ஆதி (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அடிப்படைக் கணிதம்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 4:
[[கணிதம்|கணிதத்தில்]] யூக்ளிடிய வெளியின் '''ஆதி''' அல்லது '''ஆதிப்புள்ளி''' (''origin'') என்பது ஒரு சிறப்புப் [[புள்ளி]]. இடவெளியில் அமையும் அனைத்துப் புள்ளிகளின் அமைவும் இப்புள்ளியை ஆதாரமாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இப்புள்ளியின் வழக்கமான குறியீடு ''O''. [[கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமை]]யில் அதன் அச்சுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாக இது அமையும். யூக்ளிடிய வெளியில் எந்தவொரு புள்ளியும் ஆதிப்புள்ளியாகக் கட்டற்றுத் தேர்ந்தெடுக்கப் படலாம்.
 
பெரும்பாலும் வழக்கமான ஆயமுறைமைகள் இருபரிமாணம் அல்லது முப்பரிமாணத்தில் உள்ளன. இருபரிமாண ஆயமுறைமை ஒரு [[தளம் (வடிவவியல்)|தளத்தில்]] அமைந்த இரு செங்குத்து அச்சுகளையும் முப்பரிமாண ஆயமுறைமை ஒரு இடவெளியில் அமைந்த மூன்று செங்குத்து அச்சுகளையும் கொண்டிருக்கும். ஆதிப்புள்ளி இந்த அச்சுகள் ஒவ்வொன்றையும் நேர் அரைஅச்சு மற்றும் எதிர் அரைஅச்சு என இரண்டு சமபகுதிகளாகப் பிரிக்கும். ஆதிப் புள்ளியை ஆதாரமாகக் கொண்டு மற்ற புள்ளிகளின் இருப்பிடத்தை அவற்றின் அச்சுதூரங்கள் மூலம் குறிக்கலாம். ஒரு புள்ளியின் ஒவ்வொரு அச்சின் மீதான வீழல்கள் (நேர் அரைஅச்சு அல்லது எதிர் அரைஅச்சின் மீதானவை) அப்புள்ளிக்குரிய அந்தந்த அச்சுதூரங்கள் எனப்படும். ஆதிப்புள்ளியின் அச்சுதூரங்கள் எப்பொழுதும் பூச்சியமாகவே இருக்கும். ஆதிப்புள்ளியின் அச்சுதூரங்கள் இரு பரிமாணத்தில் (0,0) மற்றும் முப்பரிமாணத்தில் (0,0,0).
 
கலெப்பெண் தளத்தில் மெய் அச்சும் கற்பனை அச்சும் வெட்டிக்கொள்ளும் புள்ளி ஆதிப்புள்ளி. இப்புள்ளி 0 + 0''i'' என்ற [[கலப்பெண்|கலப்பெண்ணால்]] குறிக்கப்படுகிறது..
"https://ta.wikipedia.org/wiki/ஆதி_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது