இசைவழி உளவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''இசைவழி உளவியல்''' (Psychology of music) என்பது [[உளவியல்]] மற்றும் இசையியலின் ஒரு பகுதியாகும் இது மனிதர்கள் [[இசை|இசைக்கு]] எவ்வாறு துலங்குகிறார்கள் இசையோடு எத்தகைய நடைமுறையைக் கொண்டிருக்கின்றனர் என்பனவற்றை ஆராயும் இயலாகும்.
 
== அறிமுகம் ==
வரிசை 8:
 
== தற்காலம் ==
மனிதாகள்; எவ்வாறு புலன் காண்கின்றனர் என்பதையும் இசைத் தொடர்பு நிகழ்ச்சிகள் அல்லது அனுபவங்கள் அவர்களிடம் எத்தகைய நடத்தையை தோற்றுவிக்கின்றன எனபதையும் பிறித்தறிதல் வேண்டும்.<ref> அறிவியல் களஞ்சியம் தொகுதி-18, தஞ்சை பல்கலைக் கழக வெளியீடு எண் 344, முனைவர் நே ஜோசப், (2009),ISBN: 978-81-7090-387-1</ref> இசைப்புலன் காணல் (Perception of Music) என்பது ஒலி வேறுபாடுகளை அறிதல், இசையின் பல்வேறு வகையான அதிர்வுகளை அறிதல், தனித்த இசை சுரங்களினின்றும் சுரக்கோவைகளினின்றும் முழுமைநிலை விளைவுகளைப் பெறுதல் போன்றவற்றைக் குறிக்கும்.
இசை வேறுபாடுகளை அறிவதற்கு நினைவு முதன்மையான தேவையாகும். இசைப்பகுதிகளையோ சுரங்களையோ நினைவு கூர்தல் உலகின் மற்ற செயல்களையும் காட்சிகளையும் நினைவு கூர்தலின் வேறுபட்டதாகும். ஏன் எனில் இசை மனிதர்களின் உள்ளத்தின் அகவுணர்வுகளோடு தொடர்புகொண்டுள்ளது. இக்காலத்தில் இசைத்திறன் சோதனைகள் உளவியல் சோதனையின் பகுதியாக அமைந்துள்ளன. சூடர் (Shuter), பென்டிலி (Bentley), பெர்லைன் (Berlyin); போன்ற உளவியலறிஞர்கள் இசைத்திறன் மனிதர்களிடம் இயற்கையாகப் பிறக்கும்பொழுதே பரம்பரை இயல் கூறுகளினால் ஏற்படும் நாட்டமா? சூழமைவு காராணமாக தோற்றுவிக்கக் கூடிய திறனா என்பது பற்றிய ஆய்வுகளைச் செய்துள்ளனர். இத்தகைய ஆய்வுகளுக்கு இயல் இசை புலவர்களின் அக அனுபவங்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டியுள்ளனர். இதன் பயனாக இசையில் ஏழு பொதுவான உட்கருத்து அமைந்திருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இசைத் திறன் சோதனைகள் செயற்சோதனைகளாக அமைக்கப்பட்டு இசைக்கணிப்பொறியின் (Musical Computer) மூலமும் அளிக்கப்படுகின்றன. தொழிலகங்களின் எத்தகைய இசையை இசைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் கூடும் என்பது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்து வருகிறது. சில தனியார் தொழில் நிறுவனங்கள் தொழில் நேரத்தில் மென்மையான இசையை தொழில்கூடங்களில் இசைக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவுகள் இன்னும் முழுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/இசைவழி_உளவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது