தி வயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 116:
== கதை ==
=== பருவம் ஒன்று ===
பருவம் ஒன்று பார்க்ஸ்டேல் குற்றக் குழுவைப் பிடிக்கப் பால்ட்டிமோர் காவல்துறை சிறப்புப் பிரிவின் முயற்சிகளைச் சித்தரிக்கின்றது. 13 அத்தியாயங்களைக் கொண்டது. ஏவான் பார்க்ஸ்டேலின் அக்கா மகன் டீஏஞ்செலோ பார்க்ஸ்டேலை ஒரு கொலை வழக்கிலிருந்து பார்க்ஸ்டேல் குழு தப்ப வைக்கிறது. இதனால் கோபம் கொண்ட துப்பறிவாளர் ஜிம்மி மெக்நல்ட்டி, நீதியரசர் டேனியல் ஃபேலானின் ஆதரவை நாடுகிறார். ஃபேலானின் முயற்சியால் பார்க்ஸ்டேல் குழுவை முடக்க லெப்டினன்ட் செடரிக் டேனியல்ஸ் தலைமையில் புதிய சிறப்புக் காவல் பிரிவொன்று உருவாக்கப்படுகிறது. அவர்களது விசாரணைமூலம் பார்க்ஸ்டேல் குழுவின் ஆழமும் அதிகாரமும் புலனாகுகின்றன. அவர்களுக்கு எதிராகச் செயல்படும் கொள்ளைக்காரன் ஓமார் லிட்டிலும் அறிமுகமாகிறான். பார்க்ஸ்டேல் குழு காவல்துறை விசாரணையை எதிர்கொள்ளும் அதே வேளை ஓமாரின் தாக்குதல்களையும் சமாளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றது. பார்க்ஸ்டேல் குழு நகரின் பொதுத் தொலைப்பேசிதொலைபேசி சேவையைப் பயன்படுத்தி குறிமொழியில் தகவல்களைப் பரிமாறுகின்றது. சிறப்புக் காவல் பிரிவு பார்க்ஸ்டேல் ஆட்கள் பயன்படுத்தும் பேஜர் மற்றும் பொதுத் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டுத் துப்பறிகின்றது. பார்க்ஸ்டேல் குழுபற்றிப் பல தகவல்களைச் சேகரித்து மேலும் துருவி விசாரணை செய்யத் துவங்கும் வேளையில் டேனியல்சின் உயரதிகாரிகள் அரசியல் காரணங்களுக்காக விசாரணையை உடனே முடிக்கும்படி உத்தரவிடுகின்றனர். இதனால் ஏவானை ஒரு சிறிய குற்றத்துக்காகக் கைது செய்து அவனையும் வீபே பிரைஸ் போன்ற அவனது அடியாட்கள் சிலரையும் சிறையிலடைக்கின்றனர். ஆனால் ஸ்ட்ரிங்கர் பெல் குற்றச்சாட்டுக்காளாகாமல் தப்பி விடுகிறான். பார்க்ஸ்டேல் குழு அவனது கட்டுப்பாட்டுக்கு வருகிறது. சிறப்புக் காவல் பிரிவும் மூடப்படுகிறது. டேனியல்சுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. மெக்நல்டி படகுக் காவல் படைப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார்.
 
=== பருவம் இரண்டு ===
"https://ta.wikipedia.org/wiki/தி_வயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது