காற்றிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 25 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 5:
காற்றிதழ் வடிவிலான திடப்பொருள் ஒரு [[பாய்மம்|பாய்மத்தில்]] செல்லும்போது [[காற்றியக்க விசை]]களை உருவாக்குகிறது. அவ்விசைகளுள் முக்கியமானது, பொருள் செல்லும் திசைக்கு செங்குத்தாக செயல்படும் [[ஏற்றம்]] ஆகும். இயக்கதிசைக்கு இணையாக, ஆனால் எதிர்திசையில், செயல்படும் விசை [[இழுவை]] எனப்படும். குறையொலிவேக பறத்தலில் பயன்படும் காற்றிதழ்களின் பொதுவான பண்புகள்: மொழுக்கட்டையான தலைப்புமுனையும் கூரான பின்விளிம்பும் கொண்டிருக்கும், மேலும் பெரும்பாலான நேரங்களில் சமச்சீரற்ற [[விற்சாய்வு]]ம் கொண்டிருக்கும். இதேபோன்ற குணங்களோடு நீரை இயங்கு பாய்மமாகக் கொண்ட இதழ்கள் [[நீரிதழ்]]கள் எனப்படும்.
 
காற்றிதழில் உருவாகும் ஏற்றம், காற்றிதழின் [[தாக்குகோணம்]] மற்றும் வடிவத்தைப் பொறுத்தது. காற்றிதழை காற்றோட்டத்துக்கு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அமையும்போது, காற்றிதழ் காற்றோட்டத்தை விலக்கி விடுகிறது. அதனால் காற்றின் விலக்க திசைக்கு நேரெதிர்த்திசையில் காற்றிதழின்மீது விசை ஏற்படுகிறது. அவ்விசை [[காற்றியக்க விசை]] எனப்படுகிறது, அதனை இருகூறுகளாக பிரிக்கலாம்: [[ஏற்றம்]], [[இழுவை]]. பெரும்பான்மையான காற்றிதழ்கள் ஏற்றவிசையை உருவாக்குவதற்கு நேர்மறை தாக்குகோணங்கள் தேவைப்படும், ஆனால் [[விற்சாய்வுடை காற்றிதழ்கள்]] சுழிய தாக்குகோணத்திலும் ஏற்றத்தை உருவாக்கும். இவ்வாறு காற்றிதழின் அருகாமையில் காற்றோட்டம் விலகிச் செல்வதால் வளைந்த [[சீர்வரிகள், கீற்றுவரிகள், மற்றும் பாதைவரிகள்|சீர்வரிகள்]] உண்டாகின்றன, அதனால் காற்றிதழின் ஒரு பக்கம் குறைந்த அழுத்தமும், மற்றொரு பக்கம் அதிக அழுத்தமும் ஏற்படுகிறது. இந்த அழுத்த வேறுபாட்டோடு திசைவேக வேறுபாடும் ஏற்படுகிறது, [[பெர்னூலி தத்துவம்|பெர்னூலி தத்துவத்தின்]]படி, எனவே காற்றிதழைச் சுற்றி ஏற்படும் பாய்வுப்புலத்தில் மேற்புறம் சராசரி திசைவேகம் அதிகமாகவும் கீழ்ப்பக்கம் சராசரி திசைவேகம் குறைவாகவும் இருக்கும். இதனால் ஏற்படுகின்ற [[ஏற்றம்|ஏற்றத்தை]] மேல்/கீழ் பக்கங்களுக்கிடையேயான திசைவேக வேறுபாட்டை வைத்தே [[சுழற்சி (பாய்ம இயக்கவியல்)|சுழற்சி]] மற்றும் [[குட்டா-ஜோகோவ்ஸ்கி தேற்றம்]] ஆகியவற்றின் மூலம் கணக்கிடலாம், காற்றிதழைச் சுற்றி அழுத்தத்தைக் கணக்கிடத் தேவையில்லை.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/காற்றிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது