுதிகளும் இவ்வாறான அமைப்பைக் கொண்டிருந்தன.
 
[[பகுப்பு:நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வலைவடிவ_நகர_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது