வெப்பம் உமிழ் செயல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
வெப்ப இயக்கவியலில், '''வெப்பம் உமிழ் செயல்முறை''' (Exothermic process) என்பது தன் அமைப்பில் இருந்து சூழலுக்கு ஆற்றலை வெளியேற்றும் ஒரு வேதிவினை அல்லது செயல்முறையாகும். இவ்வாறு வெளியேற்றப்படும் ஆற்றலானது பொதுவாக [[வெப்பம்|வெப்பமாக]] இருக்கும் என்றாலும், ஒளி (தீப்பிழம்பு, பொறி), மின்னாற்றல், ஒலி (ஐதரசன் எரியும்போது உண்டாகும் வெடிப்பொலி) போன்ற பிற வடிவங்களிலும் அமைந்திருக்கலாம்.
 
வெப்பம் உமிழ் செயல்முறைக்கு எதிரானதாக, வினையின் போது வெப்பத்தை உள்ளெ இழுத்துக் கொள்ளும் செயல்முறைகள் [[வெப்பம் கொள் செயல்முறை]] எனப்படும். இவையிரண்டும் இயற்கையாக நிகழும் வேதிவினைகளின் இரு வகைகளாகும்.
 
வேதிவினைகளில் வேதிப்பொருள்களின் [[வேதிப் பிணைப்பு|பிணைப்புகளில்]] இருக்கும் ஆற்றலானது [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலாக]] மாற்றம் பெறுகிறது. ஒரு வினையைத் தொடங்கிவைக்கத் தேவையான ஆற்றலை விட அதிக அளவில் இப்பிணைப்பில் இருந்து ஆற்றல் வெளியேறுவதால், அமைப்பில் இருந்து சூழலுக்கு இவ்வெப்பம் வெளியேற்றப் படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வெப்பம்_உமிழ்_செயல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது