சம்மு காசுமீர் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 87:
[[படிமம்:Kashmir map.jpg|thumb|1909 ஆம் ஆண்டின் ஜம்மு காசுமீர் மாகாணத்தின் வரைபடம்]]
1845 ஆம் ஆண்டில் [[முதலாவது ஆங்கிலேய- சீக்கிய போர்]] வெடித்த போது, போரில் எவ்வித பங்கும் கொள்ளாமல் இருந்த குலாப் சிங், 1846 ஆம் ஆண்டு நடைபெற்ற சொப்ரோன் போருக்குப் பின் இருதரப்புக்கும் அமைதியை கொண்டு வரும் நடுநிலையாளராகவும், ஆங்கிலேய ஆலோசராகவும் மாறினார். இதன் விளைவாக இரண்டு உடன்பாடுகள் ஒப்பு கொள்ளப்பட்டன. முதலாவது ஒப்பந்தத்தின் படி, ஆங்கிலேயர் போரால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு (1.5 கோடி ரூபாய் ) ஈடாக [[லாகூர் மாகாணம்|மேற்கு பஞ்சாப்]] பகுதியைத் தம்வசம் கொண்டனர். இதன் மூலம் [[பஞ்சாப்]] பேரரசு தனது பெருமளவு நிலப்பகுதியை இழந்தது. இரண்டாவது ஒப்பந்தத்தின் படி குலாப் சிங் முன்பு பஞ்சாப் பேரரசைச் சார்ந்த நிலப்பகுதியில் உள்ளடக்கிய [[காசுமீர்]] பகுதிக்கு அரசராகச் சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு ஆக்கப்பட்டார். புதிய காசுமீர் அரசு நிறுவப்பட்டது.<ref name=imperialgazet-gulabsingh /> 1857 குலாப் சிங்கின் மறைவுக்கு பின் அவரது மைந்தன் [[ரன்பீர் சிங்]] மேலும் பல பகுதிகளை வென்று காசுமீர் அரசுடன் இணைத்தார்.
 
 
ரன்பீர் சிங்கின் பேரன் [[ஹரி சிங்]] 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. [[இந்தியப் பிரிவினை]]யின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாக்கிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காசுமீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/1/hi/world/தெற்கு_asia/5030514.stm|title=Quick guide: Kashmir dispute|publisher=BBC News|date=2006-06-29|accessdate=2009-06-14}}</ref> ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்துப் போராடிய காசுமீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுனர் [[மவுண்ட்பேட்டன் பிரபு]]வின் உதவியை நாடினார். காசுமீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.<ref name="stein">Stein, Burton. 1998. ''A History of India''.Oxford University Press. 432 pages. {{ISBN|0-19-565446-3}}. Page 368.</ref> ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காசுமீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாக்கிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது. பாக்கிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விடவே, இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவில்லை.
வரி 193 ⟶ 192:
== போக்குவரத்து வசதிகள் ==
=== வானூர்தி நிலையங்கள் ===
[[ஜம்மு]]<ref>https://www.makemytrip.com/flights/jammu-flight-tickets.html</ref> மற்றும் [[ஸ்ரீநகர்]]<ref>https://www.makemytrip.com/flights/srinagar-flight-tickets.html</ref> விமான நிலையங்கள் வான் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கிறது.
 
=== தேசிய நெடுஞ்சாலைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/சம்மு_காசுமீர்_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது