அமோனியம் நைட்ரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 162:
 
அம்மோனியம் நைட்ரேட்டை சேமிப்பதற்கும் பராமரிப்பதற்கும் பல பாதுகாப்பு வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தீப்பற்றும் பொருட்களுக்கு அருகில் இதைச் சேமிக்கக்கூடாது. குளோரேட்டுகள், கனிம அமிலங்கள் மற்றும் உலோக சல்பைடுகள் போன்ற சில வேதிப் பொருட்களுடன் சேர்த்து வைக்க அம்மோனியம் நைட்ரேட்டு பொருத்தமற்றது, இதனால் தீவிரமான அல்லது வன்முறை சிதைவுகள் உண்டாகும்.
 
அம்மோனியம் நைட்ரேட் 59.4% என்ற அளவில் ஈரப்பதம் கொண்டிருக்கிறது, இது வளிமண்டலத்தில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். எனவே, இறுக்கமாக மூடப்பட்ட கொள்கலனில் அம்மோனியம் நைட்ரேட்டை சேமிப்பது முக்கியம். இல்லையெனில் அது ஒரு பெரிய திடமான பொருளாக ஒன்று திரண்டுவிடும்.
 
அம்மோனியம் நைட்ரேட்டு போதுமான அளவு ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு நீர்மமாக மாறிவிடும். வேறு சில உரங்களுடன் அம்மோனியம் நைட்ரேட்டை கலந்தால் ஒப்பீட்டளவு ஈரப்பதம் குறைகிறது.
 
அமோனியம் நைட்ரேட்டை வெடிப்பொருளாக பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதால் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை தொடங்கின. உதாரணமாக, ஆத்திரேலியாவில் ஆபத்தான பொருட்கள் ஒழுங்குமுறை விதிகள் ஆகத்து 2005 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இத்தகைய ஆபத்தான பொருட்களை கையாள்வதற்கு உரிமம் பெறுதல் நடைமுறைக்கு வந்தது. தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கான , பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்விதிகளைப் பின்பற்றும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது.
 
கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்கள் போன்ற நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால் தனிப்பட்ட நபர்கள் பயன்பாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வரிசை 176:
== உடல் நலம் ==
 
வழங்குநர்களிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பு தரவுத் தாள்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான தகவல்கள் இணையம் மற்றும் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது.
 
அமோனியம் நைட்ரேட்டு உடல் நலத்திற்கு எத்தகைய கேட்டையும் விளைவிக்காது என்பதால் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
வரிசை 183:
== பேரழிவுகள் ==
 
அம்மோனியம் நைட்ரேட்டை சூடுபடுத்தும் போது அது நைட்ரசு ஆக்சைடு மற்றும் நீர் ஆவியாக சிதைவடைகிறது. இது ஒரு வெடிக்கும் வினை அல்ல என்றாலும் திடீர் வெடிப்பு மூலம் வெடித்து சிதற தூண்டப்படலாம். அமோனியம் நைட்ரேட்டின் அதிக அளவு கையிருப்பு ஆக்சிசனேற்றத்தின் காரணமாக ஒரு பெரிய தீ விபத்தாக முடியலாம். 1947 ஆம் ஆண்டு டெக்சாசு நகரத்தில் இத்தகைய ஒரு பேரழிவு நடந்தது. இதனால் அமோனியம் நைட்ரேட்டை சேமிப்பது மற்றும் கையாளுதலுக்கான கட்டுப்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமோனியம்_நைட்ரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது