சோடியம் பைகார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 13:
 
== பெயரிடுதல் ==
இந்த உப்பானது மிக நீண்ட காலமாக அறியப்பட்டதாக இருப்பதாலும், பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாலும், இந்த உப்பானது ரொட்டி சோடா, [[சமையல் சோடா]] மற்றும் சோடாவின் பை கார்பனேட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது.  நடைமுறையில் பேச்சு வழக்கில் சோடியம் பை கார்பனேட்டு மற்றும் சோடாவின் பை கார்பனேட்டு ஆகிய பெயர்கள் துண்டிக்கப்பட்டே விடுகின்றன. சோடியம் பைகார்ப், பைகார்ப் சோடா, பைகா என்பது கூட பொதுவான பெயர் வடிவங்களாக உள்ளன.  19 ஆம் நுாற்றாண்டில் இலத்தீன் மொழியில் சாலேரடசு (saleratus) என்ற வார்த்தை (பொருள்: காற்றேற்றப்பட்ட உப்பு) என்பது சோடியம் பைகார்பனேட்டு மற்றும் [[பொட்டாசியம் பைகார்பனேட்டு]] ஆகிவற்றுக்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பெயராகும்.
 
இச்சேர்மத்தின் பெயரிலுள்ள முன்னொட்டான “பை“ என்பதானது, சோடியம் கார்பனேட்டு மற்றும் இதர கார்பனேட்டுகளில் காணப்படும் ஒரு சோடியத்திற்கான (அல்லது உலோகத்திற்கான) கார்பனேட்டைப் போன்று இரண்டு  மடங்கு [[கார்பனேட்டு]] (CO3) இருப்பதாக உற்றுநோக்கப்பட்டு அறியப்பட்டதன் அடிப்படையில் வைக்கப்பட்டப், பழைய பெயரிடும் முறையிலிருந்து வந்ததாகும். நவீன முறையில் வேதிச்சேர்மங்களின் வேதிஇயைபு துல்லியமான முறைகளில் கண்டறியப்படுவதால் (சோடியம் பைகார்பனேட்டு என்று பெயரிடும் போது அறியப்படாமல் இருந்தது) NaHCO<sub>3 </sub> இல் உள்ள சோடியத்தின் அளவானது Na<sub>2</sub>CO<sub>3</sub> (Nல் உள்ள சோடியத்தின் அளவில் பாதியாக உள்ளது என்று வேறு விதமாகச் சொல்லப்படுகிறது. (Na எதிர் Na<sub>2</sub>).
 
== பயன்கள் ==
சோடியம் பை கார்பனேட்டு பல்வேறு விதமான விரிவான பயன்பாாடுகளைக் கொண்டுள்ளது.
 
=== சமையல் ===
ரொட்டி தயாரிப்பு சோடா என அழைக்கப்படும் சோடியம் பைகார்பனேட்டு முக்கியமாக அடுமனைத் (baking)  தொழிலில் ஒரு புளிப்பேற்றியாக பயன்படுகிறது. இது உணவு தயாரிக்கப் பயன்படும் மாவுப்பொருட்ளில் காணப்படும் அமிலத்தன்மையுடைய பகுதிப்பொருட்களுடன் வினைப்பட்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. இதன் காரணமாக, மாவுப்பொருளில் விரிவடைதல் நிகழ்ந்து இளகிய தன்மையும், விரும்பத்தகுந்த ஒரு இழையமைவும் உருவாகி, ரொட்டிகள், சோடா ரொட்டிகள், [[அடுமனை]]யில் தயாராகும் உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆகியவற்றில் மிருதுத்தன்மை உண்டாகிறது. இந்த வினையில் பாசுபேட்டுகள், எலுமிச்சைப் பழச்சாறு, டார்டார் குழைவு, வெண்ணெய், இன்தயிர், கோகோ, காடி (வினிகர்) போன்றவை சோடியம் பைகார்பனேட்டுடன் வினைபுரியும் பொருட்களாக உள்ளன. புளித்த மாவில் காணப்படும் இயற்கையான அமிலங்களுடன் சிறு அளவுகளில் சேர்த்து மேலும் புளிக்கச்செய்யலாம்.<ref>{{cite web|publisher=whatscookingamerica.com|url=http://whatscookingamerica.net/Bread/SourdoughPancakes.htm|title=Sourdough Pancakes Recipe}}</ref>
 
வெப்பப்படுத்துவதும் சோடியம் பைகார்பனேட்டை ஒரு மிருதுப்படுத்தும் காரணியாச் செயல்படச் செய்ய முடியும். வெப்பப்படுத்தும் போதும் சோடியம் பைகார்பனேட்டானது தன்னில் உள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி மாவுப்பொருளுக்கு மிருதுத்தன்மையை அளிக்கிறது.  அமிலத்தன்மையுள்ள பொருட்கள் சேர்க்கப்படாத போது, அதில் உள்ள பாதி அளவான கார்பன் டை ஆக்சைடு மட்டுமே வெளியிடப்படுகிறது. கூடுதலாக, அமிலமேதும் சேர்க்கப்படாத அடுமனை சோடா (அல்லது) ரொட்டி சோடா உருவாக்கப்பட்ட சோடியம் கார்பனேட்டு வலிமையான காரத்தன்மை கொண்டதாகவும், அடுமனையில் தயாரித்த உணவுப்பொருளுக்கு ஒரு கசப்பான சுவை, பிசுபிசுப்புத் தன்மை மற்றும் மஞ்சள் நிறம் ஆகியவற்றைத் தருகிறது. சமையல் சோடா என்பது நீரால் செயலேற்றம் செய்யப்பட்ட அமிலமொன்றை உள்ளடக்கியது என்ற விதத்தில் வித்தியாசப்படுகிறது. <ref>{{Cite web|url=http://nzic.org.nz/ChemProcesses/food/6D.pdf|title=THE CHEMISTRY OF BAKING|last=Czernohorsky, Hooker|accessdate=2017-01-22}}</ref><ref>{{Cite news|newspaper=FineCooking.com|work=FineCooking.com|title=Baking Soda and Baking Powder - FineCooking.com|url=http://www.finecooking.com/item/12173/baking-soda-and-baking-powder|language=en|accessdate=2017-01-22|access-date=2017-01-22}}</ref>  80&nbsp;°C வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தும் போது கார்பன் டை ஆக்சைடானது உருவாகி வெளிவருகிறது.<ref>{{Cite news|newspaper=About.com Food|work=About.com Food|title=The Many Practical Uses of Baking Soda in the Kitchen|url=http://foodreference.about.com/od/Ingredients_Basics/a/What-Is-Baking-Soda.htm|accessdate=2017-01-22|access-date=2017-01-22}}</ref>
: 2 NaHCO<sub>3</sub> → Na<sub>2</sub>CO<sub>3</sub> + H<sub>2</sub>O + CO<sub>2</sub>
சாதாரண [[அறை வெப்பநிலை]]யில் இந்த வினையானது மிக மெதுவாக நடைபெறுவதால், உணவுப்பொருள் அல்லது ரொட்டிகள் தயாரிப்பிற்காகத் தயார் செய்யப்பட்ட மாவினை அடுமனையில் வெப்பப்படுத்தப்படும் வரை விரிவடையாமல் இருக்கச் செய்யலாம்.
 
சமையல் சோடாக்களின் பலவகைகளில் சோடியம் பைகார்பனேட்டானது, கால்சியம் அமில பாசுபேட்டு, சோடியம் அலுமினியம் பாசுபேட்டு அல்லது டார்டார் குழைமம் ஆகியவற்றுடன் இணைந்து காணப்படும்.<ref>{{Cite web|url=http://www.cooking.com/recipes-and-more/glossary.aspx?GlossName=Baking+powder|title=Glossary Ingredients|publisher=Cooking.com}}</ref> சில நேரங்களில் காய்கறிகளை சமைக்கும் போது கூட அவற்றை மிருதுவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இவ்வாறு செய்யப்படுவது நடைமுறையில் இல்லாத செயலாகி விட்டது. இருப்பினும், ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க உணவகங்களில் உணவு தயாரிப்பில் இறைச்சியைப் பதப்படுத்த இது இன்னமும் பயன்படுத்தப்படுகிறது. சமையல் சோடாவானது உணவுப்பொருட்களில் உள்ள உயிர்ச்சத்து-சி (இடஞ்சுழி அசுகார்பிக் காடி அல்லது அசுகார்பிக் அமிலம்) போன்ற அமிலங்களுடன் வினைபுரியலாம். பொறித்த உணவு வகைகளை மேலும் மேம்படுத்த நீராவியுடன் சேர்த்து அனுப்பும் போது அதன் பாதையில் வைக்கப்படும் பொறித்த உணவுப்பொருளின் மொறுமொறுப்பு கூடுகிறது.
 
1920 களின் ஆரம்பத்திலேயே பைகார்பனேட் தங்களது சிறுநீரில் [[யூரியா]]வை இழந்து கொண்டிருக்கும் நோயாளிகளிடம் எலும்பின் வலிமையை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் அண்மையில், அந்தோணி செபாசுதியானின் சோதனைகள் உணவுடன் பைகார்பனேட்டை சேர்ப்பது (ஆய்வாளர் [[பொட்டாசியம் பைகார்பனேட்]]டை சேர்த்தார்) பெண்களிடம் [[மாதவிடாய்]] முடிந்த பின்னர் உள்ள காலகட்டத்தில் [[கால்சியம்]] இழப்பைக் குறைக்கிறது என்பதைக் காட்டுகின்றன. பைகார்பனேட்டை உணவுடன் இருபதாண்டுகளுக்குத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால், ஒரு கை, ஒரு கால் இவற்றின் எலும்புகளுக்கீடான கால்சியத்தைத் தருவதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. <ref>{{cite journal|last1=Douglas Fox|title=Hard cheese|journal=[[New Scientist]]|date=Dec 15, 2001|url=https://www.newscientist.com/article/mg17223214-900-hard-cheese}}</ref>
 
===பூச்சிக் கட்டுப்பாடு===
வரிசை 40:
 
===காரத்தன்மை/pH உயர்வு===
நீச்சல் குளங்கள், மருந்து நீரூற்றுகள், தோட்டங்களில் காணப்டும் குட்டைகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த காரத்தன்மையை நிர்வகிக்க சோடியம் பைகார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. சோடியம் பைகார்பனேட்டை சேர்ப்பது எப்பொழுதும் [[pH]] மதிப்பை உயர்த்தவே செய்யும் இதன் காரணமாக சரியான pH நிலையை எளிதாக நிர்வகிக்க முடிந்தது. pH மதிப்பானது குறைவாக இருந்து, காரத்தன்மையானது போதுமான அளவிற்கு இருக்கும் நேர்வில் சோடியம் பைகார்பனேட்டை pH மதிப்பை சரிசெய்ய பயன்படுத்தக்கூடாது. <ref>{{cite web|url=http://www.armandhammer.com/pdf/apoolownersguide.pdf|title=A pool owners guide by Arm & Hammer Baking soda|publisher=Armandhammer.com|accessdate=30 July 2009}}</ref>
 
===பட்டாசுத் தொழில்===
வரிசை 46:
 
===மென்மையான தொற்றுநீக்கி===
இச்சேர்மம் வலிமை குறைந்த [[தொற்றுநீக்கி]] பண்புகளைக் கொண்டுள்ளது. <ref name=Malik>{{cite journal|pmid=16540196|date=May 2006|author1=Malik, Y |author2=Goyal, S |title=Virucidal efficacy of sodium bicarbonate on a food contact surface against feline calicivirus, a norovirus surrogate|volume=109|issue=1–2|pages=160–3|doi=10.1016/j.ijfoodmicro.2005.08.033|journal=International Journal of Food Microbiology}}</ref><ref>{{cite journal|year=2000|title=Antimicrobial Activity of Home Disinfectants and Natural Products Against Potential Human Pathogens|journal=Infection Control and Hospital Epidemiology|volume=21|issue=1|pages=33–38|publisher=The University of Chicago Press on behalf of The Society for Healthcare Epidemiology of America|doi=10.1086/501694|pmid=10656352 |author1=Rutala|first1=W. A.|last2=Barbee|first2=S. L.|last3=Aguiar|first3=N. C.|last4=Sobsey|first4=M. D.|last5=Weber|first5=D. J.}}</ref> மேலும் இது ஒரு சில உயிரினங்களுக்கு எதிரான திறன்மிக்க பூஞ்சைக்கொல்லியாகவும் இருக்கிறது. <ref name=Zamani>{{cite journal|pmid=18396809|year=2007|author1=Zamani, M |author2=Sharifi, Tehrani, A |author3=Ali, Abadi, Aa |title=Evaluation of antifungal activity of carbonate and bicarbonate salts alone or in combination with biocontrol agents in control of citrus green mold|volume=72|issue=4|pages=773–7|journal=Communications in agricultural and applied biological sciences}}</ref> சமையல் சோடாவிற்கு பழையதான நாற்றத்தை உறிஞ்சும் தன்மை உள்ள காரணத்தால் பழைய புத்தக விற்பனையாளர்களுக்கு பழம்புத்தகங்களின் வாசனையை குறைப்பதற்கான நம்பத்தகுந்த வழிமுறையாக இதன் உபயோகம் உருவாகியுள்ளது. <ref>{{cite journal|title=Book Repair for BookThinkers: How To Remove Odors From Books|author=Altman, Gail |date=2006-05-22|issue=69|work=The BookThinker|url=http://www.bookthink.com/0069/69alt.htm}}</ref>
 
===தீ அணைப்பான்===
சோடியம் பைகார்பனேட்டு சிறிய அளவிலான எண்ணெய் வகை தீ அல்லது மின் கசிவினால் ஏற்படும் தீயினை அணைப்பதற்கு பயன்படுகிறது. இத்தகைய தீயின் மீது சோடியம் பைகார்பனேட்டை வீசி எறியும் போது வெப்பத்தின் காரணமாக கார்பன் டை ஆக்சைடானது வெளிவந்து தீயை அணைக்கிறது. <ref name=arm>{{Cite web|url=http://www.armhammer.com/basics/magic|title=Arm & Hammer Baking Soda – Basics – The Magic of Arm & Hammer Baking Soda|last=|first=|date=|website=armandhammer.com|archive-url=https://web.archive.org/web/20090831133032/http://www.armhammer.com/basics/magic|archive-date=31 August 2009|dead-url=y|access-date=30 July 2009}}</ref> இருந்தபோதிலும், இது ஆழமான வாணலியில் ஏற்படும் எண்ணெய் வகைத் தீயினை அணைக்கப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் திடீர் வெளியேற்றம் எண்ணெயை உருக்குலைந்து சிதறச் செய்யும்.<ref name=arm/> சோடியம் பைகார்பனேட்டானது BC வகை உலர் வேதிய [[தீயணைப்பான்]]களில், ABC வகை தீயணைப்பான்களில் பயன்படும் அதிக அரிமானத்தை ஏற்படுத்தக்கூடிய [[டைஅம்மோனியம் பாசுபேட்]]டுக்கு மாற்றுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.சோடியம் பைகார்படே்டின் காரத்தன்மை பர்ப்புல்-கே என்பதைத் தவிர்த்த மற்றுமொரு உலர் வேதித் தீயணைக்கும் காரணியாக உள்ளது. இது வணிகரீதியான சமையலகங்களில் நிறுவப்பட்டுள்ள பேரளவு தீத்தடுப்பு சாதனங்களில் பயன்படுகிறது. இது காரமாக செயல்படக்கூடியதாகவும், எண்ணெய்களின் மீது வலிமை குறைந்த சோப்பாக்குதல் விளைவைத் தரக்கூடியதாகவும் இருப்பதால் எண்ணெய்களின் மீது மெலிதான சோப்பு நுரையை உருவாக்குகிறது.
===அமிலங்கள் மற்றும் காரங்களின் நடுநிலையாக்கல்===
சோடியம் பைகார்பனேட்டு ஒரு [[ஈரியல்பு (வேதியியல்)|ஈரியல்பு]]ள்ள சேர்மமாகும். இது அமிலங்களுடனும், காரங்களுடனும் வினைபுரியும் தன்மை கொண்டது. இது அமிலங்களுடன் தீவிரமாக வினைபுரிந்து CO<sub>2</sub> வாயுவை விளைபொருளாகத் தருகிறது. பொதுவாக, வேதியியல் ஆய்வகங்களில் தேவையற்ற அமிலக்கரைசல்களையும், கீழே சிதறிய அல்லது கொட்டிய அமிலத்தெறிப்புகளை நடுநிலையாக்கவும் பயன்படுகிறது. இதன் [[நடுநிலையாக்கல் (வேதியியல்)|நடுநிலையாக்கல்]] பண்பைச் சார்ந்து பலவிதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, காயம்பட்டு, துன்புறுகின்ற ஒரு படைவீரனின் காயத்திலிருந்து எடுக்கப்படும் எரியும் தோட்டாவிலிருந்து பரவும் [[வெண் பொசுபரசு (ஆயுதம்)|வெண்பாசுபரசை]] மட்டுப்படுத்தும் செயலில் கூட சோடியம் பைகார்பனேட்டு பயன்படுகிறது. <ref>{{cite web|publisher=GlobalSecurity.org|title=White Phosphorus|url=http://www.globalsecurity.org/military/systems/munitions/wp.htm|accessdate=2007-09-26}}</ref>
===மருத்துவப் பயன்கள்===
சோடியம் பைகார்பனேட்டு நீருடன் கலந்து பயன்படுத்தும் போது ஒரு வயிற்றின் அமிலத்தன்மையை நீக்க உதவும் அமிலநீக்கி மருந்தாகப் பயன்படுகிறது. <ref>{{cite web|publisher=Jackson Siegelbaum Gastroenterology|url=http://gicare.com/medication/sodium-bicarbonate/|title=Sodium Bicarbonate|year=1998}}</ref> வயிற்றில் உள்ள அமிலத்துடன் இதன் வினையானது உப்பு, நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைத் தருகிறது.
:NaHCO<sub>3</sub> + HCl → NaCl + H<sub>2</sub>O + CO<sub>2</sub>(வாயு)
 
== மேற்கோள்கள் ==
{{reflist|30em}}
 
[[பகுப்பு:அமில உப்புகள்]]
[[பகுப்பு:காரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_பைகார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது