வெப்பக் கடத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q7465774
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{சான்றில்லை}}
வெப்ப மாற்றத்தில், '''கடத்தல்''' அல்லது '''வெப்பக் கடத்தல்''' (thermal conduction) என்பது வெப்பநிலை வேறுபாட்டால்(temperature gradient) உருவாகும் மூலக்கூற்று மோதல்களின் காரணமாக ஏற்படும் வெப்பப் பெயர்ச்சி (heat transfer) ஆகும். வெப்பக் கடத்தல் ''திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று நிலைகளிலும்'' நடைபெறும். ஒரு பொருளினுள்ளே அல்லது இரு பொருள்கள் ஒன்றுக்கொன்று நேரடி அல்லது மறைமுகத் தொடுதலில் இருக்கும் போது மட்டுமே வெப்பக் கடத்தல் நடைபெறும். வெப்பக் கடத்தலின் அளவு கடத்தும் பொருளின் வெப்பக் கடத்து திறனைச்(thermal conductivity) சார்ந்தது.
 
'''வெப்பக் கதிர்வீச்சு''' (thermal radiation) ''இரு பொருள்களுக்கு இடையே'' வெப்பப் பெயர்ச்சி நடைபெறும் நிகழ்வாகும். எந்த ஒரு ''ஊடகம் இல்லாமலும்'' வெப்பக் கதிர் வீச்சு நடைபெறும். ஆனால், வெப்பக் கடத்தல் ''பொருளின் உள்ளே'' வெப்பம் கடத்தப்படும் நிகழ்வு. வெப்பக் கடத்தல் ஊடகம் இன்றி நடைபெறுவது இல்லை. '''வெப்பச் சலனம்'''(thermal convection) மற்ற இரண்டு வெப்பப் பெயர்ச்சிகளிலும் இருந்து சற்றே வேறுபட்ட நிகழ்வு. திண்மம் மற்றும் திரவ ஊடகங்களுக்கு இடையே பெரிய அளவிலான நகர்வு இருக்கும் போது வெப்பம் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு நகர்வதே வெப்பச் சலனம் ஆகும். இதனைச் சிலர் சிறப்பு வகை வெப்பக் கடத்தல் என்றும் கூறுவதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/வெப்பக்_கடத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது