வரலாற்றுவரைவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Jacob de Wit - Allegorie op het schrijven van de geschiedenis 1754.jpg|thumb|200px|[[யேக்கப் டி விட்]]டின் (1754) வரலாறு எழுதுதல் பற்றிய கருத்துருவக ஓவியம். ஏறத்தாழ திறந்த மேனியாக இருக்கும் உண்மை வரலாறு எழுதுபவரைக் கவனித்துக்கொண்டு இருக்க, இடப்புறம் இருக்கும் [[பல்லாசு ஏதெனா]] (ஞானத்துக்கான கடவுள்) ஆலோசனை வழங்குகிறார்.]]
'''வரலாற்றுவரைவியல்''' (Historiography) என்பது, [[வரலாறு|வரலாற்றை]] ஒரு கல்விசார் துறையாக உருவாக்குவதில் வரலாற்றாளர்கள் கைக்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய ஆய்வுத்துறை ஆகும். அத்துடன் இதன் விரிவாக்கமாக ஒரு குறித்த விடயத்திலான ஏதாவது ஒரு தொகுதி வரலாற்று ஆக்கங்களையும் குறிக்கும். ஒரு குறித்த விடயத்திலான வரலாற்றுவரைவியல் என்பது, குறிப்பிட்ட தகவல் மூலங்கள், நுட்பங்கள், கோட்பாட்டு அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு வரலாற்றாளர்கள் அவ்விடயத்தை ஆய்வு செய்தனர் என்பதை உள்ளடக்கும். "ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றுவரைவியல்", கனடாவின் வரலாற்றுவரைவியல்", "பிரித்தானியப் பேரரசின் வரலாற்றுவரைவியல்", "தொடக்க இசுலாத்தின் வரலாற்றுவரைவியல்", "சீனாவின் வரலாற்றுவரைவியல்" என விடயம் சார்ந்தோ [[அரசியல் வரலாறு]], [[சமூக வரலாறு]] போன்ற வேறுபட்ட அணுகுமுறைகள், வகைகள் சார்ந்தோ வரலாற்றுவரைவியலை அறிஞர் விளக்குவர். கல்விசார் வரலாற்றின் வளர்ச்சியுடன், 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கி வரலாற்றுவரைவியல் ஆக்கங்கள் பல உருவாகின. எந்த அளவுக்கு வரலாற்றாளர்கள் தமது சொந்தக் குழு, பற்று ([[நாட்டுப்பற்று]]ப் போல) போன்றவற்றின் செல்வாக்குக்கு உட்படுகிறார்கள் என்பது விவாதிக்கப்படும் ஒரு விடயமாகும்.<ref>Marc Ferro, ''The Use and Abuse of History: Or How the Past Is Taught to Children'' (2003)</ref>
 
வரலாற்றாளர்களின் ஆய்வு ஆர்வம் காலத்தோடு மாறுபடுகிறது. அத்துடன், மரபுவழியான இராசதந்திர, பொருளாதார, அரசியல் வரலாறுகளில் இருந்து விலகிப் புதிய அணுகுமுறைகளை நோக்கி, சிறப்பாக சமூக, பண்பாட்டு வரலாற்று ஆய்வுகளை நோக்கிச் செல்வதைக் காணமுடிகின்றது. 1975 இலிருந்து 1995 வரை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தம்மை சமூக வரலாற்றோடு அடையாளம் காணும் பேராசிரியர்களின் எண்ணிக்கை 31% இலிருந்து 41% ஆகக் கூடியுள்ளது. அதேவேளை அரசியல் வரலாற்றோடு அடையாளம் காண்பவர்களின் தொகை 40% இலிருந்து 30% ஆகக் குறைந்துள்ளது.<ref>Diplomatic dropped from 5% to 3%, economic history from 7% to 5%, and cultural history grew from 14% to 16%. Based on the number of full-time professors in U.S. history departments. [[Stephen H. Haber]], David M. Kennedy, and Stephen D. Krasner, "Brothers under the Skin: Diplomatic History and International Relations", ''International Security'', Vol. 22, No. 1 (Summer, 1997), pp. 34–43 at p. 42 [http://www.jstor.org/stable/2539326 online at JSTOR]</ref> 2007 இல் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் வரலாற்று பிரிவு ஆசிரியர்கள் 5,723 இல் 1,644 (29%) பேர் சமூக வரலாற்றுடனும், 1,425 (25%) பேர் அரசியல் வரலாற்றுடனும் தம்மை அடையாளம் கண்டுள்ளனர்.<ref>See [http://www.history.ac.uk/ihr/Resources/Teachers/a27.html "Teachers of History in the Universities of the UK 2007&nbsp;– listed by research interest"]</ref>
 
== பெயர் ==
[[தொடக்க நவீன காலம்| நவீன காலத் தொடக்கத்தில்]] ''வரலாற்றுவரைவியல்'' என்னும் சொல் "வரலாற்றை எழுதுதல்" என்பதையும் ''வரலாற்றுவரைவாளர்'' என்னும் சொல் "வரலாற்றாளர்" என்பதையும் குறித்தது. அக்காலத்தில் சில நாடுகளில் அதிகாரபூர்வ வரலாற்றாளர்கள், "அரச வரலாற்றுவரைவாளர்" என்ற பதவிப் பெயரைக் கொண்டிருந்தனர். சுவீடனில் 1618 இலிருந்தும், இங்கிலாந்தில் 1660 இலிருந்தும், இசுக்காட்லாந்தில் 1681 இலிருந்தும் இவ்வாறான பதவி இருந்தது. இசுக்கட்லாந்தில் இப்போதும் உள்ளது. "வரலாறு எழுதப்பட்ட, எழுதப்படும் முறை பற்றிய ஆய்வு - வரலாறு எழுதுவதன் வரலாறு .... வரலாற்றுவரைவியலைக் கற்கும்போது நேரடியாகக் கடந்தகால நிகழ்வுகள் குறித்துக் கற்பதில்லை, மாறாக, தனிப்பட்ட வரலாற்றாளர்களின் ஆக்கங்களில் அந்நிகழ்வுகள் பற்றிய விளக்கங்கள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பது பற்றியே கற்கப்படுகிறது." என்னும் வரைவிலக்கணம் அண்மைக் காலத்திலேயே உருவானது. <ref>(''The Methods and Skills of History: A Practical Guide'', 1988, p. 223, {{ISBN|0-88295-982-4}})</ref>
 
== நவீன காலத்துக்கு முற்பட்ட வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்றுவரைவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது