விண் உடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
 
[[Image:Apollo Moonwalk2.jpg|thumb|அப்பலோ-11 பயணத்தின் போது [[எட்வின் ஆல்ட்ரின்]] விண் உடையுடன் சந்திரத் தரையில்.]]
'''விண் உடை''' அல்லது '''விண்வெளி உடை''' (space suit) என்பது வெப்பமான மற்றும் உறை கடுங்குளிர் போன்ற வேறுபட்ட வெப்ப நிலை நிலவும் வெற்றிடமான [[விண்வெளி]]யில் மனிதனின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு [[ஆடை]]யாகும். மேலும் இது பாய்ந்துவரும் விண் தூசுகளில் இருந்தும் விண்வெளி வீரரின் உடலைப் பாதுகாக்கும் வகையிலும் வீரரின் உடலுக்குத் தேவைப்படும் [[காற்று]], [[நீர்]], வெப்பம் ஆகியன கிடைககும் விதத்திலும், [[வேர்வை]], [[சிறுநீர்]], [[கரியமிலவாயு]] ஆகியவற்றை அகற்றும் விதத்தில் விண் உடை வடிவமைக்கப்படுகிறது. வான்வெளியில் உள்ளவர்களோடும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ளவர்களோடும் பேசுவதற்குச் சிறப்புக் கருவிகள் இந்த உடையில் பொருத்தப்பட்டதாக இருக்கும். இவ்வுடையின் முதுகில் சுவாசிக்கத் தேவைப்படும் [[ஆக்சிசன்]] தொட்டி இருக்கும்.<ref>http://www.astronautix.com/fam/spasuits.htmM=</ref> வின் உடையானது ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் அவரது உடல் அமைப்புக்கு ஏற்ப பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும். பெரும்பாலும் ஒவ்வொருவருக்கும் மூன்று உடைகள் தயாரிக்கப்படும் இதில் பயிற்சிக்கு ஒன்று, விண்வெளிப் பயணத்தின்போது ஒன்று, மாற்று உடை ஒன்று ஆகும். விண் உடைகளின் எடை புவியைப் பொறுத்தவரை மிகக் கூடுதலாக இருக்கும், ஆனால் இவை ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பயன்படுதும்போது எடை தெரியாது. விண்வெளி உடை ஒன்றின் சராசரி விலை மூன்று கோடிவரை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/விண்_உடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது