இலங்கை நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
==நாடாளுமன்றக் கட்டடங்கள்==
{{Politics of Sri Lanka}}
[[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]]க் குடியேற்ற அரசாங்கத்தின் கீழ், [[இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை]], [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]] ஆகியன 1833 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது, இந்த அவைகள் [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள கோர்டன் கார்டன்சிற்கு எதிரில் உள்ள கட்டடம் ஒன்றில் கூடினர். இக்கட்டடம் தற்போது "குடியரசுக் கட்டடம்" என அழைக்கப்படுகிறது. இங்கு இப்போது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. 1930, சனவரி 29 இல் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநர் [[சர்]] ஹெர்பர்ட் ஸ்டான்லி (1927–1931) காலிமுகத் திடலுக்கு எதிரே [[பழைய நாடாளுமன்றக் கட்டடம்|நாடாளுமன்றக் கட்டடத்தைத்]] திறந்து வைத்தார். இங்கு [[இலங்கை அரசாங்க சபை]] (1931-1947), [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை (1947–1972), [[தேசிய அரசுப் பேரவை]] (1972–1977), [[இலங்கை நாடாளுமன்றம்]] (1977–1981) ஆகியவற்றின் அமர்வுகள் இடம்பெற்றன. இன்று இக்கட்டடம் அரசுத்தலைவரின் செயலகமாக இயங்குகிறது.
 
1979 சூலை 4 இல், அன்றைய பிரதமர் [[ஆர். பிரேமதாசா]] கொழும்பில் இருந்து 16 கிமீ கிழக்கே [[கோட்டே]] நகரில் தியவன்ன நதியில் அமைந்துள்ள 12 ஏக்கர் தீவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்க நாடாளுமன்றத்தில் இருந்து அனுமதி பெற்றார். இக்கட்டடம் ஜெஃப்ரி பாவா என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டது. 1982 ஏப்ரல் 29 இல் இக்கட்டடத்தை அன்றைய அரசுத்தலைவர் [[ஜே. ஆர். ஜெயவர்தனா]] திறந்து வைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது