அமைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 16:
== பெயரிடல் ==
 
வழக்கமான பொதுப் பெயரிடல் முறையில் தாய் அமிலத்தின் பெயருடன் அமைடு என்ற சொல் சேர்த்து அந்த அமைடு அழைக்கப்படுகிறது. உதாரணமாக, அசிட்டிக் அமிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட அமைடு அசிட்டமைடு (CH3CONH2) என்ற பெயரைப் பெறுகிறது. இதையே ஐயுபிஏசி முறை பெயரிடல் முறை எத்தனமைடு எனப் பரிந்துரைக்கிறது. ஆனால் இதுவும் இதைப்போன்ற முறையாகப் பெயரிடப்பட்ட பெயர்களும் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமீன்களில் இருந்து தருவிக்கப்பட்ட அமைடுகளுக்குப் பெயரிடும்போது முதல் அதில் உள்ள நைட்ரசனுக்கு மேல் உள்ள பதிலியை முதலாவதாகக் குறிப்பிட வேண்டும். இதன்படி டைமெத்திலமீன் மற்றும் அசிட்டிக் அமிலத்திலிருந்து உருவாக்கப்படும் அமைடிற்கு N,N-டைமெத்திலசிட்டமைடு (CH3CONMe2, இங்கு Me = CH3) என்ற பெயர் வைக்கப்படுகிறது. எளிமையாக டைமெத்திலசிட்டமைடு என்ற பெயரால் வழக்கமாக அழைக்கப்படுகிறது. வளைய அமைடுகள் லாக்டம்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. அவை கண்டிப்பாக இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை அமைடுகளாக இருக்கும். வேதி வினைக்குழு P(O)NR2 வைப் பெற்றுள்ள அமைடுகள் பாசுப்போனமைடுகள் என்றும் வேதி வினைக்குழு SO2NR2 வைப் பெற்றுள்ள அமைடுகள் சல்போனமைடுகள் என்றும் பெயரிடப்படுகின்றன <ref>Organic Chemistry IUPAC Nomenclature. Rules C-821. Amides http://www.acdlabs.com/iupac/nomenclature/79/r79_540.htm</ref>.
 
== காரத்தன்மை ==
 
அமீன்களுடன் ஒப்பிடுகையில் அமைடுகள் மிகவும் வலிமை குறைந்த காரங்களாகும். ஓர் அமீனுடைய இணை அமிலம் 9.5 என்ற pKa மதிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஓர் அமைடினுடைய இணை அமிலம் −0.5 pKa மதிப்பைப் பெற்றுள்ளது. ஆகையால் அமைடுகள் தண்ணீரில் தெளிவாக குறிப்பிடத்தக்க அளவில் அமில-காரப் பண்புகளுடன் இல்லை எனலாம். இந்தக் காரக் குறைவுத் தன்மை கார்பனைல் குழுவின் எலக்ட்ரானைத் திரும்பப்பெறும் தன்மையால் விவரிக்கப்படுகிறது. இங்கு நைட்ரசன் மேலுள்ள தனி இணை எலக்ட்ரான்கள் ஒத்திசைவால் உள்ளடங்காத் தன்மையைப் பெறுகின்றன. மறுபுறம் கார்பாக்சிலிக் அமிலங்கள், எசுத்தர்கள், ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களைக் காட்டிலும் அமைடுகல் வலிமையான காரங்களாக உள்ளன. அவற்றின் இணை அமிலங்களின் pKa மதிப்புகள் −6 மற்றும் −10 ஆக உள்ளன.
 
ஆக்சிசனின் எலக்ட்ரான் கவர் தன்மை அதிகம் என்பதால் கார்பனைல் (C=O) பிணைப்பின் இருமுனைவுத் தன்மை N–C பிணைப்பின் இரு முனைவுத்தன்மையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. (C=O) பிணைப்பின் இருமுனைவுத் தன்மை இருப்பதால் அமைடுகள் ஐதரசன் பிணைப்பு ஏற்பிகளாகச் செயல்படுகின்றன. முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைடுகளில் N–H பிணைப்பு இரு முனைவுத்தன்மை இருப்பதால் அவ்வமைடுகள் ஐதரசன் பிணைப்பு கொடையாளிகளாகத் திகழ்கின்றன. இதனால் நீர் மற்றும் பிற மூலோபாய கரைப்பான்களுடன் அமைடுகள் ஐதரசன் பிணைப்பில் ஈடுபட இயலும். ஆக்சிசன் அணுவானது ஐதரசன் பிணைப்பை தண்ணீரிலிருந்து ஏற்றுக்கொள்ள முடியும், மேலும் N-H பிணைப்பு ஐதரசன் பிணைப்பை கொடையாக அளிக்க முடியும். இதுபோன்ற தொடர்புகளின் விளைவாக ஐதரோகார்பன்களை விட அமைடுகள் தண்ணீரில் அதிகமாக கரைகின்றன,
வரிசை 30:
{{wikiquote}}
*[http://www.organic-reaction.com/synthetic-protocols/coupling-reagents-in-amide-synthesis/ Amide synthesis (coupling reaction) – Synthetic protocols] from organic-reaction.com
*[http://www.rsc.org/Chemsoc/Chembytes/IUPACGoldbook.asp IUPAC Compendium of Chemical Terminology]
 
{{வேதி வினைக்குழு}}
"https://ta.wikipedia.org/wiki/அமைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது