"சமூகவுடைமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
(*திருத்தம்*)
சி (பராமரிப்பு using AWB)
 
'''சமவுடைமை''' அல்லது '''சமூகவுடைமை''' (''Socialism'', சோசலிசம், சோஷியலிசம் அல்லது சோசியலிசம்) என்பது ஒரு அரசியல்-பொருளியல் கோட்பாடு. பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. உற்பத்திக் காரணிகள் (Means of Production) மற்றும் இயற்கை வளங்கள் அரசு அல்லது சமூக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. முக்கிய துறைகள் அரசுடைமையாக இருப்பதையும், சமத்துவத்தை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி, இலாப நோக்கத்தை கொண்டு இயங்கும் முதலாளித்துவ கொள்கைகள், தனி நபர்களிடம் செல்வம் குவிதலை எதிர்த்து அமைகின்றன. தொழிற்புரட்சி மற்றும் முதலாளித்துவம் உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வாக சமவுடமை கோட்பாடு முன்வைக்கப்பட்டது.
 
== பல்வேறு வடிவங்கள் ==
சமவுடைமை என்ற இலக்கை [[மக்களாட்சி]] மற்றும் சுதந்திர அமைப்புகளின் வாயிலாக அடைய வேண்டும் என்று முன்னிறுத்திய கோட்பாடே மக்களாட்சி சார் சமவுடைமை (''Democratic Socialism'').
 
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இக்கோட்பாடு மார்க்சியம் பரிந்துரைத்த, சமவுடைமையை அடைய வழிவகுக்கும், முறைகளான வர்க்கப் போராட்டம் மற்றும் தீவிரத் தன்மை வாய்ந்த புரட்சிகளை பரிந்துரைக்க மறுத்தது. அதிகாரத்துவ ஏகாதிபத்ய அமைப்புகளை எதிர்த்தது. வாக்குகளும் நாடாளுமன்றங்களும் தான் சமூக சீர்திருத்தத்தின் கருவிகளாக இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.
 
=== சந்தை சமூகவுடமை ===
* இலாபத்தை பொது நிதியாக (public finance) மக்கள் நலனுக்கு பயன்படுத்துதல்,
* இலாபத்தை சமூக பங்காக (social dividend) மக்களுக்கே நேரடியாக பகிர்ந்தளித்தல்
போன்ற முறைகளை பரிந்துரைக்கின்றது.
 
== திட்டமிடப்பட்ட பொருளாதார அமைப்பு ==
உற்பத்தி காரணிகளை பொதுவுடமைகளாக வைத்துக்கொண்டு பொருளியல் திட்டமிடுதலின் வழியாக உற்பத்தி மற்றும் பகிர்வை கட்டுப்படுத்தும் அமைப்பு.
 
அனைத்து சமவுடைமை நாடுகளிலும் பயன்படுத்தப்படும் முறை. குறிப்பாக இது [[சோவியத் ஒன்றியம்]] உருவாக்கிய அமைப்பு. [[1930கள்|1930களில்]] ஏற்பட்ட பெருமந்தமும் சோவியத்து உருசியாவின் எழுச்சியும் திட்டமிடுதலின் இன்றியமையாமையை உலகிற்கு உணர்த்தியது. அதன் பின்னர், 'பொருளாதாரத்தில் தலையிடா' கொள்கையை முன் வைக்கின்ற, முதலாளித்துவ நாடுகளும் கூட சிறிய அளவிலான திட்டமிடுதலைப் பயன்படுத்தத் தொடங்கின. திட்டமிடுதல் என்பது சோவியத்து உருசியா உலகிற்கு அளித்த பரிசாக புகழப்படுகிறது.
 
== சமவுடைமை முன்வைக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு வாதங்கள் ==
 
=== முதலாவது பன்னாட்டு அமைப்பு ===
சமவுடைமை கோட்பாட்டின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது பன்னாட்டு உழைப்பாளர் சங்கம் (International Workingmen Association). இது [[அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம்|முதலாவது பன்னாட்டு அமைப்பு]] (''First International'') என்று அழைக்கப்படுகிறது. இருவேறு அணிகளின் கருத்தியல் வேறுபாடுகளின் காரணமாக கருத்து மோதல் ஏற்பட்டது. எனினும், குறுகிய காலத்திலேயே, [[ஐரோப்பா|ஐரோப்பாவின்]] பல்வேறு தொழிலாளர் இயக்கங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உதவியது.
 
=== இரண்டாம் பன்னாட்டு அமைப்பு===
1789 பிரஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டான 1889ல் [[இரண்டாவது அனைத்துலகம்|இரண்டாம் பன்னாட்டு அமைப்பு]] (''Second International'') நடைபெற்றது. [[மார்க்சியம்|மார்க்சிய]] சிந்தனைகளுக்கு ஆதரவு பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. இதில் பல்வேறு சமவுடைமை கட்சிகளை ஒருகிணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.
 
=== உருசிய போல்சிவிக் புரட்சி ===
{{main|ரஷ்யப் புரட்சி 1917}}
1917ல் உருசியாவில் நடைபெற்ற 'பிப்ரவரி புரட்சி'யின் காரணமாக [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலாஸ்]] அரியணையிலிருந்து வேளியேற்றப் பட்டதற்கு மிக முக்கியமாக விளங்கியது சமூகவுடைமை இயக்கங்களே. சார் மன்னரின் வீழ்ச்சிக்குப் பின் கெரன்சிகியின் தலைமையில் தற்கால அரசு அமைக்கப்பட்டது. பின்னர், கெரன்சிகியின் அரசை வீழ்த்தி [[விளாதிமிர் லெனின்]] தலைமையில் போல்சிவிக்குகள் சமவுடைமை கோட்பாடுகளின் அடிப்படையில் அரசமைத்தனர். [[கார்ல் மார்க்ஸ்]] மற்றும் [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] ஆகியோருக்குப் பின்னர் மிக முக்கியமான சமவுடைமை கொள்கையாளராக அறியப்பட்டவர் லெனின்.
 
== சமவுடைமை நாடுகள் ==
 
=== மார்க்சிய-லெனினிய சமவுடைமை நாடுகள் ===
இவை ஒற்றை கட்சி மட்டுமே ஆட்சி செய்யக்கூடிய அமைப்பைக் கொண்ட சமவுடைமை நாடுகள். பிற உலக நாடுகளால் இவை கம்யூனிச நாடுகள் என்று அழைக்கப் பட்டாலும், இவை தங்களை கம்யூனிச நிலையை நோக்கி பயணிக்கும் சமவுடைமை அரசுகளாவே அடையாளப் படுத்துகின்றன.
 
=== பிற சமவுடைமை நாடுகள் ===
இந்நாடுகள் மக்களாட்சி முறையிலான பல-கட்சி அமைப்பை கொண்டிருந்தாலும் தத்தம் அரசியலமைப்புகளில் தங்களை சமவுடைமை அரசுகளாக அடையாளப் படுத்தி கொள்ளும் நாடுகள்.
 
===சமவுடைமையும் மூன்றாம் உலகநாடுகளும்===
 
1917 இல் இரஷ்யா ஐரோப்பாவிலேயே மிகவும் பின்தங்கிய நாடாகக் காணப்பட்டது. ஐரோப்பிய நாடு என்ற அடையாளம் இல்லாமல் இருந்தது. எனினும், இரஷ்ய உளவியல் தன்மைகள், கீழை நாட்டு மாந்தர்களின் பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இரஷ்ய கிறித்தவம் கத்தோலிக்க, சீர்திருத்த கிறித்தவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, பழைமைவாத கிறித்தவத்தைப் பின்பற்றி வந்தது. ஏனெனில், கத்தோலிக்கக் கிறித்தவம் உரோமைப் பேரரசின் ஆட்சியாளர்களைத் தழுவிக் காணப்பட்டது. அதுபோல், சீர்திருத்த கிறித்தவம் நவீன ஐரோப்பிய முதலாளி வர்க்கத்துடன் இணங்கி செயற்பட்டது. பழமைவாத கிறித்தவம் மட்டுமே ரஷ்ய பூர்வீகத்தின் தூய்மையை தன்னகத்தே கொண்டு விளங்கியது. இத்தகைய சூழலில் சமவுடைமைப் புரட்சி நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவே பல்வேறு சமவுடைமையாளர்கள் நம்பினர். <ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/11/20/%3Ffn%3Dw1611201%26p%3D1&ved=0ahUKEwiuiYra-uXUAhVMLo8KHZrVAfIQFghFMAk&usg=AFQjCNEwNlS-nRfaTjIn1MGSwPcqSXRVIQ">{{cite web | url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/11/20/?fn=w1611201&p=1 | title=சோசலிச பாதையில் 100 ஆண்டு பயணம் | accessdate=30 சூன் 2017}}</ref>
 
இரஷ்யாவில் நூற்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழ்ந்து வந்தன. ஜார் மன்னரின் ஆட்சியானது, தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்றார் லெனின். அவர், அக்டோபர் புரட்சியானது அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசிய இனங்களை விடுதலை செய்யும் என்றும் புரட்சியின் போது அறிவித்தார். 1917 டிசம்பர் 31 ஆம் நாள் முடிந்து மறுநாள் புத்தாண்டு அன்று பின்லாந்து நாடு ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனிநாடானது.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750578" இருந்து மீள்விக்கப்பட்டது