அடியிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
தாவரத்தில் கலனிழையத்தையும், மேலணி இழையத்தையும் தவிர்ந்த ஏனைய அனைத்து இழையப் பகுதிகளும் '''அடியிழையம்''' எனும் வகைக்குள் உள்ளடங்கும். மூன்று வகையான இழையங்கள் அடியிழைய வகைக்குள் உள்ளடங்குகின்றன. புடைக்கலவிழையம், ஒட்டுக்கலவிழையம், வல்லுருக்கலவிழையம் என்பனவே அவையாகும். புடைக்கலவிழையமும், ஒட்டுக்கலவிழையமும் முதிர்ச்சியடைந்த பின்னரும் உயிருடன் இருக்கக்கூடிய கலங்களாகும். மென்மையான தாவரப் பாகங்களை புடைக்கலவிழையம் ஆக்குகின்றது. ஒட்டுக்கலவிழையம் தாவரத்துக்கு உறுதித்தன்மை வழங்குவதற்காக தடித்த முதற்சுவருடைய கலங்களைக் கொண்ட கலங்களாகும். வல்ல்ருக்கலவிழையம் முதிர்ச்சியின் போது இறந்த கலங்களைக் கொண்டிருப்பதுடன், தாங்கும் தொழிலைப் புரிவதற்காக இலிக்னின்னாலான துணைச்சுவர் படிவுகளைக் கொண்டிருக்கும்.
 
==புடைக்கலவிழையம்==
வரிசை 9:
* சுரத்தல். உ-ம்: பிசின் சுரத்தல்.
* காயமேற்படும் போது தூண்டப்பட்டு காயத்தைச் சரிப்படுத்தல்.
* காற்றுச் சேமிப்பு- நீர்வாழ் தாவரங்களின் மிதவையில் உதவும் காற்றுக்கலவிழையம் புடைக்கலவிழையத்தின் ஒரு வகையாகும்.
 
==ஒட்டுக்கலவிழையம்==
வரிசை 17:
==வல்லுருக்கலவிழையம்==
 
தாவரங்களின் பிரதான தாங்கும் இழையம் வல்லுருக்கலவிழையமாகும். இது இறந்த கலங்களாலான இழையமாகும். இவ்விழையத்தைச் சேர்ந்த கலங்கள் [[இலிக்னின்|இலிக்னினால்]] தடிப்பாக்கப்பட்ட துணைச்சுவர் காணப்படும். நார்கள், வல்லுருக்கள் எனும் இரு வகை வல்லுருக்கலவிழையங்கள் உள்ளன. நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் தென்னந்தும்பு, சணல் என்பன வல்லுருக்கலவிழைய நார்களாகும். தேங்காய்ச் சிரட்டையிலும், மரமுந்திரிகையிலும், பேரிச்சையிலும் வல்லுருக்களையும் காணலாம்.
 
===நார்கள்===
வரிசை 25:
===வல்லுருக்கள்===
[[File:Plant cell type sclerenchyma sclereid.png|thumb|வல்லுரு]]
இவை நார்களை விட அதிக தடிப்பான, படையுருவான இலிக்னின் துணைச்சுவர்களைக் கொண்ட கலங்களாகும். இவற்றில் நட்சத்திர வடிவான, வெறுமையான உள்ளிடம் உள்ளது. இவ்வுள்ளிடத்திலிருந்து கலச்சுவருக்குக் குறுக்காகக் கிளைத்தபடி கலம் உயிரோடு இருந்த போது பதார்த்தப் பரிமாற்றத்துக்கு உதவிய கால்வாய்கள் உள்ளன. இவை நார்கள் போலல்லாது குட்டையான கலங்களாகும். இவை [[ஆப்பிள்]], [[பியர்ஸ்]], [[பேரீச்சை]], [[தேங்காய்|தேங்காயின்]] சிரட்டை ஆகியவற்றில் காணப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அடியிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது