ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
[[படிமம்:Fiber optic illuminated.jpg|thumb|right| [[ஒளிவடம்]]]]
 
'''ஒளியிழை''' அல்லது '''ஒளிநார்''' அல்லது '''கண்ணாடி ஒளியிழை''' (''optical fibre'' அல்லது ''optical fiber'') என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று [[ஒளி]]யைக் கடத்தும் இழை. இது ஓர் [[அலைநடத்தி]] போன்று தொழிற்பட்டு இழையின் இரு முனைகளுக்கிடையேயும் ஒளியைக் கடத்தும் தன்மையுடையது.<ref>{{cite book|author=Thyagarajan, K. and Ghatak, Ajoy K. |title=Fiber Optic Essentials|url=http://books.google.com/books?id=k83sN7SJLVgC&pg=PA34|year= 2007|publisher=Wiley-Interscience|isbn=978-0-470-09742-7|pages=34–}}</ref> [[பயன்பாட்டு அறிவியல்]], [[பொறியியல்]] ஆகிய நெறிகளில் ஒளியிழைகளின் வடிவமைப்பு மற்றும் பயன்பாடுகள் '''இழை ஒளியியல்''' (''fiber optics'') என அழைக்கப்படுகின்றது. இதன் பயன்பாடு [[கணினி]]யின் தரவுகளையும், [[தொலைபேசி]]யின் குறிகைகளையும் ([[குறிப்பலை]]களையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று மிகவும் பயன்படுகின்றது. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிபலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப் பெறுகின்றன. அதே போல உடலின் உள்ளுறுப்புகளின் பகுதியைச் சோதனை செய்யவும், பிற கருவிகளின் உட்பகுதியைச் சோதனை செய்யவும் படம் எடுத்து அந்தத் தரவுகளை வெளிக்கொணரவும் பயன்படும் [[ஒளியிழைநோக்கி]] (fibrescope) போன்ற கருவிகளிலும் இந்த ஒளியிழை (ஒளிநார்) பயன்படுகின்றது.
 
ஒளியலைகள் மிகுந்த அதிர்வெண் கொண்டவை ஆகையால், கூடுதலான குறிகைகளை ஏற்றி செலுத்த இயலும். இதனால் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக [[கற்றையகலம்]] ([[தரவு வேகம்]]) கொண்டதான, [[ஒளியிழை தொலைதொடர்பு]]களில் பயன்படுத்தப்படுகிறது. [[2010]] ஆம் ஆண்டில் [[கூகுள்]] நிறுவனம் ஒளியிழை தொலை தொடர்பு தொழில்நுட்பத்தைக்கொண்டு அதிவேக இணைய தொடர்புகள் (அதாவது 1 Gb/s தரவு வேக தொடர்புகள்) கொண்டுவர சில சோதனைகள் செய்துவருகிறது.
இங்கு செப்புக் கம்பிகள் போன்ற [[மாழை]]க் கம்பிகளுக்கு மாறாக [[கண்ணாடியிழை]]கள் பயன்படுத்தப்படுகிறன, ஏனென்றால் [[குறிகை]]கள் (''signals'') இதனுள் பயணிக்கும் பொழுது அதன் [[ஆற்றல்]] குறைவாகவே இழக்கிறது; மேலும் இவை [[மின்காந்த விளைவு]]கள் தடுப்பு திறன் கொண்டவையாகும். இவை ஒளியூட்டுவதற்காகவும் பயன்படுத்துவார்கள்; கோவையாக சேர்த்து இவைகளை ஒரு ஒளியுருவுவை (பிம்பத்தை) கடத்தவும் பயன்படும். இதனை சிறப்பாக வடிவமைத்து தயாரித்தால் பல்வேறு பயன்பாடுகளில் இவை துணை புரியும், எடுத்துக்காட்டாக, [[ஒளியிழை உணரி]]கள் மற்றும் இழைச் [[சீரொளி]]கள்.
 
