தாராண்மை மக்களாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தேர்தல்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''தாராண்மை மக்களாட்சி''' (Liberal democracy) என்பது [[மக்களாட்சி]] முறையின் ஒரு வடிவம் ஆகும். 21 ஆம் நூற்றாண்டில் இவ்வகை மக்களாட்சி உலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தாராண்மை மக்களாட்சிக்கும், [[பொதுவுடமை]] மக்கள் குடியரசு அல்லது மக்கள் "மக்களாட்சி" போன்ற அரசாட்சி முறை வடிவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. [[நேரடி மக்களாட்சி]], [[பங்கேற்பு மக்களாட்சி]] போன்ற வடிவங்களில் இருந்தும் இது பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றது. தாராண்மை மக்களாட்சி, பல்வேறு [[அரசியலமைப்பு]] வடிவங்களில் அமையக்கூடும். இது, [[ஐக்கிய அமெரிக்கா]], [[இந்தியா]], [[பிரான்சு]] போன்ற நாடுகளைப்போல் ஒரு [[குடியரசு]] அமைப்பில் அமையலாம். அல்லது [[ஐக்கிய இராச்சியம்]], [[எசுப்பெயின்]] போன்ற நாடுகளில் உள்ளது போல் [[அரசியல்சட்ட முடியாட்சி]] வடிவிலும் அமையலாம். இது, [[சனாதிபதி முறை]], [[நாடாளுமன்ற முறை]] அல்லது இரண்டும் கலந்த முறை போன்ற அரசு முறைகளின் கீழும் அமைய முடியும்.
 
 
தாராண்மை மக்களாட்சி என்பதில் உள்ள "தாராண்மை" என்பது, ஆட்சியில், [[அரசியல் தாராண்மையியம்]] என்னும் [[கருத்தியல்|கருத்தியலைப்]] பின்பற்றுவதைக் குறிக்கிறது. தாராண்மை மக்களாட்சிகளில், அரச அதிகாரத்திடம் இருந்து [[தனிமனித உரிமை]]களைப் பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. இது முதன்முதலாக [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தில்]] [[ஓப்சு]] (Hobbes), [[ரூசோ]] (Rousseau) போன்ற [[சமூக ஒப்பந்தம்|சமூக ஒப்பந்தக்]] கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தாராண்மை_மக்களாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது