முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 854 பிறப்புகள்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 64:
அல்ஜூதரி வல் ஹஸ்பா (சின்னமுத்துவும் பெரியம்மையும்) என்னும் இவரது மற்றொரு நூல் அம்மை நோய்கள் பற்றி எழுதப்பட்ட முதல் ஆவணமாகக் கருதப்படுகின்றது. இந்நூல் பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
 
இவரது மற்றொரு நூலான "கிதாப் திப்பில் மன்சூர்" கிரேக்கம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகளே முஸ்லிம்களது மருத்துவ விஞ்ஞானம் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. இவரது மருத்துவ சாதனைகளை கெளரவப்படுத்தும் முகமாக இவரின் உருவப்படம் இன்று பாரிஸ் பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பொது மருத்துவத்துறையில் மாத்திரமன்றி பிரயோக மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
 
கண்மருத்துவம், சத்திரசிகிச்சைத்துறை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஒருவித நூலிழையத்தை மிருகங்களின் குடலிலிருந்து கண்டுபிடித்தார். "வென்ரோஸா" என்னும் நோயை முதன்முதலாக அடையாளம் கண்டு, அதற்கு ஒட்டுண்ணி காரணம் எனக் கண்டுபிடித்தவரும் இவரே. மேகநோய் பற்றியும் உடல்நோய் பற்றியும் இவர் ஆராய்ந்து வெளியிட்ட கருத்துக்கள் அதிசயக்கத்தக்கன. குரல்வளைக்குள் குழாயினை உட்செலுத்தி சிகிச்சை செய்தல், கடின பிரசவத்தின் போது கையை உட்செலுத்தி குழந்தையைத் திருப்பி விடுதல், வயிற்றையும் கர்ப்பப்பையையும் பிளந்து குழந்தையை எடுத்தல் போன்ற முறைகளையும் அறிமுகம் செய்தார். வெளியில் உள்ள ஒளி கண்களில் ஊடுருவிச் செல்வதாலேயே கண்களால் பார்க்க முடிகிறது என்னும் தத்துவத்தை முதலில் நிறுவியவரும் இவரே.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_இப்னு_சக்கரியா_அல்-ராசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது