"சிறுநீர்ப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
உடற்கூறு வல்லுநர்கள் சிறுநீர்ப்பையை இவ்வாறு பிரிக்கின்றனர்:.<ref name="Netter"/>
 
* பரந்த [[சிறுநீர்ப்பை|அடிப்புறம்]]
* உடல்
* உச்சி
மூன்று திறப்புகள், இரண்டு சிறுநீர்க்குழாய் துளைகளும் உள்ளக சிறுநீர் புறவழியும் முக்கோண பகுதியை உருவாக்குகின்றன. இது ''நீர்ப்பையின் முக்கோணப்பகுதி'' எனப்படுகின்றது. இந்த துளைகளின் முன்னால் மென்சவ்வு இதழ்கள் உள்ளன; இவை ஒருபோக்கியாக சிறுநீர் மீளவும் சிறுநீர்க்குழாய்களுக்குள் செல்லாமல் தடுக்கின்றன.<ref name="SEER">{{cite web|title= SEER Training:Urinary Bladder|url= https://training.seer.cancer.gov/anatomy/urinary/components/bladder.html|website= training.seer.cancer.gov|language= en}}</ref> இரண்டு சிறுநீர்க்குழாய் புறவழிகளுக்கும் இடையே உயர்ந்துள்ள திசுக்கள் சிறுநீர்க்குழாயிடை முகடு எனப்படுகின்றது.<ref name="Netter"/> இதுவே முக்கோணப் பகுதியின் மேலெல்லையாகும். மென்தசையாலான முக்கோணம் நீர்ப்பையின் அடிப்பாகமாக விளங்குகின்றது.<ref name="Viana">{{cite journal|last1= Viana|first1= R et al.|title= The development of the bladder trigone, the center of the anti-reflux mechanism.|journal= Development|date= October 2007|volume= 134|issue= 20|pages= 3763–9|pmid= 17881488|doi=10.1242/dev.011270}}</ref> இந்தப் பகுதி மென்தசையாக இருப்பதால் நீர்ப்பையின் இப்பகுதியில் சிறுநீர் எளிதாக உள்ளேறவும் வெளியேறவும் வகை செய்கிறது.
 
ஆண்களில், [[சிறுநீர்வழி]]க்கான திறப்பிற்கு வெளியே [[முன்னிற்கும் சுரப்பி]] உள்ளது. இச்சுரப்பியின் நடு மடல், உள்ளக சிறுநீர் புறவழிக்குப் பின்னால் உள்ள சளிச்சவ்வில் சிறிய ஏற்றத்தை உருவாக்குகிறது. இப்பகுதி நீர்ப்பையின் உள்நாக்கு எனப்படுகின்றது; முன்னிற்கும் சுரப்பி பெரிதாகும்போது இந்த அடிநாக்கும் பெரிதாகிறது.
 
பரிவிரிக்குழிக்கு அடியில் கூபகத் தளத்தின் அருகே பூப்பெலும்பொட்டிற்குப் பின்னே நீர்ப்பை அமைந்துள்ளது. ஆண்களில் குதத்திற்குப் பின்னால் குதநீர்ப்பையியப்பையால் பிரிக்கப்பட்டு எருவாய் தூக்கியின் தசைநாண்களாலும் முன்னிற்கும் சுரப்பியின் தசைகளாலும் தாங்கப்படுகிறது. பெண்களில் [[கருப்பை]]க்கு முன்னால் குதநீர்ப்பையியப்பையால் பிரிக்கப்பட்டு எருவாய் தூக்கியின் தசைநாண்களாலும் யோனியின் மேற்பகுதியாலும் தாங்கப்படுகின்றது. நீர்ப்பையின் சுவர் பொதுவாக 3–5&nbsp;மிமீ தடித்துள்ளது.<ref name=Patel2010/> இந்தச் சுவர் விரியும்போது இதன் தடிப்பு 3&nbsp;மிமீக்குக் குறைவாக இருக்கும்.<ref name=Patel2010>[https://books.google.com/books?id=Z4t3dnDR1e8C&pg=PA12 Page 12] in: {{cite book|title= Imaging and Urodynamics of the Lower Urinary Tract|author= Uday Patel|publisher= Springer Science & Business Media|year= 2010|isbn= 9781848828360}}</ref>
==செயற்பாடு==
 
[[சிறுநீரகம்|சிறுநீரகங்களால்]] வெளியேற்றப்படும் [[சிறுநீர்]] சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு பின்னர் சிறுநீர் கழித்தலின்போது வெளியேற்றப்படுகின்றன. சிறுநீர்ப்பையால் பொதுவாக 300-350 மிலி சிறுநீரைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். சிறுநீர் சேரச்சேர, உட்புற நீட்சிகள், ரூகே எனப்படுபவை, தட்டையாகி நீர்ப்பையின் சுவர் விரிவடைவதால் சுவரின் தடிப்பு குறைகின்றது. இது மேலும் சிறுநீரை சேகரிக்க கூடுதல் கொள்ளளவை உண்டாக்குகின்றது. அதே நேரம் உட்புற அழுத்தம் கூடுவதில்லை.<ref>{{cite book |author=Marieb, Mallatt |title=Human Anatomy |edition=5th |publisher=Pearson International |chapter=23 |page=700}}</ref> சிறுநீர்க் கழித்தலை [[மூளைத்தண்டு|மூளைத்தண்டிலுள்ள]] பொன்சு நரம்பணு சிறுநீர்க்கழிவு மையம் கட்டுப்படுத்துகின்றது. <ref name="Purves">{{cite book|last1=Purves|first1=Dale|title=Neuroscience|date=2011|publisher=Sinauer|location=Sunderland, Mass.|isbn=978-0-87893-695-3|page=471|edition=5.}}</ref>
 
==மேற்கோள்கள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2749610" இருந்து மீள்விக்கப்பட்டது