கிராம் சாயமேற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 13:
இச்சாயமேற்றல் முறை மூலம் பக்டீரியாக்களை கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் பக்டீரியாக்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்க முடிகின்றது. பக்டீரியாக்களின் கலச்சுவர் [[பெப்டிடோகிளைக்கன்]] எனும் பல்சக்கரைட்டு மற்றும் இணைக்கப்பட்ட அமினோ அமிலங்களாலானது. கிராம் நேர் பக்டீரியாக்களின் கலச்சுவர் அதிக தடிப்புடையது என்பதால் கிராம் சாயமேற்றலின் போது இடப்படும் [[பளிங்கு ஊதா]] சாயத்தை ஏற்கின்றன. இதனால் கிராம்-நேர் பக்டீரியாக்களை கிராம் சாயமேற்றலின் பின்னர் நுணுக்குக்காட்டியினால் அவதானித்தால் அவை ஊதா நிறத்தில் காட்சியளிக்கின்றன. எனினும் கிராம்-எதிர் பக்டீரியாக்களில் கலச்சுவரின் பெப்டிடோகிளைக்கன் படை மிகவும் தடிப்புக் குறைவாக இருப்பதால் இவை ஏற்கும் பளிங்கு ஊதா சாயம் அற்கஹோலால் கழுவப்படும் போது அகற்றப்பட்டு விடுகின்றது. இதனால் பின்னர் இடப்படும் குங்குமச் சாயத்தையே இவை ஏற்கின்றன. இதனால் கிராம்-எதிர் பக்டீரியாக்கள் கிராம் சாயமேற்றலின் பின்னர் குங்குமத்துக்குரிய இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.
 
பக்டீரியாக்களைப் போல ஆர்க்கியா பெப்டிடோகிளைக்கனாலான கலச்சுவரைக் கொண்டிராமையால் இவற்றை கிராம் சாயமேற்றலின் மூலம் பிரித்தறிய முடியாது.
 
===கிராம் சாயமேற்றும் முறை===
வரிசை 22:
* பின்னர் வழுக்கி மீது அயோடீன் கரைசல் இட வேண்டும். அயோடீன் பளிங்கு ஊதாச் சாயத்தை கலச்சுவரில் நிலைப்படுத்த உதவும்.
* அல்கஹோல் அல்லது அசிட்டோனால் நிறநீக்கம் செய்ய வேண்டும்.
* குங்குமப்பூச் சாயம் மூலம் மீண்டும் நிறமூட்டல் வேண்டும்.
 
பளிங்கு ஊதாச் சாயத்தை (Crystal Violet- CV) [[நீர்|நீரில்]] கரைக்கும் போது அது CV<sup>+</sup> மற்றும் Cl<sup>-</sup> அயன்களாகப் பிரிகையடையும். இந்த இரண்டு அயன்களும் கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் ஆகிய இரு வகை பக்டீரியாக்களின் கலச்சுவரினூடாகவும் ஊடுருவும். CV<sup>+</sup> அயன் பக்டீரியக் கலங்களிலுள்ள மறையேற்றமுள்ள அயன்களுடன் தாக்கமடைந்து சாயமேற்றப்பட்ட பக்டீரியாக்களை ஊதா நிறமாக மாற்றுகின்றது.
வரிசை 33:
===கிராம்-நேர் பக்டீரியாக்கள்===
 
கிராம்-நேர் பக்டீரியாக்கள் பொதுவாக கலத்தைச் சூழ ஒரு பொஸ்போ-இலிப்பிட்டு மென்சவ்வையும், அதனைச் சூழ தடிப்பான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரையும் கொண்டுள்ளன. ''Firmicutes'' மற்றும் ''Actinobacteria'' வகைகளைச் சேர்ந்த பக்டீரியாக்கள் இவ்வாறு உள்ளன.
 
===கிராம்-எதிர் பக்டீரியாக்கள்===
"https://ta.wikipedia.org/wiki/கிராம்_சாயமேற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது