மதுரை மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{மதுரை மாநகராட்சி}}
 
 
[[File:Madurai Corporation - Arignar Anna Maligai.JPG|thumb|மதுரை மாநகராட்சி கட்டிடம்]]
வரி 9 ⟶ 8:
 
* 1866: மதுரை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு. அப்போதைய மக்கள் தொகை 41,601. நகரின் பரப்பளவு 2.60 சதுர கிலோமீட்டர்.
 
* 1882: நகராட்சியில் புதிதாக ஆணையாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. முதலாவது ஆணையாளர் அதே ஆண்டு [[மார்ச் 15]] ஆம் தேதி பதவியேற்றார்.
 
* 1885: ஆணையாளர் பதவி நகர்மன்ற உறுப்பினர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பல நகர்மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஆணையாளர்களின் தலைவர் பதவி நகர்மன்றத் தலைவர் என்று மாற்றப்பட்டது. முதலாவது நகர்மன்றத் தலைவராக ராவ் பகதூர் ராமசுப்பய்யர் என்பவர் பதவியேற்றார்.
 
* 1892: நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் 6 பேரை அரசே நியமிக்கும்.
 
* 1921: நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்பட்டது.
 
* 1931: அரசியல் காரணங்களுக்காக நகராட்சிக் குழு (நகர் மன்றம்) கலைக்கப்பட்டது. மாவட்ட உதவி ஆட்சியாளர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
 
* 1933: மீண்டும் அதே நகராட்சிக் குழு (நகர் மன்றம்) செயல்பட அரசு அனுமதித்தது.
 
* 1942: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரித்ததற்காக நகராட்சிக் குழு (மன்றம்) மீண்டும் கலைக்கப்பட்டது.
 
* 1943: நகராட்சிக் குழு (மன்றம்) முழுவதும் மாற்றியமைக்கப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அரசே நியமிக்கும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.
 
* 1948: சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக நகராட்சிக் குழு (நகர் மன்றம்)வுக்குத் தேர்தல் நடந்தது. ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல் இந்த தேர்ந்தெடுக்கப்பட் நகராட்சிக் குழு (நகர் மன்றம்) செயல்படத் துவங்கியது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் 1969 வரை செயல்பட்டனர்.
 
* 1969: நகராட்சிக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 48 நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பெண்கள், மூன்று பேர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
 
* 1971: மதுரை நகராட்சி, மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது.நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாநகராட்சியின் முதல் மாமன்றத் தலைவராக (மேயர்) எஸ்.முத்து தேர்வு செய்யப்பட்டார். பி.ஆனந்தம் மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
* 1974: மேலும் 13 பஞ்சாயத்துக்கள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. நகரிலுள்ள வார்டுகள் 65 ஆக மாற்றம் செய்யப்பட்டன.
 
* 1978: மாநகராட்சிக்கு முதல் முறையாக தேர்தல் நடந்தது. 65 நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் பெண்கள், 4 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
 
* 1991: வார்டு சீரமைப்பு கமிட்டியின் பரிந்துரைகளின்படி மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக மாற்றப்பட்டது.
 
* 1996: மதுரை மாநகராட்சிக்கு இரண்டாவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக ப.குழந்தைவேலு (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) மிசா.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
 
* 2001: மதுரை மாநகராட்சிக்கு மூன்றாவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த செ.ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
* 2006: மதுரை மாநகராட்சிக்கு நான்காவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக தேன்மொழி கோபிநாதன் (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) பி.எம்.மன்னன் தேர்வு செய்யப்பட்டார்.
 
* 2011: மதுரை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின் காரணமாக 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள்,11 கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை 100ஆக மாற்றம் செய்யப்பட்டன.
 
* 2011: மதுரை மாநகராட்சிக்கு ஐந்தாவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக திரு.[[வி. வி. ராஜன் செல்லப்பா]] (அ.தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) [[எஸ். கோபாலகிருஷ்ணன்]] தேர்வு செய்யப்பட்டார்.
 
 
== மேயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது