"மின்மமாக்கும் ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
அயனியாக்கும் ஆற்றலானது [[அணு|அணுவின்]] உருவளவு அதிகரிப்பதைப் பொருத்து குறைகிறது. அணுவின் உருவளவு அதிகமாக உள்ளபோது அயனியாக்கும் ஆற்றல் குறைவாக இருக்கும். சிறிய அணுக்களில் எலக்ட்ரான்கள் மிக நெருங்கியும், பெரிய அணுக்களில் எலக்ட்ரான்கள் இடைவெளியுடன் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இடைவெளியுடன் விரவியிருக்கும் எலக்ட்ரான்களை நீக்குவதற்கு குறைந்த அளவு ஆற்றலே தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே பெரிய அணுக்கள் குறைந்த அயனியாக்கும் ஆற்றலையும் சிறிய அணுக்கள் அதிக அயனியாக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளன.
 
[[பெரிலியம் | பெரிலியத்தின்]] அயனியாக்கும் ஆற்றல் [[லித்தியம் | லித்தியத்தின்]] அயனியாக்கும் ஆற்றலை விட அதிகமாகும். பெரிலியத்தின் [[அணுக்கரு அளவு]] 112 pm.மற்றும் லித்தியத்தின் அணுக்கரு அளவு 152 pm ஆகும். தனிம வரிசை அட்டவணையில் தனிமங்களின் அணு எண் அதிகரிக்க அதிகரிக்க அணுக்கருவின் அளவு குறைகிறது. பெரிலியத்தின் அணுஎண் 4. லித்தியத்தின் அணு எண் 3. இதனால் பெரிலியத்தின் அணுக்கருவின் மின்சுமை லித்தியத்தின் அணுக்கருவின் மின்சுமையைவிட அதிகமாக இருக்கும். அணுக்கருவின் மின்சுமை அதிகமாக இருந்தால் அணுக்கரு மற்றும் வெளிக்கூட்டு எலக்ட்ரான் ஆகியவற்றிற்கு இடையேயான ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். எனவே பெரிலியத்தின் அயனியாக்கும் ஆற்றல் லித்தியத்தின் அயனியாக்கும் ஆற்றலைவிட அதிகமாக இருக்கும்.
 
=== உட்கரு மின்சுமையின் எண் மதிப்பு ===
அணுவின் உட்கருவிலுள்ள [[புரோட்டான்கள்|புரோட்டான்களின்]] [[அணுக்கரு மின்சுமை]] அதிகமாக இருந்தால் அயனியாக்கும் ஆற்றலும் அதிகரிக்கும். அதிகளவு புரோட்டான் மின்சுமை எலக்ட்ரான்களை அதிக விசையுடன் பிணைத்திருக்கும். இவ்விசையில் இருந்து வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரானை நீக்குவதற்கு அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.
 
[[மெக்னீசியம்|மெக்னீசியத்தின்]] உட்கரு மின்சுமை ( 12 புரோட்டான்கள் ) [[சோடியம்| சோடியத்தின்]] உட்கரு மின்சுமையை விட ( 11 புரோட்டான்கள் ) அதிகமாகும். எனவே மெக்னீசியத்தின் அயனியாக்கும் ஆற்றல் சோடியத்தின் அயனியாக்கும் ஆற்றலை விட அதிகமாகும்.
 
=== உள்கூட்டிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ===
[[எலக்ட்ரான் சுற்றுப்பாதை| எலக்ட்ரான் சுற்றுப்பாதைகளின்]] உருவளவு அயனியாக்கும் ஆற்றலை பாதிக்கிறது. ஒரே இணைதிறன் உள்ள s எலக்ட்ரான் p,d மற்றும் f எலக்ட்ரான்களைவிட அணுக்கருவிற்கு அருகில் இருப்பதால் எலக்ட்ரான்களின் ஊடுருவும் தன்மை s > p > d > f என்ற வரிசையில் அமைகிறது.
 
[[அலுமினியம்|அலுமினியத்தின்]] அயனியாக்கும் ஆற்றல் [[மெக்னீசியம்| மெக்னீசியத்தைவிட]] குறைவாகும். மெக்னீசியத்தின் [[எலக்ட்ரான் அமைப்பு]] [Ne]3s<sup>2</sup> மற்றும் அலுமினியத்தின் எலக்ட்ரான் அமைப்பு [Ne]3s<sup>2</sup> 3p<sup>1</sup> ஆகும். இவ்விரண்டையும் நோக்கும்போது அலுமினியத்தில் ஒரு 3p எலக்ட்ரானையும் மெக்னீசியத்தில் ஒரு 3s எலக்ட்ரானையும் நீக்க வேண்டும். ஆனால் s எலக்ட்ரானைவிட p எலக்ட்ரானை எளிதில் நீக்கிவிடலாம். எனவே அலுமினியத்தின் முதல் அயனியாக்கும் ஆற்றல் மெக்னீசியத்தைவிட குறைவாகும்.
 
=== எலக்ட்ரான் அமைப்பினால் வேறுபாடு ===
அணுக்கள் மிகவும் நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்று உள்ளபோது அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும். உயரிய வாயுக்கள் நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்றிருப்பதால் அவை அதிகபட்ச அயனியாக்கும் ஆற்றலை உடையவையாகும்.
 
[[நியான்|நியானின்]] அணுக்கரு மின்சுமை (10) [[புளோரின்| புளோரினின்]]அணுக்கரு மின்சுமையைவிட ( 9 ) அதிகமாகும். அணுக்கருவின் மின்சுமை அதிகரிக்கும்போது அணுக்கருவிற்கும், வெளிக்கூடு எலக்ட்ரானுக்கும் உள்ள ஈர்ப்புவிசை அதிகரிக்கும். எனவே நியானின் முதல் அயனியாக்கும் ஆற்றல் புளோரினைவிட அதிகமாகும்
 
==மேற்கோள்கள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2746549" இருந்து மீள்விக்கப்பட்டது