ஒளியிழைகள், [[முழு அக எதிரொளிப்பு]] கொண்டதான [[உள்ளகம்]] என்ற மையப்பகுதியில் தான் ஒளியை ஓரிடத்தில் இருந்து மற்றையிடங்களுக்கு கடத்தும். இதனாலேயே ஒளியிழைகள் [[அலைநடத்தி]]களாக செயலாற்றுகிறது. கண்ணாடி ஒளியிழைகளில் [[ஒளி பரவல் |ஒளி பரவும்]] முறை பொருத்து அதை [[ஒருமுக பரவல் ஒளியிழை]]கள் என்றும், [[பன்முக பரவல் ஒளியிழை]]கள் என்றும் கூறலாம். [[பன்முக பரவல் ஒளியிழை]]கள் பெரும்பாலும் அதிக உள்ளக விட்டம் கொண்டதாகவும், சிறு தொலைவு தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், உயர் ஆற்றலை கடத்துவதாகவும் அமைந்து உள்ளது. [[ஒருமுக பரவல் ஒளியிழை]]கள் நெடுதூர அதாவது 550 மீ (1800 அங்குலம்) அளவுக்கு மேற்ப்பட்ட தூரத்திற்கு தகவல் (ஒளி) கடத்தும் பொருளாக பயன்படும்.
 
ஒளிவடங்களின் நீளத்தை சேர்ப்பது மின் கம்பிகளை காட்டிலும் மிக கடினமானது ஆகும். அதன் முனைகளை கவனமாக பிளவு செய்யவேண்டியதும், அவைகளை இணைப்பதற்கு [[மின்பாய்வு|மின்பாய்வினால்]] அதனை உருக்கவோ அல்லது வேறு இயந்திரங் கொண்டோ செய்தல் வேண்டும். களட்டக்கூடிய இணைப்புகளுக்கு தனி [[வட இணைப்பி]]கள் பயன்படுத்துவர்.
== பயன்கள் ==
===ஒளியிழை தொடர்பு===
ஒளியிழை என்பது [[கணினி வலையிணைப்பு ]] களிலும், [[தொலைதொடர்பு]]த் துறைகளிலும் ஒரு ஊடகமாக பயன்படுகிறது, ஏனென்றால் இவை எளிய முறையில் [[ஒளிவடம்]] செய்வதாகவும் உள்ளது. இது குறிப்பாக வெகு தூர கடத்திகளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் இவை ஒளியை கடத்தும் பொழுது மின்சார வடத்தினை காட்டிலும் சிதறல்கள் (ஆற்றல் குறைதல்) குறைவாகவே உள்ளது. இவை குறைந்த [[மீட்டுருவாக்கி]]களை கொண்டே வெகு தொலைவு ஒளியை கடத்த பயன்படுகின்றன . இதனோடு , ஒளியிழைகளில் பரவிய ஒற்றை-புகுபாதை ஒளிக் குறிகைகள் கடத்து வீதத்தை உயர்வான 111 Gbps வரை வீச்ச மாற்றங்கள் (modulation) செய்யமுடியும் என்று நிப்பான் தொலைத்தந்தி மற்றும் தொலைப்பேசி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது . ஆயினும் 10 அல்லது 40 Gbps உள்ள ஒரு தொடர்பு குறிப்பாக பிரித்த அமைப்புகளாகும் . ஒவ்வொரு ஒளியிழையிலும் எத்தனை புகுபாதைகளை (channels) வேண்டுமானாலும் அமைக்கலாம் ; ஒவ்வொன்றும் வெவ்வேறு ஒளி அலைநீளத்தை பயன்படுத்தும் ( [[அலைநீள பகு பன்னமைப்பு]] (Wavelength-division Mutiplexing)) . ஒற்றை புகுபாதை தரவு விகிதம் FEC Overhead குறைத்து , புகுபாதையின் எண்ணிக்கையை பெருக்குவது ஒரு ஒளியிழையின் சராசரி தரவு விகிதம் ஆகும் . [[பெல்]] ஆய்வகத்தில் நடக்கும் நடப்பு ஆய்வக ஒளியிழை [[தரவு விகிதம்]] 155 புகுபாதைகளை அமைத்து சுமார் 7000 [[கி.மீ]] தொலைவை 100 Gb/s வேகம் கொண்டதாக உள்ளது .
 
சிறு தொலைவு பயன்பாடுகளில் , அதாவது ஒரு அலுவலகத்திக்குள் உருவாக்கும் வலையிணைப்பு போன்றவற்றில் , ஒளியிழை வட அமைப்பானது வட நாளங்களின் இடத்தை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது . இது எதனால் என்றால் , நாளிணை [[காட்-5]] ஈத்தர்நெட் வட அமைப்பு போன்று , ஒரு ஒளியிழை மின் வடங்களை காட்டிலும் பன்மடங்கு தரவுகளை எடுத்துச்செல்லும். மேலும் இவை மின்சார விளைவுகள் தடுப்பு திறன் கொண்டவை ; வெவ்வேறு வடங்களின் குறிகைகளுக்கிடையில் குறுக்கு பரிமாற்றங்கள் ஏற்ப்படாது ; சூழல் சத்தம் குறிக்கிடாது .
 
== செயல்முறை கொள்கை ==
கண்ணாடி ஒளியிழை என்பது [[முழு அக எதிரொளிப்பு|மொத்த உட்புற எதிரொளிப்பினால் ]] ஒளியை தனது நேரச்சில் கடத்தும் உருளையான மின்காப்பு [[அலைநடத்தி]] ஆகும் . ஒளியிழை மின்காப்பு பொருளினால் உருவாக்கிய அச்சுள்ளையும் , அதை சுற்றிய மின்காப்பு அச்சுறையையும் கொண்டிருக்கும் . ஒளிக் குறிகையை ஒளியிழையின் அச்சுள்ளிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால் , அச்சுறையை விட அச்சுள்ளிற்கு [[ஒளிவிலகல் குறிப்பெண்]] அதிகமாக இருக்க வேண்டும் . அச்சுளிற்கும் அச்சுறைக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதி [[படிமாற்று ஒளியிழை]]யில் உள்ளார்ப்போல் படிப்படியாகவும் ,[[சீர்மாற்று ஒளியிழை]]யில் உள்ளார்ப்போல் சீராகவும் இருக்கலாம் .
 
===ஒளிவிலகல் குறிப்பெண் ===
===மொதத் உட்புற எதிரோளிப்பு===
 
ஒளி அதிக அடர்த்தி பொருளில் இருந்தது குறைந்த [[அடர்த்தி]] பொருளுக்கு செல்லும் போது [[ஒளி விலகல்]] ஏற்படுகிறது. இந்த ஒளி விலகல் ஒளி விழும் கோணத்தை (Angle of Incidence) பொருத்து வேறுபடுகிறது. இந்த கோணம் அதிகரிக்க அதிகரிக்க விலகு கோணமும் அதிகரிகின்றது. ஒரு குறிபிட்ட விழும் கோணத்திற்கு விலகு கோணம் 90 டிக்ரி அடைகிறது. அதற்கு மேல் விழும் கோணம் அதிகரிக்கும் பொழுது ஒளி அதே ஊடகத்தினுள் எதிரொளிகப்படுகிறது. இதை மொதத் உட்புற எதிரோளிப்பு (Total Internal Reflection) எனபடுகிறது. <ref>{{cite book|author=Gerg Keiser |title=Optical Fiber Communications|url=https://books.google.co.in/books?id=5JeN4QhYo8kC&pg=PR2&lpg=PR2&dq=optical+fiber+communication+by+gerd+keiser&source=bl&ots=Z_YXnWtYax&sig=Aldd-4o6B-ZdeukJbOqyV-AHIEo&hl=en&sa=X&ved=0ahUKEwi9-q6CgpHMAhVSkY4KHcaWCd0Q6AEIHTAB#v=onepage&q&f=false}}</ref>
 
== இவற்றையும் பார்க்க==
*[[வன்நெகிழி]]
*[[கண்ணாடியிழை]]
 
[[பகுப்பு:பயன்பாட்டு அறிவியல்]]
[[பகுப்பு:ஒளியியல்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:பயன்பாட்டு அறிவியல்]]
[[பகுப்பு:ஒளியியல்]]
 
[[sr:Оптички кабл]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745845" இருந்து மீள்விக்கப்பட்டது