"குருதிக்குழல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎கட்டமைப்பு: பராமரிப்பு using AWB
சி (→‎கட்டமைப்பு: பராமரிப்பு using AWB)
 
குருதிக் கலன்களில் நாடிகளும், நாளங்களும் பிரதானமாக மூன்று படைகளாலான சுவரைக் கொண்டுள்ளன. நாடிகளினதும் நாளங்களினதும் கட்டமைப்பொழுங்கு ஒன்றாயினும், இவற்றுக்கிடையில் இப்படைகளில் தடிப்பு வேறுபாடு காணப்படுகின்றது. பிரதானமான இழையப் படைகள்:-
* உட்கவசம்: இரத்தக் கலனின் மிக மெல்லிய படை. தந்துகிகள் அல்லது குருதி மயிர்க்கலன்களில் இப்படை மாத்திரமே இருக்கும். இப்படை எளிய செதின் மேலணியாலான அகவணியால் ஆக்கப்பட்டது. இது ஒற்றைக் கலப்படை தடிப்புடைய படியாகும். இப்படையிலுள்ள கலங்களை பல்சக்கரைட்டாலான பசை பிணைத்திருக்கும். நாடிகளிலும், நாளங்களிலும் இவ்வடிப்படைப் படைக்கு மேலதிகமாக மேலும் இரு படைகள் காணப்படுகின்றன.
 
* நடுக்கவசம்: மீள்சக்தியிழையம் மற்றும் வட்டத்தசையாலான குருதிக் கலன் படையாகும். இதிலுள்ள வட்டத்தசையைப் பயன்படுத்தி இரத்தக் குழாயின் துவாரத்தின் விட்டத்தை மாற்றியமைக்க முடியும். இவ்வாறு குருதிக் கலனூடாக செல்லும் குருதியின் அளவைக் கட்டுப்படுத்தலாம். நாடிகளின் நடுக்கவசத்தை விட நாளங்களின் நடுக்கவசம் மெல்லியதாகும். இதனால் நாளங்களின் குருதி செல்லும் துவாரத்தின் விட்டம் அதிகமாகும். எனவே நாளங்களில் பொதுவாக குருதியமுக்கம் குறைவாகும்.
 
* வெளிக்கவசம்: கொலாஜன் நார்களோடிணைந்த [[தொடுப்பிழையம்|தொடுப்பிழையத்தால்]] ஆன வெளியிலுள்ள படையாகும். இப்படையிலேயே குருதிக்கலனில் குருதியோட்டத்தைக் கட்டுப்படுத்தும் [[நரம்பு]]கள் இணைகின்றன. பெரிய நாடிகளிலும், நாளங்களிலும் வெளிக்கவசத்தில் குருதி வழங்கும் சில மயிர்க்கலன்களும் உள்ளன.
[[படிமம்:Blood vessels-ta.svg|center|இரத்தக் குழாய்களின் கட்டமைப்பு|720px]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745584" இருந்து மீள்விக்கப்பட்டது