நேரடி மக்களாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''தூய மக்களாட்சி''' என்றும் அழைக்கப்படும் '''நேரடி மக்களாட்சி''' என்பது, ஒரு வகை [[மக்களாட்சி]] முறையும், [[குடியியல்]] கோட்பாடும் ஆகும். இம்முறையில் [[இறைமை]] பங்குபற்ற விரும்பும் எல்லா மக்களையும் கொண்ட ஒரு அவையிடம் அளிக்கப்பட்டிருக்கும். இம் முறை பயன்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து, இந்த அவை தீர்மானங்களை நிறைவேற்றுதல், சட்டங்களை ஆக்கல், அதிகாரிகளைத் தேர்வு செய்தல் அல்லது நீக்குதல், [[விசாரணை]] நடத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
 
நேரடி மக்களாட்சி, [[சார்பாண்மை மக்களாட்சி]]யினின்றும் வேறுபட்டது. சார்பாண்மை மக்களாட்சியில் இறைமை, மக்களால் தேர்தல் மூலம் சார்பாளர்களாகத் தெரிவு செய்யப்படும் ஒரு குழுவினரைக் கொண்ட அவையிடம் இருக்கும்.
 
சார்பாண்மை மக்களாட்சி முறையைப் பின்பற்றும் நாடுகளிற் சில ஓரளவு நேரடி மக்களாட்சியை வழங்கக்கூடிய மூன்றுவகை அரசியல் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன. இவை மக்கள் முன்முயற்சிக்கு இடமளித்தல், மக்கள் [[கருத்தறியும் வாக்கெடுப்பு]], [[திருப்பியழைத்தல் (அரசியல்)|திருப்பியழைக்கும்]] நடைமுறை என்பனவாகும். இம்மூன்று செயல்பாடுகளிலும் குறித்த சில விடயங்களில் மக்களின் நேரடியான பங்களிப்பு நிகழ்கின்றது. மக்கள் முன்முயற்சி என்பதில் பொதுமக்களில் ஒரு குறித்த எண்ணிக்கையானோர் கையொப்பம் இட்டு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் அது தொடர்பான சில நடவடிக்கைகளை அரசு எடுப்பதற்கு வழி செய்யப்படுகின்றது. மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு என்பது அரசின் குறித்த நடவடிக்கை ஒன்றின் மீது மக்களின் கருத்தைக் கோரும் வழியாகும். பொதுவாக அவ்விடயத்தில் "ஆம்" அல்லது "இல்லை" என்ற வகையிலான இரண்டு விருப்பத்தேர்வுகளில் ஒன்றை மக்கள் தெரிவு செய்வர். இது மக்கள் அரசின் குறித்த ஒரு நடவடிக்கையை ஆதரிக்க அல்லது எதிர்க்க மக்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. திருப்பியழைத்தல் என்பது, தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒருவரது பதவிக்காலம் முடியுமுன்பே அவரைப் பதவியிலிருந்து திருப்பி அழைப்பதற்கு மக்களுக்கு அளிக்கப்படும் ஒரு வாய்ப்பு ஆகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/நேரடி_மக்களாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது